Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - தாரிகை - 21 - மதி நிலா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - தாரிகை - 21 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2017..

பாலாவின் வருகையை அங்கிருந்த மூவருமே எதிர்பார்த்திடவில்லை..!!

அதிலும், “உங்க அக்கா அப்படி பண்ண ஹண்டரெட் பர்சென்ட் சான்ஸ் இல்லை..”, அவன் தெளித்துவிட்ட வார்த்தைகள் அனைவரையும் புருவம் உயர்த்த வைப்பதாய்..!!

கவினும் நிஷாவும் அவனைத் திகைப்புடனும் வியப்புடனும் பார்த்திட.. பிரஜித்தின் பார்வை இன்னும் விழும் மழைத்துளிகளில்..!!

தந்தை செய்த தவறு மகனை யாரையும் எதிர்கொள்ளவே முடியா நிலையில் தள்ளியிருந்தது..!! தானே கொலை செய்ததுபோல் குற்றவுணர்வு அவனது மனதை கூறுபோடுவதாக..!!

“பிரஜித்..”, அழுத்தமாக பாலா பிரஜித்தை அழைக்க..!!

“எஸ் டாக்டர்.. எங்க அப்பா ஒரு கொலைகாரர்.. மனசாட்சியே இல்லாமல் ஒருத்தரை கொன்னுட்டார்.. ஒரு குடும்பத்தை அநாதை ஆக்கிட்டார்.. இப்ப என்ன அவரைப் பத்தி போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணனுமா..?? நானே கம்ப்ளைன்ட் கொடுக்கறேன்.. போலாம் வாங்க..”, மனதின் உணர்வுகள் யோசிக்காமல பேசவைத்ததை அவனை..

“பிரஜித்.. என்ன பேசற நீ..??”, ஒரே குரலில் நண்பர்கள் இருவரும் அதட்டிட.. அவனின் பார்வையோ மழையில் இன்னும் இன்னும் பிரவேசிப்பதாய்..!!

“நான் இப்ப உன்னை கம்ப்ளைன்ட் கொடுக்கக் கூப்பிடவே இல்லையே பிரஜித்.. நீயா அனுமானம் பண்ணிக்கிட்டா எப்படி..??”, மிகவும் நிதானமாகக் கேட்டிருந்தான் பாலா..

“வேற எப்படி டாக்டர் என்னை நினைக்கச் சொல்லறீங்க..??”, வார்த்தைகளை எடுத்தெறிந்தவனின் கைகளை நிஷா இறுக்கமாக பிடித்திட, “ஐ ஆம் சாரி டாக்டர்.. ஐ ஆம் நாட் இன் அ ஸ்டேட் டூ திங் ரைட்..”, தடுமாற்றமாக..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“எஸ் யூ ஆர் நாட் இன் அ ஸ்டேட்..” பட்டென்று சொன்ன பாலா, “மத்தவங்களுக்கு ஏதவாது ப்ராப்ளெம்ன்னா மட்டும்தான் நீ கரெக்ட்டா திங்க் பண்ணுவியா பிரஜித்..??”, ஒருமையைத் தத்தெடுத்து..

“எஸ் டாக்டர்.. அப்படித்தான் போல.. ஒரு ப்ராப்ளெம்ன்னா நமக்கு யோசனைகள் பல ஆங்கிளில் இருந்து உதிக்குது.. பட் அதுவே நமக்கு வந்துச்சுனா அதை ஹாண்டில் பண்ணத் தெரியறதில்லை.. ரொம்ப எமோஷனலா மாறிவிடுகிறோம்..”, என்ற பிரஜித்தின் குரலில் நிதானம் பிறந்திருந்தது..

“எதுவா இருந்தாலும் முடிவு உன் கையில தான் பிரஜித்.. கண்டிப்பா இந்த விஷயத்தை நான் வெளியில சொல்ல மாட்டேன்.. நிஷாவும் கவினும் கண்டிப்பா சொல்ல மாட்டேன்.. அன்ட் யூ..?? நீ எப்பவும் தப்பான முடிவை எடுக்க மாட்டேன்னு நினைக்கறேன்..”, என்றான் பாலா அழுத்தமாக..

“கண்டிப்பா தப்பா எதையும் செய்ய மாட்டேன் நான்.. என்னால எங்க அப்பாவால பாதிக்கப்பட்ட பேமிலியை அப்படியே அம்போன்னு விட முடியாது.. அதே மாதிரி எங்க அப்பா செஞ்ச தப்பையும் நியாயப்படுத்த முடியாது..”

“தட்ஸ் குட்.. எனிவேஸ் ஏதாவது உங்களுக்கு ஹெல்ப் வேண்டும் என்றால் தயங்காமல் என்னிடம் வரலாம்.. ஐ ஆம் தேர் பார் யூ..”, என்ற பாலா விடைபெற்றுச் செல்ல.. அவ்வளவு யோசனையுடன் அவன் சென்ற பாதையை தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்தது நிஷாவின் கண்கள்..

“நிஷா என்னாச்சு..?? அவர் போறதையே பார்த்துட்டு இருக்க..??”, இது கவின்..

“இவருக்கு எப்படி எங்க அக்காவைப் பத்தி அவ்ளோ ஸ்ட்ராங்கா ஸ்டேட்மெண்ட் கொடுத்தாருன்னு யோசிக்கறேன்..”, என்றாள் யோசனையுடன்..

“உங்க அக்காவைப் பத்தி இவருக்கு நல்லாத் தெரியும்னு நினைக்கறேன்..”, என்றான் பிரஜின் உறுதியாக..

“ஹான்.. அது எப்படி அவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்ற..??”

“அவரோட மூவ்மென்ட்ஸ் வெச்சுத்தான்.. அவர் பேச்சுல அது தெரிஞ்சுது.. அவருக்கும் உன் சிஸ்டர்க்கும் கண்டிப்பா ஏதோ ஒரு லிங்க் இருக்கு..”

“அதெல்லாம் சான்ஸே இல்லடா.. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் செல்விக்காவுக்கு எங்க மாதிரி இருக்கறவங்க.. கவர்மென்ட் அபீஷியல்ஸ்.. அப்புறம் என் பிரெண்ட்ஸ் நீங்க.. இவங்களை மட்டும்தான் தெரியும்..”

“இல்லடா.. நீ செல்விக்கா லைப்ல வரதுக்கு முன்னாடி.. எல்லாம் என் கெஸ்தான்..”, என்ற பிரஜித், “அவரைப் பத்தி அப்புறம் ஆராய்ச்சி செஞ்சுக்கலாம்.. எனக்கு இப்ப செல்விக்காவைப் பார்த்தால் எங்க அப்பா விஷயத்துல ஓரளவிற்கு ஏதவாது ஐடியா கொடுப்பாங்கன்னு தோனுது.. நீங்க இரண்டு பேரும் என்ன நினைக்கறீங்க..??”, யோசனையுடன்..

“உனக்கு அது சரிவரும்னு தோணுச்சுனா.. நம்ம செல்விக்காவைப் பார்க்கப் போகலாம்..”, கவின் தனது கருத்தைத் தெரிவித்துவிட்டு நிஷாவைப் பார்க்க..

“எஸ்.. இன்னைக்கு ஈவெனிங் நேரா எங்க வீட்டுக்குப் போயிடலாம்..”, என்றவள் பிரஜித்திடம், “இந்த விஷயத்தைப் பத்தி நீ உங்க அம்மாட்ட சொல்லிடறது நல்லதுன்னு நினைக்கறேன் பிரஜி..”, தடுமாற்றமாக..

“அம்மாக்கிட்டயா..?? தாங்கமாட்டாங்க நிஷா..”, உடனடியாக மருத்திருந்தான் பிரஜித்..

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Madhi Nila

Completed Stories
On-going Stories
  • Thaarigai (Updated weekly on Saturday evenings)
Comments  
# RE: தொடர்கதை - தாரிகை - 21 - மதி நிலாAdharvJo 2018-12-08 21:33
achacho appo andha rail accident nadandhadha miss facepalm anyway safe thana so :cool: Also happy to see her :dance: (hope correct ana track la guess panuren :P ) So Nathan is the culprit in both d cases 3:) Praji pavam pa.

Samu no pulambing miss aunty-k onnum agama parthukonga :yes: Indha pookarar y selvi kitta poga vendamn sonnaru :Q: sabba mudiyala miss unga suspense :D Tempo nala maintain panuringa :hatsoff: As always rombha lively update vasu :clap: :clap: curious to read the next update. Thank you and keep rocking.
# RE: தொடர்கதை - தாரிகை - 21 - மதி நிலாmahinagaraj 2018-12-08 17:28
வழக்கம் போல சூப்பர் மேம்... :clap: :clap:
தாரிகை தான் தரண்யன்-னா.. :Q: :Q:
தாரிகையின் தோற்றம்,தெளிவு அருமை..
கவி,பிரஜி,நிஷா இவங்க நண்பு சூப்பர்..
பாலா.. தாரிகையை பற்றி முழுதும் தெரிந்ததவரோ... :Q:
:thnkx:

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top