(Reading time: 11 - 21 minutes)

“ஏன் ஒரு நாள் சீக்கிரம் வந்ததது பிடிக்கலையோ உங்களுக்கு..??”, இருந்த எரிச்சலையும் கோபமும் ஒரு இயலாமையைக் கொடுத்திருக்க அதை அப்படியே அம்மாவின் மீது கொட்டிருந்தான் அவன்..

“டேய்.. உன்க்கிட்ட நான் என்ன கேட்டா நீ என்ன பதில் சொல்ற..??”, அவரும் கொஞ்சம் இன்ஸ்டன்ட்டாக எகிறிட.. அப்பொழுதுதான் தான் நிதானத்தை இழந்துவிட்டது புரிந்தது அவனுக்கு..

“ப்ச்.. சாரிம்மா.. பயங்கர டென்ஷன் எனக்கு காலையில இருந்து..”, சமாதானமாக அவன் சொல்ல..

“ஆமா.. பாதி நாள் காலேஜுக்குப் போறதில்லை.. அப்படியே போனாலும் க்ளாசைக் கட்டடிக்க வேண்டியது..”, நக்கலாக குரல் கொடுத்தார் நாதன்..

“நீங்க வந்து பாத்தீங்க நான் காலேஜைக் கட்டடிச்சதை..??”, நக்கலாய் அவன் கேட்க..

“இதுகூடத் தெரியாதாக்கும் எனக்கு.. எல்லாம் தெரியும்டா நீ கட் அடிக்கறது.. அந்தப் பையன் பேரென்ன.. ஹான்.. கவினு.. அந்தத் தறுதலையையும்.. அப்புறம் அந்த ****** கூட்டிட்டு சுத்தறது..”, அவர் வார்த்தைகளை சிதறவிட..

பாய்ந்திருந்தான் பிரஜித்..!!

“அவ என்னோட பிரெண்ட்.. அவளைப் பத்தி ஒரு வார்த்தை தப்பா வந்துச்சு அப்பான்னுகூட பார்க்கமாட்டேன்..”, அத்தனை ஆக்ரோஷமாய்..

“டேய் அப்பாடா.. என்னடா பண்ற..??”, பதற்றமாக அம்மா தடுக்க..

“அவர் என்ன வார்த்தை சொன்னார் பார்த்தீங்களாம்மா..?? இப்படி சொள்ளலாம்மா..?? அவளும் நம்மளை மாதிரிதான்.. இனி அவளைப்பத்தி ஏதாவது தப்பாப் பேசட்டும் அவ்ளோதான்..”, என்றான் இன்னும் கோபமாக...

“அந்த **** க்காக என்னையவே எதிர்த்துப் பேசறியா நீ..??”, கையை ஓங்கியிருந்தார் நாதன்..

அவ்வளதுதான்.. மொத்தப் பொறுமையும் வடிந்துபோனது பிரஜித்துக்கு..!!

“ஒரு கொலைகாரன்க்கிட்ட வேற என்ன எதிர்பார்க்கமுடியுமாம்..??”, ஒரே வரியில் அவரை விளம்பரப்படுத்தியிருந்தது மகனின் வார்த்தைகள்..!!

“என்னடா சொன்ன..??”, தந்தை அவனுக்குத் தெரிந்துவிட்டதோ என்ற அதிர்ச்சியில் கத்த.. தாயோ ஒரு நடுக்கத்துடன்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கப்சிப்பென்றானது பிரஜித்தின் இதழ்கள்..!! இனி எதுவும் நான் சொல்லமாட்டேன் என்பதாக..!!

“என்னங்க என்ன சொல்றான் இவன்..?? ஏதோ கொலை..”, நாதனின் சட்டையைப் பிடித்துக்கொண்டு அம்மா கேட்க..

“அவன் ஏதோ உளறுகிறான்.. அதைப்போய் பெருசா எடுத்துட்டு எனக்கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்க நீ..”, அம்மாவின் மீதும் கையோங்கிருந்தார் நாதன்..

இதுவரை நாதனுக்கும் அம்மாவுக்கும் சண்டை வரும்தான்.. ஆனால் இதுவரை ஒருமுறைக்கூட கையோங்கியதில்லை.. இன்று அதையும் செய்துவிட்டார் பிரஜித்தின் தந்தை..

அம்மாவை தன்னுடன் சேர்த்துக்கொண்ட பிரஜித்.. தனது ஒட்டுமொத்தக் கோபத்தையும் ஒன்றுதிரட்டி நாதனை தள்ளிவிட.. அவர் நேராக சென்று விழுந்த இடம் சக்திவேலின் காலடி..!!

அப்பொழுதுதான் சக்திவேல் நாதனின் வீட்டிற்குள் நுழைந்திருந்தார்..!!

எழுந்து நிற்க முடியாமல் எழுந்து நின்ற நாதனுக்கு சக்திவேலைக் கண்டதும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!!

“நாங்க உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்..”, சுற்றி வளைக்காமல் சக்திவேல் சொல்ல.. தன் தலையில் கைகளால் அடித்துக்கொண்டார் அம்மா.. பிரஜித்தோ அவமானம் தாங்க முடியாமல் தலை குனிந்துகொள்ள..

“எதுக்கு..?? நான் என்ன பண்ணேன்..??”, எந்தவொரு பதற்றமும் இல்லாமல் நாதன் கேட்க..

“உங்க வீட்டுத் தோட்டத்துல பத்துக்கி வெச்சிருக்கீங்களே.. கோவில் சிலைகள்.. அதுக்காக..”, என்ற சக்திவேல் சுற்றியும் பார்க்க.. அம்மாவை அணைத்தபடி இறுகிய நிலையில் நின்றிருந்தான் பிரஜித்..!!

ழைய எண்ணங்கள் மனதை முழுமையாக வியாபித்திற்க இருளை வெறித்தபடி நின்றிருந்தாள் செந்தாரிகை..!!

சமுத்திராவின் தாயாரை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ச் செய்ததும்.. கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வருவதாய் சொன்ன தாரிகையின் கால்கள் தனது வாழ்க்கையின் பாதையை மாற்றிப்போட்ட அந்த இடத்திற்கு வந்து நின்றது..!!

மறக்கவே முடியாத இடமது..!! இறப்புக்கும் வாழ்விற்குமான நூலிழையில் அவள் அல்லாடிய இடம்..!!  

இப்பொழுது நினைத்தால் சிரிப்பாகத் தோன்றும் விஷயம் அப்பொழுது கொடுமையாக..!!

கண்களை மூடிக்கொண்டு சிலைபோல் அவள் அங்கேயே நின்றுவிட..!!

வெகு வேகமாய் தனது ராட்சச உருவத்தைத் தூக்கிக்கொண்டு அவளைத் தாண்டிச் சென்றது ஒரு ரயில்..!!

அன்றைக்கு உடலில் தோன்றிய அதே நடுக்கம் இன்றும்.. ஆனால் மனதில் அன்றைய விரக்தி இல்லை.. திடம் மட்டுமே..!!

வாழ்வில் சாதித்தே தீருவேன் என்ற திடம்..!!

உருவெடுப்பாள்..

Episode # 20

Episode # 22

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.