(Reading time: 10 - 19 minutes)

கிட்டத்தட்ட 12000கிலோ மீட்டருக்குமேல் ஆழத்தில் இருக்கும் போது சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் எப்படித் தப்பிக்கப்போகிறேன். பத்மினி சில விநாடிகள் யோசித்தாள், பின்னர் ஒன்று இந்த இடத்தில் இருந்து தப்பிககும் வழியை முயலவேண்டும் அல்லது, இந்த துரோகம் நடக்கும் இடத்தோடு அழிந்து போக வேண்டும். மேற்கொண்டு ஏதேனும் ஆதாரங்கள் சிக்குகிறதா என்று கவனித்தாள். இடதுபுறம் உள்ள சிறு கருவியில் அந்த சுரங்கப்பாதைக்கு வெளியே கடலின் அமைதி புலப்பட்டது.

த்மினி எங்கே என்ற கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் ப்ரியன் அமைதியாய் இருந்ததை பரத் விரும்பவில்லை என்பது அவனின் கோபக் கண்களிலேயே தெரிந்தது.

உன்னைத்தான் கேட்கிறேன் ப்ரியன் பத்மினி எங்கே ?

எனக்குத் தெரியாது பரத்.... இங்கே யார் என்னைக் கேட்டு ஏதும் செய்யறாங்க, வேலைக்குன்னு வந்தா அதை தவிர மற்ற எல்லாத்தையும் தெளிவா செய்யறாங்க என்றவனின் பார்வை உத்ராவின் மேல் உஷ்ணமாய் பதிந்தது. 

கேட்ட கேள்விக்கு பதில் இங்கே நான் இல்லாத சமயத்தில் நீதானே பொறுப்பு இந்த இரவு வேளையில் அவள் எங்கே சென்றிருக்க முடியும் அல்லது பகலில் இருந்தே அவளைக் காணுமா ? 

உங்கள் கேள்வி எதற்கும் என்னிடம் பதில் இல்லை பரத், சிமெண்ட்தளங்கள் வந்திருக்கிறது என்று போன் வந்ததும் நான் பணி நடைபெறும் இடத்திற்கு செல்லும் முன் இந்த கம்ப்யூட்டர் அறையில் மற்ற பணிகளின் நடவடிக்கைகளை கவனித்து கொள்ளும் படி நான் பத்மினியிடம் கேட்டுக்கொண்டேன். அவளும் ஒப்புக்கொண்டாள் உங்களிருவரைப்பற்றி கேட்டதற்கு நீங்கள் வெளியே சென்றிருக்கிறிர்கள் என்றேன் அவளும் பதில் பேசாமல் விறுட்டென்று சென்றுவிட்டாள். நான் ஆட்டோமேட்டிக் கேமிரா புரோஜெக்டரை ஆன்செய்துவிட்டு கிளம்பிவிட்டேன் எனக்கு வேறு எதுவும் தெரியாது வரும்போது பத்மினி இங்கே இல்லை. நடந்த தவறுக்கு நான் உங்களைத்தான் காரணம் சொல்வேன் பரத். வந்த வேலையைச் செய்யவிடாமல் நீங்கள் இதோ இவளிடமும் பத்மினியிடம் நட்பு பாராட்டியதால் தான் இந்த சிக்கலே வந்தது. என்னால் வேலையைப் பார்க்க முடியுமா அல்லது பத்மினியின் பின்னால் அலைய முடியுமா ?

ப்ரியன் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் உத்ரா பரத்திடம் வந்தாள்.

பரத் .....பத்மினி எங்கே அவளும் நீரஜாவைப் போல ஏதாவது தவறான முடிவு எடுத்திருப்பாளா ? நீங்கள் அவளை ரொம்பவும் கோபித்துக் கொண்டீர்கள் அவளும் மனம் உடைந்து போயிருந்தாளே ! 

ச்சீ....அப்படியிராது,,, பத்மினி அத்தனை கோழையில்லை கோபத்தில் சற்றுநேரம் எங்காவது சுற்றிவிட்டு வந்துவிடுவாள் நீ உடைமாற்றிக் கொண்டு ஓய்வெடு நான் பார்த்துக்கொள்கிறேன்.

உத்ரா தன் அறைக்கு வந்தபிறகும் மனம் ஒரு நிலையில் இல்லை பத்மினியை நினைத்து கவலையாய் இருந்தது. எங்கே சென்றிருப்பாள், அவளின் இந்த மறைவிற்கு நானும் பரத்தும் தான் காரணமா ? 

உன்னை புத்திசாலி என்று நினைத்திருந்தேன் நீ இத்தனை முட்டாளாய் இருப்பாய் என்று நான் நினைக்கவில்லை அத்தனை எச்சரித்தும் நீ பரத்துடன் சுற்றிவிட்டு வந்திருக்கிறாய் எதற்கு பரத்தை தவிர இங்கே ஆண்களே இல்லையா பணக்காரன் என்றதும் ஏன் இப்படி பாய்ந்து போய் விழுகிறீர்கள் அவனை நம்பி விழுந்தது நீரஜா இன்று பத்மினி நாளைக்கு நீதான் உத்ரா, ச்சீ கண்ணெதிரே இத்தனை தவறுகள் நடந்தும் என்னால் தட்டிக்கேட்கவும் முடியவில்லை அதை சீர் செய்யவும் முடியவில்லை, நான் சொல்லசொல்ல கேட்டாகமல் அந்த பத்மினி பரத்துடன் நெருங்கிப் பழகினாள் இப்போது அவளையும் காணவில்லை, 

பத்மினி காணாமல் போனதாக சொல்லப்படும் பரத் என்னுடன் தான் இருந்தார் ப்ரியன் வெறும் வாய் வார்த்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு நீங்கள் பரத் மேல் குற்றம் சாட்டுவது தவறு, பரத்தான் தவறு செய்தார் என்று ஆதாரத்துடன் நிரூபியுங்கள் நான் அவரை விட்டு விலகிவிடுவதோடு செய்த தவறுக்கு தண்டனையும் வாங்கித்தரப் போராடுகிறேன் அந்த பலம் உங்களுக்கு இருக்கிறதா அல்லது நீங்கள் 

நெருப்பு சுட்டுவிடும் என்று எச்சரித்தால் கை வைத்து பார்த்துக்கொள்கிறேன் என்கிறாய் எங்கேடோ கெட்டு ஒழி.......! ப்ரியன் வெறுப்போடு கணிப்பொறி அறைக்குள் புகுந்து கொண்டான்.

உத்ரா மிகச்சோர்வாய் கட்டிலில் விழுந்தாள்.

ணிப்பொறியின் அறைக்குள் நுழைந்த ப்ரியன் வேகமாய் தன் முஷ்டியைக் குத்திக்கொண்டான்.

ச்சே... இவனுக்குன்னு அமையுது பாரு, உத்ராவை மட்டும் அவனை அடைய விடக்கூடாது எப்போவாது கண்ணயர்ந்த நேரத்தில் அவளை என் வசமாக்கிக் கொள்ளவேண்டும், சத்யாவிடம் இருந்து இமெயில் வந்திருந்தது. நிக்கோலஸ்க்கு அந்த சுரக்கப்பாதையில் யுரேனியத்தின் உருக்கும் செயல்பாடுகளைப் பார்க்கவேண்டுமாம் அதன் புட்டேஜ்களை அனுப்ப சொல்லிக் கேட்டு இருந்தான் ப்ரியன் தனக்கென ஒதுக்கப்பட்ட அந்த கருவியில் சுரங்கப்பாதையின் செயல்பாடுகளை கண்டறிய உயிர்ப்பித்த போது அது செயலிலந்து இருந்தது,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.