தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்? - 04 - சுதி
சுவாதி தான் என்ன நினைக்கிறோம் என்று புரியாமல் திக் பிரம்மை பிடித்தவள் போல் நின்று கொண்டு இருந்தாள்.பக்கத்து வீட்டு மாமி வந்து அவள் நிற்பதை பார்த்து
என்ன மா ஏன் இப்படி தனியாக நிற்கிறாய் என்று கேட்டு வீட்டிற்கு அழைத்து சென்றார்.நாட்கள் தன் போக்கில் செல்ல, அர்ஜூன் தன் காதலை சொல்லி ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று இரவு தூக்கம் வராமல் மாடியில் நடந்து கொண்டிருந்த அர்ஜூனுக்கு யாரோ ரோட்டில் பதுங்கி பதுங்கி செல்வது கண்ணில்பட்டது.யார் இது இந்த நேரத்துக்கு ஒரு வேலை திருடனாக இருக்குமோ எதற்கும் போய் பார்ப்போம் என்று இவனும் வேகமாக இறங்கி அந்த உருவத்தை தொடர்ந்து சென்றான்.
அந்த உருவம் மறைவாக ஒரு மரத்தின் பின்புறம் சென்று சிறிது நேரம் கழித்து வெளிபட்ட போது பார்த்த அர்ஜூனுக்கு வேர்த்து விறுவிறுத்து போய்விட்டது.என்ன காரணம் என்று பார்கிறீர்களா அது ஒன்றும் இல்லை அவன் பார்த்தது பேயை.ஆமாம் தலையை விரித்து போட்டு கொண்டு வெள்ளை நிற சாரி கட்டி கொண்டு ஜல் ஜல் என்று கொழுசு சத்தத்துடன் ராமின் வீட்டிற்கு அருகில் சென்று நிலம் அதிர நடந்து,விகாரமாக சிரித்தது.
அர்ஜூனோ ராஜா சொன்ன விஷயத்தை நினைத்து திகிலடைந்து இருந்தான்.அதாவது சுவாதிக்கு ஒரு அக்கா இருந்ததாகவும் அவள் இறந்து அவளின் ஆவி இங்கு சுத்தி கொண்டு இருப்பதாகவும் அவளை நைட் சிப்ட் முடிந்து வருபவர்கள் பார்த்திருப்பதாகவும் அதனால் இரவு நேரங்களில் வெளியே எங்கும் போக வேண்டாம் என்று எச்சரித்து இருந்தான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
பேயாவது ஒன்றாவது என்று கிண்டல் செய்து சிரித்தது நினைவுக்கு வந்தது.அப்போ பேய் எல்லாம் உண்மையில் இருக்கிறதா,இல்லை இது யாரோ செய்யும் வேலை நாமே ஒரு நிமிடம் பயந்துவிட்டோமே இது யார் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன்.யாராக இருக்கும் என்று கூர்ந்து பார்த்தவன் முகம் சரியாக தெரியாமல் இருப்பதால் ஓரமாக இருந்து கவனிப்போம் அசந்த நேரம் பார்த்து நேரில் நிற்போம் அப்போது அது யார் என்று கண்டு பிடித்து விடலாம் என்ற முடிவுடன் ஓரமாக மறைந்து நின்றான்.
ராம் வா கல்யாணம் பண்ணிக்கலாம்,அதற்குதானே ஆசைபட்டாய் வா..... என்று கத்தி விகரமாக சிரித்தது.ஆமாம் நான் வர கூடாது என்று நம்பூதிரியிடம் தாயத்து எல்லாம் கட்டியிருக்கிறாய் போல,அதனால் தான் என்னால் உன் அருகில் வர முடியவில்லையா?என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு என் தங்கையுடன் நிச்சயம் பண்ண வேண்டும் என்று சொன்னாயாம் ஏன் எனக்கு என்ன குறை என்று கேட்டு மீண்டும் அந்த வீடே அதிரும் வண்ணம் சிரித்துவிட்டு, என்றாவது ஒரு நாள் உன் கையில் இருக்கும் தாயத்து கீழே விழும் அன்று உன்னை என்ன செய்கிறேன் பார்.என்று சொல்லிவிட்டு, நான் மீண்டும் வருவேன் என்று சத்தமாக சொல்லிவிட்டு மீண்டும் அதே மரத்தை நோக்கி நடந்து வந்தது.
உஷார் ஆன அர்ஜூன் தானும்அந்த மரத்தின் பின் சென்று நின்று கொண்டான்.யார் இப்படி இவனை பயமுறுத்துவது இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்று யோசித்து கொண்டு இருந்தவனின் அருகில் அந்த சத்தம் கேட்கவும் கொஞ்சம் பயந்துடனே இருந்தான்.
அந்த உருவம் ராமின் வீட்டைவிட்டு ஏன் இவ்வளவு தூரம் வந்து இப்படி செய்கிறது என்று எண்ணியவனின் கையின் மேல் விழுந்தது பேயாக வேஷம் போட்டவர் வைத்திருந்த ஒட்டு முடி.
இது தான் சமயம் என்று எண்ணிய அர்ஜூன் அந்த உருவத்தின் பின் பக்கமாக சென்று இடது கையால் வயிற்றின் மேல் பகுதியை அழுத்தியும் வலது கையால் சத்தம் போடாமல் இருக்க வாயை அடைத்தும் இருக்கினான்.
யார் நீ எதற்காக இப்படி வேஷம் போட்டு வந்து ஊரை ஏமாற்றுகிறாய் என்று அதிகாரமாக கேட்டான்.
அவன் கையில் சிக்கியிருந்த உருவம் முதலில் திகைத்து அவனிடம் இருந்து தப்பிக்க போராடிகொண்டு இருந்தது. உருவத்தின் தப்பிக்கும் எண்ணத்தை உணர்ந்தவன் மேலும் இருக்கிய போது கைகளில் வித்தியாசமான உணர்வு ஏற்படவும் தன்னுடைய எண்ணத்தை உறுதி செய்து கொள்ள தன் கைகளை எடுத்துவிட்டு முன் பக்கமாக திருப்பி முகம் பார்க்க எண்ணி கைகளை கொஞ்சம் தளர்த்தினான்.
இரும்பு போன்ற அவன் பிடி தளர்ந்தவுடன் தன்னை மீண்டும் அந்த கைகள் பிடிக்காத வண்ணம் துள்ளி குதித்து விலகி நின்றாள் சுவாதி.
எதிர் பாராமல் இது மாதிரியான சூழ்நிலையில் சந்தித்த இருவருமே திகைத்துதான் போனார்கள்.முதலில் தன்னை சுதாரித்து கொண்ட அர்ஜூன் சுவாதியின் கைகளை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு நடக்க ஆரம்பித்தவன்,அவன் தங்கி இருக்கும் வீட்டிற்குள் வந்துதான் கையை விட்டான்.
அவளை முறைத்து கொண்டே ஓங்கி ஒரு அறை விட்டான்.
அறிவிருக்காடி உனக்கு எதற்கு இப்படி செய்தாய்?இந்த விஷயம் மட்டும் அவனுக்கு தெரிந்தது பிரச்சனை உனக்குதான்.ஏன் இப்படி செய்தாய்?என்று அவளின் இரு தோள்களிலும் கையை வைத்து உழுக்கினான்.