(Reading time: 36 - 72 minutes)

ஒவ்வொரு முறை சுவாதியை பெட்டில் பார்க்கும் போதும் அந்த ராமை தன் கையால் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதை தடுக்க முடியாமல் போனது.அப்போது தான் உணர்ந்தான் நிஜ காதல் எது நிழல் எது என்று.சுவாதியை இரத்த வெள்ளத்தில் பார்த்த போது வாழ்வே முடிந்தது போன்ற எண்ணம் தோன்றியதே ஆனால் மாலதி இறந்த செய்தி கேட்டு சக மனிதனாக அவளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தானே தோன்றியது நான் பார்த்தது மாலதியாக இருக்கலாம் பழகியது என் சுவாதியுடன்தான்.அவள் தான் என் வாழ்க்கை என்று தெளிவான முடிவெடுத்தான்.

ஒரு மாதம் ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு வந்தவளை வீட்டின் வெறுமை முகத்தில் அடித்தது.அங்கு ஹாஸ்பிட்டலில் தன்னையே சுற்றி சுற்றி வந்து கவனித்த அர்ஜூனின் நினைவு வந்தது.எதற்காக இப்படி கவனிக்கிறார்.என்னை தொந்தரவு செய்யதீர்கள் என்று எத்தனை முறை திட்டியிருப்பேன்,என்னை நர்ஸாக நினைத்து கொள் என்று செய்தானே,ஏன்அஜூ ஏன் இப்படி செய்கிறீர்கள்.நான் கஷ்டபட்டு உங்களையும்,உங்கள் நினைவுகளையும் மறக்க நினைக்கிறேன்.நீங்கள் உங்கள் கவனிப்பாள் என்னை மறக்க விட மாட்டிகிறீர்கள் என்று தன் அறையில் அழுது கொண்டு இருந்தவள் ஆனால் அஜூ என் இந்த பலவீனம் உங்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்வேன் என்று தனக்குள் கூறி கொண்டாள்.

 அஜூ என் மனம் உங்களிடம் தடுமாறி நிற்கிறது என்ற விஷயம் உங்களுக்கு தெரிந்தாள் என்னைபற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்.நீங்கள் ஒரு டாக்டர் வேலையைதான் செய்தீர்கள்,என் நிலையில் யார் இருந்தாலும் நீங்கள் அவர்களை கவனிப்பீர்கள்.ஆனால் அந்த விஷயம் எல்லாம் மூளைக்கு தெரிகிறது உங்களை நேசித்த இதயத்திற்கு தெரியவில்லையே என்று புலம்பியவளுக்கு,அவள் மயக்கத்தில் இருக்கும் போது அர்ஜூன் பேசியது நினைவு வராமல் போனது விதியின் சதியே.........

நாட்கள் அதன் போக்கில் செல்ல ராமின் மீது மாலதி கொலை வழக்கு,சுவாதி மற்றும் லட்சுமியின் கொலை முயற்சி என பல குற்றத்தின் அடிப்படையில் ஆயுள் தண்டனை வழங்கபட்டது.ஜெயிலில் கூண்டு புலியாக இருந்த ராம் அந்த சுவாதியை பலி வாங்க தன் கையாட்களின் மூலம் சுவாதியை கடத்தி மும்பையில் தனக்கு தெரிந்த புரோக்கரிடம் விற்க சொன்னான்.எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்க கூடாது.உன் வாழ்வை நாசமாக்குகிறேன் என்று கருவி கொண்டான்.

ராம் சொன்னதற்கு ஏற்ப அவனின் கையாட்கள் நேரம் பார்த்துகொண்டிருந்தனர்.அந்த நாளும் விரைவில் வந்தது. கோவிந்தனை அன்று அவர்கள் அளவுக்கு அதிகமாக குடிக்க வைத்து வீட்டில் வந்து விடுவது போல் வந்து அவள் சாப்பிட வைத்திருந்த உணவில் போதை மருந்தை அவளுக்கு தெரியாமல் கலந்துவிட்டு வீட்டிற்கு வெளியே காத்திருந்தனர்.அப்போது அவர்களில் ஒருவன்

டேய் மருது இது தப்புடா பொம்பள புள்ள பாவம் சும்மாவிடாதுனு சொல்வாங்க என்று சொன்னான்.

டேய் அதெல்லாம் பாத்த காசு பாக்க முடியாது.இனிமேல் பின் வாங்கவும் முடியாது.அந்த ராம் ஒரு அடிப்பட்ட பாம்பு நாம செய்யலனாலும் வேற யாராவது வச்சி செய்யதான் போறான்.

அது மட்டும் இல்லாம நமக்கு விஷயம் தெரிஞ்சதால நம்மையும் சும்மா விட மாட்டான்.அதனால பாவம் கூவம்னு உளறாம வா அந்த மரத்துகிட்ட மறஞ்சு நிப்போம்.அந்த மருந்து வேலை செய்ய இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று இருவரும் மறைந்து நின்று கொண்டனர்.

சாப்பிட பிடிக்காமல் தன் அறையில் நடந்து கொண்டிருந்த சுவாதிக்கு மனம் பாரமாக இருந்தது.இருக்காத பின்னே அவள் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்ததில் இருந்து அர்ஜூன் அவளிடம் பேச முயற்சிக்கிறான்.இவள் அவனுடன் பேசாமல் தவிர்த்து கொண்டே இருந்தாள்.இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி தவிர்க்க முடியும் அன்று ஒருநாள் கோவிலில் கையை பிடித்து தடுத்து பேசியது போல் பேச நினைத்தால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தவள் மணி பத்தரை என்று காட்டவும் சரசக்கா சமைத்ததை கொஞ்சமாவது சாப்பிட்டு வைப்போம் இல்லை என்றால் அவர்கள் வருத்தபடுவார்கள் என்று தன் அறையில் இருந்து வெளியில் வந்து இரண்டு இட்லியை சாப்பிட்டுவிட்டு தூக்கம் வராமல் இருந்தவள் மழைவருவது போல் மண் வாசனை வரவும் மூச்சை நன்கு இழுத்து சுவாசித்து மாடியில் கொஞ்ச நேரம் நிற்போம் என்று மாடிக்கு சென்றாள்.

மாடியில் சிறிது நேரம் நின்று வேடிக்கை பார்த்தவள் பயத்தில் முகம் வெளிறி நின்றாள்.ஆம் அந்த இருவரும் இவர்கள் வீட்டை பார்த்து கொண்டிருப்பது அந்த அரை இருட்டில் கவனித்தாள்.யார் இவர்கள் ஏன் இங்கு என்று யோசித்தவளுக்கு அந்த மழை காற்றிலும் வேர்த்து மயக்கம் வருவது போல் இருந்தது.

தூரல் வேகமாக போட ஆரம்பிக்கவும் அவர்கள் ஓரமாக ஒதுங்கி நிற்பதும் தெரிந்தது.நேரம் ஆகஆக கைகள் எல்லாம் தன் பலத்தை இழந்து எங்கோ பறப்பது போல் உணர்ந்தவள்.தனக்கு என்னவோ நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.