Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 07 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 07 - சசிரேகா

en vazhve unnodu thaan

விடிந்தது

காலையில் கதவு தட்டும் ஓசைகேட்டு மெல்ல எழுந்தாள் யாமினி. தரையில் ஆதித்யவர்மன் இல்லாததைக் கண்டு சட்டென சுற்றி முற்றி பார்த்தாள். அவனோ ஜன்னல் வழியாக எப்போதோ வெளியே சென்றிருந்தான். அலுப்பாக எழுந்தவள் போர்வையை விலக்கி விட்டு காலை தரையில் வைக்க காலில் ஏதோ ஒரு பொருள் தட்டுபடவும் அது என்ன ஏதுவென பார்த்தாள். ஆதியின் செல்போன் அங்கு இருப்பதைக் கண்டு அவசரமாக எடுத்தவள் அதன் பேலன்சையை பார்த்தாள். 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்திருந்தான் அதுவும் நேற்று செய்திருந்தான். அதைக் கண்டு மெல்ல யோசித்தாள் யாமினி

”ஓ நேத்து மாடியில அவன் ஃபோனை நான் கிண்டல் செஞ்சதுக்காகவே உடனே ரீசார்ஜ் செஞ்சாப்லயா. எப்படியோ எங்கப்பாவை கைக்குள்ள வைச்சிட்டு ஆட்டமா போடற இரு, நீ என் வீட்டுக்கு வருவல்ல அப்ப உன்னை பார்த்துக்கறேன்” என சொல்லும் போதே மறுபடியும் கதவு தட்ட உடனே சென்று கதவை திறந்தாள். வெளியில் பாட்டியும் சுமித்ராவும் இருக்கவே அவர்களிடம்

”என்ன பாட்டி இங்க வந்திருக்கீங்க ஏதாவது க்ளு கிடைச்சதா”

என அவள் கேட்கவும் இருவரும் உள்ளே வந்து பார்த்தனர். அவளையும் பார்த்துவிட்டு

”என்னம்மா நேத்து சந்தோஷமா இருந்தீங்களா” என சுமித்ரா சந்தேகமாக கேட்கவும்

”இல்லை அத்தை அவர் மேல இருக்கற பழி போனாதான் என்கிட்ட வருவார் போல” என்றாள் சோகமாக

”என்னம்மா சொல்ற” என அதிர்ச்சியுடன் கேட்ட சுமித்ராவிடம் யாமினியோ

“ஆமாம் அத்தை நேத்து எதுவுமே நடக்கலை, நான் கிட்டப்போனா அவர் விலகிப் போறாரு, உடனே எங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணி கொடுத்துட்டாரு அப்பாவும் என்னை திட்டினாரு”

”ஏன் உங்கப்பா திட்டனும், அவருக்கு ஆதியை பிடிக்கலையா” என பாட்டி கேட்கவும் அவரிடம்

”அப்படியில்லை பாட்டி, நல்ல நாள் பார்க்காம கல்யாணம் ஆனதால சென்னைக்கு ஆதியை கூட்டிட்டு வந்ததும் நல்ல நாள் பார்த்து ஜோசியம் பார்த்து அப்புறம் சாந்தி முகூர்த்தம் வெச்சா நல்லதுன்னு அப்பா நினைக்கிறாரு பாட்டி”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”அட ஆமா இதை நான் மறந்துட்டேன், சரிம்மா உங்கப்பா சொன்னதும் சரிதான் நல்ல நாள் பார்த்துதான் எல்லாம் செய்யனும், அவர் இஷ்டப்படியே செய்யட்டும்” என பாட்டி சொல்ல அதற்கு யாமினி

”பாட்டி ஆதி எங்க”

”ஏன்மா என்ன விசயம்”

”அவரோட ஃபோனை என் ரூம்ல விட்டுட்டு போயிட்டாரு, யாருக்காவது தெரிஞ்சா வம்பு அதான்”

”கொடு நான் கொடுத்துடறேன் நீ ரெடியாகி வாம்மா” என பாட்டி சொல்லிவிட்டு இருவரும் வெளியே சென்றுவிட அவளும் கதவை சாத்திவிட்டு கட்டிலை பார்த்து ஏக்கமாக பெருமூச்சு விட்டவள் குளிக்கச் சென்றாள். குளித்துக் கொண்டிருக்கும் போதே பாத்ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டு யாமினி ஒரு நிமிடம் திகைத்து

”ஆதி” என்றாள்

”ம்”

”என்ன வேணும்” என்றாள்

மீண்டும் கதவு தட்ட மெல்ல சிறிதளவு கதவு திறந்தவள் அவனைப் பார்க்க அவனோ கையில் அவளது மாற்றுத் துணியை வைத்துக் கொண்டு நின்றிருந்தான்

”என்ன வேணும் உங்க செல்போன் பாட்டிகிட்ட இருக்கு” என கோபமாக கத்த அவனோ

”ம்” என தலையாட்டினான்.

அவளது துணியை நீட்ட ஒன்றும் புரியாமல் அதை வாங்கிக் கொண்டு கதவைச் சாத்தியவள்

”என்னாச்சி இவனுக்கு ஏதோ சொல்ல வந்திருக்கான் போல, அதான் வெளிய வரச்சொல்றான் சரி என்னென்னு கேட்போம்” என நினைத்தவள் வேகமாக ரெடியாகி வெளியே வர அவன் அமைதியாக கட்டிலில் அமர்ந்து கையில் ஏதோ பேப்பரை வைத்திருந்தான். அவனிடம் வந்தவள் ஆசையாக

”என்ன விசயம்” என்றாள்

”அவளிடம் அந்த பேப்பரை நீட்டவும்

”ஓ லவ் லெட்டரா” என ஆசையாக சிரித்துக் கொண்டே கேட்கவும் அவளை கோபமாக பார்த்தவன் அந்த பேப்பரை அவளிடம் திணித்துவிட்டு ஜன்னல் வழியாக வெளியே சென்றுவிட்டான். அவன் சென்றதும் பேப்பரை பிரித்துப் படித்தாள். அழகான கையெழுத்தில் ஆதி எழுதியிருந்தான்.

”நேத்து பௌர்ணமிங்கறதால இன்னிக்கு கோயில்ல குலதெய்வ பூஜையிருக்கு, வீட்ல சொந்தக்காரங்க அங்காளி பங்காளின்னு எல்லாரும் இருப்பாங்க, நீ ரூமை விட்டு வெளிய வந்துடாத, வீட்லயே இரு என் ரெண்டாவது அத்தை நிர்மலாவும் வருவாங்க, நீ பாட்டுக்கு கோயிலுக்கு வந்து பிரச்சனையில மாட்டிக்காத. பார்க்கறவங்க உன் புருஷன் எங்க, அவன் பேரு என்னன்னு ஆரம்பிச்சி உன்னை விடாம கேள்வி கேட்பாங்க, நீ பொய் சொல்லமுடியாம திணறிடுவே, அப்புறம் வசமா நாம மாட்டிக்குவோம், இந்த வீட்டை தாண்டினா உன்னை நான் சென்னைக்கு அனுப்பிடுவேன், எதையாவது சொல்லி வீட்லயே இரு, இதைப்பத்தி நான் பாட்டி அம்மாகிட்ட பேசிட்டுதான் வந்தேன் அவங்களும் இதுக்கு சரின்னு சொல்லிட்டாங்க” என எழுதியிருக்கவே அவளுக்கு சிரிப்பே வந்தது.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 07 - சசிரேகாsasi 2018-12-18 07:59
Quoting madhumathi9:
:lol: hai sasi.how r u? Sorry romba naalaaga ennudaiya phonelerunthu comment panna mudiyala? So indraikku marubadiyum muyarchi seithu paarthen. Emoji varave illai.oruvaaramaaga try pannipaarthu vittuvitten.ippo comment seiya mudigirathu. I'm happy.comment panna mudiyavillaiye thavira veru ondrum illai.but ella kathaiyaiyum padithuviduven.eppavum pol anaivarum romba nalla ezhuthi kondu irukkireenga.nice epi. :thnkx: :thnkx: :thnkx: to all. (y)

ஹாய் மது வெல்கம் ஐ மிஸ் யூ அன்டு யுவர் கமெண்ட்ஸ் சடன்னா நீங்க காணாம போகவும் எனக்கு கஷ்டமா போச்சி. நீங்க திரும்பி வந்துதுல என் பிரெண்ட்ஸ் கூட ஹாப்பி. என்னுடையை கதையை நீங்க படிச்சீங்களா நன்றிம்மா முடிந்த போன கதையை படித்து 2 வரிகள் கமெண்ட் தந்தால் மிகவும் மகிழ்வேன். என் நண்பிகளுக்கும் சேர்த்து இது ஒரு விண்ணப்பம் :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 07 - சசிரேகாmadhumathi9 2018-12-18 11:48
(y) ok thanthu vidalaam.time kidaikkum podhu kodukkiren.naanum reply padikkamal romba varuthama irunthathu.thodarbu vittu ponathupol irunthathu.now happy :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 07 - சசிரேகாmadhumathi9 2018-12-17 19:56
:lol: hai sasi.how r u? Sorry romba naalaaga ennudaiya phonelerunthu comment panna mudiyala? So indraikku marubadiyum muyarchi seithu paarthen. Emoji varave illai.oruvaaramaaga try pannipaarthu vittuvitten.ippo comment seiya mudigirathu. I'm happy.comment panna mudiyavillaiye thavira veru ondrum illai.but ella kathaiyaiyum padithuviduven.eppavum pol anaivarum romba nalla ezhuthi kondu irukkireenga.nice epi. :thnkx: :thnkx: :thnkx: to all. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 07 - சசிரேகாmahinagaraj 2018-12-17 16:11
அச்சோ சூப்பர்... :clap: :clap:
யாமினி குழந்தைன்னு நினைச்சா என்னல்லாம் பன்னு பாருங்க.. :o :eek: :grin: :clap:
நாரதனின் கலகம் நன்மையே.. :yes: யாமினியின் கலகமும் நன்மையே..
ஆதி,யாமினி பன்னரது எல்லாம் க்யூட்.. :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 07 - சசிரேகாSAJU 2018-12-17 15:19
YEPAAAAAAAAAAA NARATHARKALGAM NANMAIYIL MUNDEETHAA SARI
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 07 - சசிரேகாAdharvJo 2018-12-17 12:33
facepalm achacho bheem boy no tears ;-) sabba ivalo enquiry seithum innum oru solution kedaikalai but adhukula family members kula oru puyal adikum pole irukke madam ji :Q: anyway aunties avadhu adhi-a namburangale :cool:
Nice update sasi ma'am :clap: :clap: Adhi basakar miratunale vishyam therindhu kolalame :Q:
yam's aunty-a nala brain wash panitinga indha age la avanga test tube ellam thevaya :o anyway adhi-k oru thambhi ya :D pramadham :P Adutha varam varapora gala epi padika waiting. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 07 - சசிரேகாsaaru 2018-12-17 07:59
Nice update
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top