(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 38 - தேவி

Kaathalana nesamo

ஷ்யாம் மித்ரா இருவரிடமும் பேசிவிட்டுத் தங்கள் அறைக்குச் சென்ற ராம் அங்கே மைதிலி ஏதோ யோசனையோடு அமர்ந்து இருப்பதைக் கண்டு அவள் அருகில் சென்றான்.

“மிது, என்ன யோசனை?

“ஷ்யாம், மித்ரா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சோம்.  அதப் பற்றித் தான் யோச்சிட்டு இருக்கேன்”

“அதைப் பற்றி யோசிக்க என்ன இருக்கு?

“ஷ்யாம் மித்ராவை நன்றாக புரிந்துக் கொண்டவன், இன்னும் அவளை சரியாகக் கையாளக் கூடியவன் என்று எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது அவனின் சில நடவடிக்கைகள், நாம் எண்ணியது போல் இல்லையோ அப்படின்னு தோணுது ராம்”

“அப்படின்னு நாமா சொல்ல முடியாது மிது. ஷ்யாமும் காரணம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டான்.”

“இருக்கலாம்பா. ஆனால் இவன் நினைத்த விஷயம் நடக்கும் முன், மற்றவர்கள் இவனைப் பேசுமளவிற்கு வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது”

“அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது மிது. ஷ்யாம் மித்ராவைக் கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களைப் போல் மாற்றிக் கொண்டு வருகிறான்.

“அது எனக்கும் புரியுது ராம். இன்றைக்குக் கூட நாம் இதுவரை செய்யாத ட்ராவல்ஸ் பிசினஸ் பக்கம் ஷ்யாம் மித்ராவை ஈடுபடுத்துவது போல் தெரிகிறது. ஆனால் இதை நாம் புரிந்து கொள்வது போல் மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டுமே. முக்கியமாக மித்ரா உணர்ந்து கொள்கிறாளா என்று தான் எனக்குக் கவலை”

“கவலை தேவை இல்லைன்னு தான் எனக்கு தோணுது மைதிலி. மித்ராவிடம் நல்ல மெச்யுரிட்டித் தெரிய ஆரம்பிச்சு இருக்கு. அவர்கள் பிரச்சினைகளை கையாளும் பக்குவம் அவளுக்கு இருக்கிறது”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஹ்ம்ம். அதற்கு ஷ்யாம் வாய் விட்டுப் பேச வேண்டுமே. “

“ஏன் வேறே என்ன செய்வானாம்?

“அது சரி. உங்க வாரிசாச்சே. சொல்லாமலே புரிஞ்சிக்கணும்னு நினைச்சான்னா?

“இப்போ எதுக்கு என்னை இழுக்கிற மிது டார்லிங். நம்மக்குள் முதலில் இருந்த பிரச்சினை தவிர , வேறே எப்போவாவது நான் அந்த மாதிரி நடந்து இருக்கேனா?

“இப்போ மட்டும் என்ன வாழுதாம்? உங்க முகத்தைப் பார்த்து நானா நாலு தடவை கேட்டதுக்கு அப்புறம் என்ன பிரச்சினைன்னு சொல்வீங்க? இல்லாட்டா வாயே திறக்கிறது கிடையாது.”

“ஹ.. நீ கேட்டா நான் சொல்றேன் தானே”

“அது என்னவோ உண்மைதான். பழைய மாதிரின்னா கேட்கக் கூட முடியாது.”

“சரி. சரி. இப்போ நம்ம பிரச்சினைய விடு. ஷ்யாம், மித்ராவும் சீக்கிரம் சரி ஆகிடுவாங்க. இப்போ கொஞ்சம் சிரியேன்”

“ஏனாம்?

“இல்லை. நீ யோசிக்கிறேன்னு எக்ஸ்ப்ரெஷன் கொடுத்தியே. அதப் பார்க்க முடியல”

“யு.. ரொம்பத்தான். உங்க மூஞ்சிக்கு என் முகம் எவ்வளவோ நல்லா தான் இருக்குது”

“எஸ். டியர். நல்லாத்தான் இருக்கு. அதனால ப்ளீஸ் ..” என்றபடி மைதிலியின் காதிற்குள் ஏதோ சொல்ல, மைதிலியோ முகம் சிவக்க ராமிற்கு பதில் அளித்தாள்

சில நாட்களாக ஷ்யாமிற்கு ஏற்பட்டு இருந்த சில மன உளைச்சல்கள் அவனை மித்ராவிடமிருந்து தள்ளி இருக்கவைத்தது. ஆனால் இன்று அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியாமல் தவித்த சில மணி நேரங்களும், சரவணனிடம் மித்ரா பேசிய விதமும் அவளை அள்ளி அனைத்துக் கொள்ள ஆவலாக இருந்தது. ஆனால் வெளி இடம் என்ற காரணத்தால் தன்னை அடக்கிக் கொண்டான்.

ஹாஸ்பிடலில் இருந்து போன் வந்தபோது மித்ரா எப்படி அங்கே சென்றாள்? அவள் என்ன புரிந்து கொண்டாள் என்ற யோசனைதான் ஷ்யாமிற்கு. ஆனால் அங்கே சரவணனைக் கண்டதும், அது எல்லாம் பின்னால் போய் விட, காரிலும் மித்ராவிடம் அதைப் பற்றியேக் கேட்டான்.

அவளின் பதிலில் திருப்தியானபின் , அவளைத் திரும்பிப் பார்க்க, அவளின் முகம் கண்டு சிரிப்பு வரவே, தன்னைக் கட்டுப் படுத்தி, வீட்டிற்குச் சென்றுப் பேசலாம் என்று இருந்தான்.

தங்கள் அறைக்குச் சென்ற போது கூட, மித்ராவிடம் என்ன பேசுவது? அவள் எப்படிப் புரிந்து கொள்வாள் என்ற யோசனைதான் ஷ்யாமிற்கு. அதனால் தான் அவள் முதலில் ரெப்ரெஷ் செய்து வரும் வரை காத்து இருந்தான்.

ஷ்யாம் தன்னை ரெப்ரெஷ் செய்து வெளியில் வரும்போது, மித்ராவின் குரல் கேட்கவே, எங்கே என்று பார்த்தான்.

அவள் வழக்கம் போல் வின்னியோடு இருக்கவே, வேகமாகச் செல்ல ஒரு எட்டு வைத்தவன், அவள் சொல்வதைக் கேட்டு அப்படியே நின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.