(Reading time: 14 - 27 minutes)

“சரி. அந்த சரவணன் எப்படி அங்கே வந்தான்? அதுவும் இல்லாமல் அங்கே என்னவோ ஏற்கனவே உனக்கு சொன்னதா சொன்னானே? அது என்ன?

“நீங்க ரேஸ்லே கலந்துகிட்டு அடிபட்டு வந்து ரெஸ்ட் எதுத்துட்டு , செக்கப் போனோம் இல்லியா? அப்போ நான் மருந்து வாங்கப் போன போது நீங்களும் சேகர் அண்ணாவும் பேசியதை ரெகார்ட் செய்துட்டு வந்து எங்கிட்ட போட்டுக் காமிச்சான்?

“ஒ. காட். அது உன்கிட்டா இருக்கா? என்று கேட்க, அவள் ஆமென்று தலையசைத்தாள். அதைப் போட்டுக் காட்டச் சொல்லியவன் , அதைக் கேட்ட பின்பு அவன் முகம் கோபத்திலும்,ஆத்திரத்திலும் சிவந்தது.

“ப்ளேடி இடியட் . இவ்ளோ கீழ்த்தரமானவனா அந்த சரவணன். நாங்க பேசினதில் ஒரு சின்ன பிட் மட்டும் எடுத்து அத உனக்கும் போட்டுக்  காட்டி இருக்கானா, அவன் பக்கா அயோக்கியனா இருப்பான் போலே? சரி. அதை ஏன் நீ எங்கிட்ட கேட்கலை?

“நான் அதை நம்பவில்லை. அப்படியே எதாவது பேசி இருந்தாலும், அது என்னைப் பற்றி இருக்காதுன்னு நினைச்சேன்.

“அப்புறம் எப்படி உனக்கு சந்தேகம் வந்தது?

“சுமி கூப்பிட்டு அந்த ரிபோர்ட்ஸ் வாங்க வர சொன்னா இல்லியா. அப்போ தான் அந்த ரிபோர்ட்ஸ் பார்த்தப்போ எனக்கு சந்தேகம் வந்தது”

“அது வெறும் ப்ளட் டெஸ்ட் ரிபோர்ட் தானே. அதில் ஏன் உனக்கு சந்தேகம் வந்தது?

“ரிபோர்ட் பார்த்து எனக்கு சந்தேகம் வரலை. அதை ப்ரிஸ்க்ரைப் பண்ணின  டாக்டர் பார்த்து தான் எனக்கு சந்தேகம்.

“ஓ.. “ என்று மட்டும் கூறியவன், மேலே சொல்லுமாறு கூறினான்.

“சேகர் அண்ணா பேர் போட்டு இருந்தா எனக்கும் ஒன்னும் தோணிருக்காது. ஆனால் சைகியாட்ரிகிட் டாக்டர் பேர் பார்க்கவும் ஒரு மாதிரி பதட்டமா இருந்தது. அன்னிக்கு பூரா எனக்கு இதே சிந்தனை தான். உங்ககிட்டே நேரடியா கேட்க எனக்குப் பயமாவும் , தயக்கமாவும் இருந்துச்சு. “

“எதுக்குப் பயம் ?

“அந்த சரவணன் நீங்களும், டாக்டரும் பேசினதை ரெகார்ட் பண்ணிப் போட்டு காண்பிச்சுட்டு, அவன் சொன்னது உன்னைப் பைத்தியம் பட்டம் கட்டி வெளியில்  அனுப்பப் போறாங்க. அதோட உங்க அம்மா, அப்பா போய் உங்க வீட்டில் சண்டைப் போடுவாங்க. பிறகு உனக்கு டிவோர்ஸ் வாங்கிடுவாங்க அப்படின்னு சொன்னான்”

இதைச் சொல்லும்போது மித்ராவின் குரல் தழுதழுத்தது. அவளை உணர்ந்தவனாக , அவளின் கைப்பற்றி ஆறுதலாக வருடினான்.

“அந்த சரவணன் சொன்ன போது எனக்கு ஒன்னும் தோணலை. லூசு மாதிரி ஏதோ உளறிட்டு இருக்கன்னு தான் நினைச்சேன். இதைப் பார்த்த பிறகு என்னால் அப்படியே விட முடியலை. மனசுக்குள்ளே ஒரு பயமும், தவிப்புமா இருந்துது. இதைப் பற்றி யார் கிட்டே கேட்கறதுன்னு யோசிச்சப்போ, எனக்கு அஷ்வின் அண்ணா தான் நினைவிற்கு வந்தாங்க. அப்போ தான் அவங்க கிட்டே போன் பண்ணிப் பேசினேன்”

“அஷ்வின் கிட்டே நீ என்ன கேட்டே?” என்று ஷ்யாம் கேட்க, அன்றைக்கு போனில் பேசியதை அப்படியே நினைவு கூர்ந்தாள்.

“ஹலோ அண்ணா” என்று மித்ரா அழைக்கவும்,

“ஹாய்.. மித்ரா குட்டி, என்னடா இந்த டைம் கால் பண்ணிருக்க? என்று அவன் கேட்கவும் தான் மணியைப் பார்த்தவள், நள்ளிரவு நெருங்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்தாள்.

“சாரின்னா. தூங்கிட்டியா?

“இல்லைடா. நீ இந்த டைம்லே தூங்கிருப்பியேன்னு தான் கேட்டேன்?

“ஹ்ம்ம்.” என்று மட்டும் கூறியவள் அதற்கு மேல் பேசாமல் தான் இருந்தாள்.

அஷ்வினே “என்னம்மா, ஏதோ பேச வந்திட்டு ஒன்னும் பேசமால் இருக்க? என்ன விஷயம்? என்று கேட்டான்.

என்னதான் அண்ணன் என்றபோதிலும் , எப்படிக் கேட்க என்று தயங்கினாள். அவனை விட்டால் வேறு யாரிடமும் என் சந்தேகம் தீர்த்துக் கொள்ள முடியாது என்று உணர்ந்தவளாக

“ப்ளட் டெஸ்ட் எதுக்கு எடுப்பாங்க?

“எல்லா நோய்க்குமே எடுப்பாங்க.

“சைகியாட்ரிக் டாக்டரும் எடுக்கச் சொல்வாங்களா?

“ஹ்ம்ம். அவரோட பேஷன்ட் ஹெல்த் கண்டிஷன் தெரிஞ்சிக்க எடுக்கச் சொல்லுவாங்க?

“இந்த ரிபோர்ட் நார்மல்ன்னு வந்தால் மேற்கொண்டு ட்ரீட்மென்ட் பண்ண மாட்டாங்க இல்லியா?

“அப்படிக் கிடையாது மித்ரா. இந்த ரிபோர்ட்லே எதாவது இஸ்யுஸ் இருந்தால், முதலில் அதை சரிபண்ணிட்டு, அதுக்கு பிறகு அவங்க மனநலம் தொடர்பா ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க”

“அப்போ ஒரு பொண்ணுக்கு இந்த மாதிரி ட்ரீட்மென்ட் கொடுத்ததா காண்பிச்சா, டிவோர்ஸ் கொடுத்துருவாங்களா?

இப்போது மித்ராவின் குரலில் ஏற்பட்டு இருந்த மாற்றத்தைக் கண்டு கொண்டவனாக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.