(Reading time: 14 - 27 minutes)

“பாரு வின்னி. இந்த அத்து வர வர ரொம்ப மோசம். சாயந்திரம் அந்த லூசு பேசியதுக்கு என்னைத் திட்டறாங்க. அப்புறம் என்னடான்னா பாட்டைப் போட்டு என்னைப் பார்க்கிறாங்க. அப்படி அவங்க பார்க்கும்போது எனக்கு என்னவோ மாதிரி இருக்குடா. எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. ஒரு மாதிரி படபடன்னு வந்துது. அதை ஒரு வழியா சமாளிச்சு வீட்டிற்கு வந்தா, எங்க வீட்டு வில்லிங்க வந்து வச்சு செஞ்சுட்டு போயிட்டுதுங்க. இது எல்லாம் போதாதுன்னு இன்னைக்கு ராம் மாமா, அத்தை எல்லார் கிட்டேயும் வேறே மாட்டினேன். நல்லவேளை அவங்க ரெண்டு பேரும் திட்டாமல், அட்வைஸ் பண்ணதோடு நிப்பட்டிட்டாங்க. சரி இன்னைக்கு ரூமில் அத்தான் நல்லா மண்டகப் படி தான் நடத்தப் போறாங்க. அதுக்கு நாம இப்போவே தயார் ஆகிப்போம்”

மித்ராவின் பேச்சைக் கேட்ட ஷ்யாமிற்கு முதலில் சிரிப்பு வந்தது. அதோடு அவள் வின்னியிடம் பேசும் அழகில் அவன் மனம் மயங்க ஆரம்பித்தது. அவள் மேலும் என்ன பேசுகிறாள் என்று ஆவலோடு கவனித்தான்.

“வின்னி . எனக்கு இப்போ எல்லாம் ஷ்யாம் அத்தான் என்கூடவே இருக்கணும்னு தோணுதுடா. அவங்க ஏன் என்கிட்டேர்ந்து விலகிப் போறாங்கன்னு கஷ்டமா இருக்கு. ஒரு சில நேரம் “டேய் ஷ்யாமா.. ஏண்டா இப்படி இருக்கன்னு?” கேட்டுடலாம்னு தோணுது. ஆனால் ஏதோ தயக்கமா இருக்கு. ஷ்யாமிற்கு என்னை சின்ன வயசிலேர்ந்தே பிடிக்கும்னு எனக்குத் தெரியும். இப்போ அவங்க மனைவியா, என்னை எந்த அளவிற்குப் பிடிக்கும்னு தெரியலைடா. ஷ்யாமிற்கு ஒருவேளை நல்லா திறமைசாலியான பொண்ணு தான் பிடிக்குமோ? அத்தை, மாமாவோட கட்டாயத்திற்காக தான் என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டாங்களோன்னு தோணுது. இதை எல்லாம் ஷ்யாம் அத்தான் கிட்டே நேரடியா கேட்கணும்தான் நினைக்கிறேன். கேட்டு எப்படி பதில் வருமோன்னு கொஞ்சம் பயமாவும் இருக்கு.

என்னடா இத்தனை நாள் அத்தான், அத்துன்னு கொஞ்சிகிட்டு இருந்தவ, இப்போ ஷ்யாம் அப்படின்றாளேன்னு பாக்கறியா? அத்தான்னு கூப்பிடுறது நல்லா தான் இருக்கு. ஆனால் அதை விட ஷ்யாம்னு கூப்பிட எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. “ என்றவள்,

“என்ன இன்னுமா அத்தான் ரெப்ரெஷ் பண்ணிட்டு வரலை? டேங்க்லே தண்ணி காலியான தான் வருவாரோ? “ என்று கேலி செய்தபடி மீண்டும் தன் வின்னிக்குள் செல்ல,

ஷ்யாம் கதவோரம் நின்று இருந்தவன், அறைக்குள் சென்று மியூசிக் போட்டு விட்டு அவளிடம் நெருங்கி அவளை அணைத்தான்.

ஷ்யாமின் மண்டகப்படியை எதிர்பார்த்து இருந்த மித்ராவிற்கு அவனின் அணைப்பு ஆச்சர்யத்தையே அளித்தது.

தன்னுடைய பெரிய விழிகளால் அவனை நிமிர்ந்து பார்க்க, அவளின் விழிகளில் கட்டுண்ட ஷ்யாம் மீண்டும் அவளின் விழிகளை முத்தமிட்டு, இதழ் முத்தம் கொடுத்தான்.

இம்முறை சற்று அழுத்தமாகவே கொடுத்து இருக்க , இருவருக்கும் மூச்சு வாங்கியது. அவளை விலக்கி நிறுத்தியவன், மித்ராவைத் தூக்கிக் கொண்டு தங்கள் படுக்கைக்கு வந்து அவளை விட்டான். மித்ரா குனிந்த தலை நிமிரவில்லை.

“ரித்து “ என்றழைக்க, மித்ரா ஷ்யாமை முறைத்தாள்.

“ஏன் முறைக்கிற?

“இங்கே நாந்தான் இருக்கேன். யாரையோ ரித்துன்னு சொல்றீங்க?

“அட என் அறிவு பொண்டாட்டியே. என்னோட செல்ல மிது தான் இப்போ ரித்து ஆகிட்டாங்க”

மித்ரா ஏன் என்பது போல் பார்க்க,

“அப்பாவிற்கும், பிள்ளைக்கும் யார் மிதுன்னு கூப்பிடறதுன்னு போட்டி வந்துடக் கூடாதுன்னு தான் “

“இவ்ளோ நாள் அப்படிதானே கூபிட்டீங்க?

“அப்பா முதல் தடவை சொல்லும்போதே, இந்த பேர் யோசிச்சு வச்சுட்டேன் ரித்து குட்டி. என் அத்தை மகள் எப்போ என் மனைவியா மாறுகிறாளோ அப்போ உன்னை இப்படிக் கூப்பிடலாம்னு நினைச்சு இருந்தேன்”

இப்போது மித்ரா நன்றாகத் தலை குனிந்து கொள்ள, அவளின் முகம் பார்த்தவன் மென்மையாக சிரித்தவன்.

“ரிதுமா, உனக்கு கொடுக்க வேண்டிய மண்டகப் படி எல்லாம் தனியா வட்டிப் போட்டு பைசல் பண்ணிக்கறேன். இப்போ எனக்கு வேறே வேலை இருக்கு. அதுக்கு முன்னாடி நாம சில விஷயங்களைப் பேசிக்கலாமா?

என்று கேட்டான். மித்ராவிற்கும் மனதை உறுத்திக் கொண்டு இருந்ததால் சரி என்று தலையசைத்தாள்.

“உனக்கு சில சந்தேகங்கள் இருக்குன்னு எனக்குத் தெரியும். அதை நான் கிளியர் பண்றேன். அதுக்கு முன்னாடி ஹாஸ்பிடல் போகணும்னு உனக்கு ஏன் தோனுச்சு? என்ன காரணம்? அதுவும் உங்க அம்மா வீட்டுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு போயிருக்க?”

அவனை முறைத்தபடி “காரணம் நீங்க தான்.” என்றாள்.

“நானா?

“ஆமாம் நீங்க தான். நேற்றைக்கு என்ன சொன்னீங்க? என் மேலே நம்பிக்கை இல்லைனா உன் அம்மா வீட்டிற்குப் போன்னு சொன்னீங்க தானே.?

“ஹேய். அது ஏதோ கோபத்தில் வந்த வார்த்தை தாண்டி.”

“எனக்கு என்ன தெரியும்? சரி உங்களுக்கு இவ்ளோ கோபம் வருதுன்னா, என் மேலே என்ன தப்புன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அப்போ தான் இந்த டெஸ்ட் பற்றி நியாபகம் வந்தது. சரி அதில் ஏதோ எனக்குப் பிரச்சினை. அதைச் சொல்ல முடியாமல் எங்கிட்ட இப்படி நடந்துக்கரீங்கன்னு நினைச்சேன். அதான் டாக்டர் கிட்டே விவரம் கேட்கலாம்னு போனேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.