Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காதல் இளவரசி – 21 - லதா சரவணன் - 5.0 out of 5 based on 2 votes
Change font size:
Pin It

தொடர்கதை - காதல் இளவரசி – 21 - லதா சரவணன்

kadhal ilavarasi

ரத்திற்கு மிகுந்த மனவேதனையாக இருந்தது. உத்ராவிடம் தன் காதலை சொல்லி அவளும் ஒப்புக்கொண்டதை கொண்டாட முடியாமல் இதென்ன இப்படி பத்மினி காணாமல் போயிருக்கிறாள்

ஏற்கனவே நீரஜாவின் மறைவு வேறு இப்போது பத்மினி சொல்லிவைத்தாற்போல் இந்த இரண்டு பெண்களும் நான் அறியாமல் என்னதான் ஆயிற்று

இருவருமே தைரியமானவர்கள், எதையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்கள் இந்த ஒற்றுமைகளோடு இப்படி தொலைந்துபோவதும் சேரத்தானா வேண்டும்.

கடவுளே நீரஜாவிற்கு நேர்ந்ததைப் போல பத்மினிக்கும் எதுவும் நேர்ந்துவிடக் கூடாது நான் இப்போது எங்கே போய் அவளைத் தேடப்போகிறேன்.

அந்தமானில் காவல்துறையில் ஒரு தலைமைஅதிகாரி நன்றாகப் பழக்கம் இங்கே அந்தமானிற்கு பவளப்பாறைகள் பற்றிய ஆய்வுக்கு வரும்போது, நிறைய உதவிகளைச் செய்தவர் அவர்தான் சரிப்படுவார் என்று அவர் எண்ணை அழைக்கப்போக, அவரே பரத்தின் மொபைலில் தொடர்பு கொண்டார்.

மிஸ்டர். பரத் வணக்கம் ஒரு உதவிக்காக உங்களுக்கு போன் செய்திருந்தேன் 

சொல்லுங்கள் ஸார் நானுமே உங்களுக்கு போன் செய்யத்தான் நினைத்திருந்தேன் என்ன விஷயம் ?

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பிளைட் கிராஷ் ஆனது தெரியும் இல்லையா ? அதில் முக்கியமான கட்சித்தலைவரும் சென்றிருந்தார் அவரைத் தேடி அலெக்ஸ் என்பவர் தலைமையில் குழு ஒன்று வருகிறது. ரேடார்களின் தகவல்படி அந்த விமானம் நீங்கள் இருக்கும் பகுதியில்தான் அவர்களும் இருக்கிறார்கள் உங்களால் ஆன உதவிகளை அவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளிற்காகத்தான் போன் செய்தேன்

அவசியம் ஸார் எப்போது வருவார்கள்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவர்கள் புறப்பட்டாகிவிட்டது, அநேகமாக இன்றிரவுக்குள் வந்துவிடலாம் நீங்கள் எதுவோ சொல்லவேண்டும் என்று சொன்னீர்களே ?!

என்னுடன் குழுவில் வந்த பெண் ஒருவரை மாலையில் இருந்து காணவேயில்லை, இன்னும் கொஞ்சநேரம் பார்த்துட்டு நானே சொல்லலாம்னு நினைச்சேன் நல்லவேளை நீங்களே போன் பண்ணிட்டீங்க ?! 

கவலைப்படவேண்டாம் அந்தப் பொண்ணோட போட்டோவை எனக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க நானே நேரடியா இதை கவனிக்கிறேன்.

அவர் போனை வைத்துவிட பரத் மீண்டும் நடந்தது என்னவென்று விசாரிக்க பிரியனைத் தேடியும், பத்மினி விஷயமுமாய் பெரிய அதிகரியிடம் பேசியதையும் சொல்வதற்காக விரைந்தான் பரத்.

ஞ்சலினா வெகு கேஷூவலாக உடை அணிந்திருந்ததைக் கண்டு, திகைப்பாய் சிரித்தான் அலெக்ஸ்.

வந்தவேலை இன்னமும் ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள ரிலாக்ஸ் ஆயிட்டீங்களே ? 

டிரஸ்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்கா என்ன ? 

நிச்சயமா ? நாம் அணியும் ஆடைகள் தான் நம்மை யாரென்று தீர்மானிக்கிறது உதாரணத்திற்கு நாம இரண்டுபேரும் இப்போ முக்கியமான ஆட்களைச் சந்திக்கப் போகிறோம் அவங்க நம்மளை மீட் பண்ணப்போகிறோம் என்னடா முக்கியமான பொறுப்பை சுமக்கிறவங்க ஒரு ஸ்லிப்பிங் ப்யூட்டியைக் கூட்டி வந்திருக்காங்களேன்னு 

குசும்பா ? சுத்தி வளைச்சி நான் அழகா இருக்கேன்னு சொல்லிட்டீங்களே ? உங்க தைரியத்தை நான் பாராட்டுறேன்.

கடலுக்குள் 12000அடிக்குள்ளே போயிட்டு வர்றதுயாருன்னு விரல் விட்டு எண்ணிடலாம் அப்படிப்பட்ட என்னை தைரியம் இல்லாதவன்னு சொல்றது டூமச் ஏஞ்சலினா ?

கோவத்தைப் பாரு,,, இப்படித்தானே என்னைக் கிண்டல் பண்ணும்போதும் இருக்கும் இப்படித்தான் எங்க ஊர்ப்பக்கம் ஒரு பொண்ணை அவளோட கணவர் திருமணத்திற்கு பிறகு குண்டாயிட்டேன்னு தேவையில்லாத வார்த்தைகளால கிண்டலும் கேலியும் பண்ணிகிட்டே இருந்தார். முதல்ல அதையெல்லாம் நினைச்சி நினைச்சி கவலைப்பட்டவ அதையே ஒரு உக்தியா நினைச்சு வெறித்தனமா ஜிம்முக்கெல்லாம் போயி உடல் எடையை கூட்டிட்டு மல்யுத்த போராட்டத்தில் கலந்துகிட்டா இப்போ மாவட்ட முதலா இருக்கா பெண்கள் நினைத்தால் எதுவும் செய்யலாம் தெரியுமா 

ஏம்மா ஏஞ்சலினா நீ சரியான வாயாடின்னு தெரியாம உன்னை வம்புக்கு இழுத்திட்டேன் மன்னிச்சிடு தாயி ?!

மன்னிப்பு வழங்கப்பட்டது அலெக்ஸ் இனிமேல் இந்த ப்யூட்டிகிட்டே பேசும் போது கொஞ்சம் ஜாக்கிரதையா பேசணும் சரியா ? விரல் நீட்டி எச்சரிக்கவும் அந்த விரல்களைப் பற்றி அழுத்தினான் அலெக்ஸ் உண்மையில் ரொம்பவும் விருப்பம் இல்லாமல்தான் இந்த வேலையில் ஈடுபட்டேன் ஏஞ்சல்.. கொஞ்சம் வேலை அதிகம் ரெஸ்டே இல்லாமல் இருப்பதால் மீண்டும் பயணம் மேற்கொள்ள ஆயாசமாகவே இருந்தது ஆனால் கடமை என்னை கட்டிப்போட்டு விட்டது இங்கே வந்ததும் நீயென்னைக் கட்டிப்போட்டு விட்டாய் நான் உன்னை விரும்புகிறேன் ஏஞ்சல்

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 21 - லதா சரவணன்AdharvJo 2018-12-24 16:28
acho :eek: indha priyan-i lock seithutangan sandhosham pata ippadi agidiche facepalm Atleast Bharath and uthra-k vishayam therindhadhu :cool: hope Bharath will save Padmini :yes:
Alex and Angel's oda proposal, convo, counter ellame simply cute and sweet :D kalakurangal! thank you for this interesting update :clap: :clap: Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 21 - லதா சரவணன்SAJU 2018-12-24 12:39
INTERESTING UD SIS
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 21 - லதா சரவணன்mahinagaraj 2018-12-24 11:38
அட்டகாசமான எபி....👏👌👏😉
ரெண்டு ஹீரோஸ்சும் சேர்ந்து கலக்கராங்க.......
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 21 - லதா சரவணன்madhumathi9 2018-12-23 20:39
:Q: oh my god ennapanna poraanga? Nice epi.waiting to readmore. :thnkx: 4 this epi (y) . :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 21 - லதா சரவணன்saaru 2018-12-23 15:01
Wooow super
Ana inda pakki tapichuduthe
Innum enna enna panna porano
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 21 - லதா சரவணன்Sahithyaraj 2018-12-23 12:20
Priyanka escapes ah. steam :angry: Innum villathanam niraiya pannuvane..Be alert Bharath and Uthara. :sad:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top