Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 13 - 5.0 out of 5 based on 3 votes

13. மனம் விரும்புதே உன்னை...

கீதா ராஜீவ் திருமண நாள் விழாவிற்கு பின் வந்த நாட்களில் இந்து வானத்தில் மிதந்து கொண்டிருந்தாள். அவள் மனதில் ஆயிரம் ஆயிரம் கனவுகள், கற்பனைகள் அலை மோதி கொண்டிருந்தன. பொதுவாய் அனைத்தையும் தன் அன்னையிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்து பழகி இருந்த இந்துவிற்கு ஏனோ இப்போது அவளின் மனதில் பொங்கி கொண்டிருந்த உவகையை அவர்கள் யாரிடமும் சொல்ல மனசு வரவில்லை... அவளுள் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கே அதிசயமாக தான் இருந்தது. சஞ்சீவின் அருகிலேயே இருக்க வேண்டும், அவன் பேசுவதை கேட்டபடியே இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசையாக இருந்தது... ஆனாலும் அவன் எதிர்பார்ப்பது போல் விட்டு கொடுத்து அவனை போனில் அழைத்து பேசவும் அவளுக்கு மனசு வரவில்லை...

இப்படி இந்து கனவுலகில் சஞ்சரிப்பதை மற்றவர்கள் கவனித்தார்களோ இல்லையோ, நந்தினி கவனித்தாள். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஒரே அலுவலகத்தில் இருவரும் இருந்ததால், இருவரும் அவ்வப்போது சந்திக்க வேண்டி இருந்தது. இந்துவிற்கு முன் போல் நந்தினியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கும் ஆவல் இருக்க வில்லை. ஆனால் நந்தினிக்கு எந்த மயக்கமும் இல்லாததால், அவள் வழக்கம் போல் இந்துவை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.

இன்னும் இரண்டு வாரங்களில் அவர்களின் நிறுவனத்தின் ஆண்டு விழா வர இருந்ததால், அதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட அர்ச்சனா அன்று மாலை அலுவலகம் வந்திருந்தார். அர்ச்சனா, இந்து, நந்தினி மற்றும் சில உயர் நிலை மேனேஜர்ஸ் கலந்து ஆய்வு செய்த போது, சென்ற மீட்டிங்கின் போது அர்ச்சனா சொல்லி இருந்த சில விஷயங்களும் இன்னமும் நடை முறை படுத்தப்படவில்லை என்பது புரிந்தது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து தான் கவனித்து கொண்டிருந்தாள். அர்ச்சனா கேள்வியாய் இந்துவை நோக்கினார், இந்து என்ன பதில் சொல்வது என்று சிந்திக்கும் போதே, வாய்ப்பை நழுவ விட விரும்பாது நந்தினி பேசினாள்,
"இப்போ கொஞ்ச நாளாவே இந்து மேடம் கம்பெனி விஷயம் எல்லாம் சரியாவே கவனிக்குறது இல்லை போல இருக்கே.... கேள்வி பட்டேன் நேத்து கூட எதோ ஒரு டெண்டர் கடைசி நிமிஷத்தில தான் அனுப்பினோம்னு....."

வழக்கம் போல் நந்தினியின் கிண்டல் பேச்சில் கோபப் பட்ட போதும், அன்னையை ஒரு பார்வை பார்த்து விட்டு,
"அதெல்லாம் இல்லை.... அந்த டெண்டர்ல கொஞ்சம் குழப்பமான ரெகுலேஷன்ஸ் எல்லாம் இருந்தது... அது தான் செக் பண்ணி அனுப்ப லேட் ஆயிடுச்சு...." என்றாள் இந்து.

"நீங்க சொன்னால் சரி தான் மேடம்... ஆனால் அம்மா, எனக்கு என்னவோ இது வேற விஷயம்னு தோணுது... எதுக்கும் நீங்க அவங்க கிட்ட அப்புறம் பேசி பாருங்க...." என்று அர்ச்சனாவை பார்த்து ஒரு கண் சிமிட்டலோடு பேச்சை முடித்தாள் நந்தினி.

பொதுவாக நந்தினி அர்ச்சனாவிடம் சற்றே செல்லமாக பேசினாலே இந்துவிற்கு பிடிக்காது, இப்போது அவள் அர்ச்சனாவை அம்மா என்று அழைத்துப் பேசவும், அவளுக்கு கோபம் தலைகேறியது. மேலும் அது என்ன தேவை இல்லாமல் அவள் விஷயத்தில் மூக்கை நுழைப்பது...
"நந்தினி மேடம்.. எதுவா இருந்தாலும் நான் சில பேரை போல அடுத்தவங்களை கஷ்டப் படுத்துற மாதிரி எல்லாம் எதுவுமே செய்ய மாட்டேன்... அதனால நீங்க என்னை பத்தி கவலை பட வேண்டாம்...." என்றாள்.

"ஓ! ஆமாம் ஆமாம்... ஷேர்ஸ்க்காக, பணத்துக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்குறவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க தான்....." என்றாள் நந்தினி வழக்கம் போல் தன் நக்கலான குரலில்.

அவர்கள் மூவரை தவிர அங்கு வேறு சிலரும் இருப்பதை அவர்கள் இருவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மற்றவரின் முகத்தில் இருந்த ஆர்வத்தை கவனித்த அர்ச்சனா, நந்தினியின் பேச்சுக்கு இந்து கோபத்துடன் பதில் சொல்லும் முன், இடை இட்டு,
"இந்து! தேவை இல்லாத பேச்சு எல்லாம் இப்போ வேண்டாம்... நீ என்ன சின்ன குழந்தையா? வந்த விஷயத்தை கவனிப்போம்..." என்றார்.

ஏற்கனவே நந்தினியின் பேச்சில் கோபத்தில் இருந்த இந்து, அர்ச்சனா, அவளை எதுவும் சொல்லாது, தன்னிடமே சொல்லவும், இருக்கும் இடத்தை மறந்தாள்,
"சாரி அம்மா... இந்த மாதிரி இருக்குறவங்க கூட எல்லாம் என்னால பேச முடியாது.. நீங்க வேண்டியதை பேசிட்டு வாங்க.. நாம ரெண்டு பெரும் அப்புறம் பேசலாம்..." என்றவள் அதற்கு மேல் அங்கு இருக்காது எழுந்து சென்று விட்டாள்.

இந்து சென்ற திசையை சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனாவின் முகத்தில் சிந்தனை இருந்தது. ஆனால், அதை வெளி காட்டாது, மற்றவர்கள் பக்கம் திரும்பி சற்றே புன்னகைத்து விட்டு,
"சின்ன குழந்தையை தூக்கி எம் டி பதவியிலே உட்கார வச்சிட்டோம் போல இருக்கு...சரி நாம வேலையை பார்ப்போம்...." என்றார்.

ற்றவர்களிடம் கலந்தாலோசித்து முடித்து விட்டு, வெளியே வந்த உடன் அர்ச்சனா நேராக இந்துவின் அறைக்கு தான் சென்றார். ஆனால் இந்து அங்கே இல்லை. நிலாவை அழைத்து கேட்ட போது, இந்து அரை மணி நேரம் முன்பே கிளம்பி சென்றுவிட்டாள் என்ற தகவல் கிடைத்தது. அவளின் குணத்தையும், கோபத்தையும் பற்றி அறிந்து இருந்ததால் அர்ச்சனா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கம் போல் மற்ற அலுவல்களை முடித்து விட்டு, அர்ச்சனா வீட்டை அடைந்த போது நேரம் ஏழு மணியை தாண்டி இருந்தது. இந்து மாடியில் தன் அறையில் தான் இருக்கிறாள் என்பதை கனகாவிடம் கேட்டு அறிந்துக் கொண்டு, நேரே அங்கு சென்றார் அர்ச்சனா.
உடையை கூட மாற்றாது, கைகளை கட்டியபடி கட்டிலில் அமர்ந்து இருந்த மகளை பார்த்து அர்ச்சனாவின் முகத்தில் தானாகவே புன்னகை வந்தது.
"என்ன கண்ணா... இன்னும் கோபம் போகலியா?"

அன்னையின் குரலில், சற்றே திகைத்து திரும்பிய இந்து, தன் கோபத்திற்கான காரணம் நினைவு வரவும், எதுவும் சொல்லாது, அமைதியாக இருந்தாள். அவளின் அருகில் வந்து அமர்ந்த அர்ச்சனா,
"என்ன இந்து இது? நீ என்ன சின்ன குழந்தையா? இப்படியா ஆபிஸ் மீட்டிங்ல நடந்துக்குறது? மத்த மேனேஜர்ஸ் எல்லாம் நம்ம குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்க?"

"சரி நான் தப்பா தான் நடந்து கிட்டேன்.... உங்க செல்ல வளர்ப்பு மகள் மட்டும் தப்பே செய்யலையா? அவளை ஏதாவது சொன்னீங்களா?"

சில வினாடிகள் அமைதியாக இருந்த அர்ச்சனா, பின் எதோ முடிவு செய்தவராக,
"இந்து நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்... முதல்ல சாப்பிடுவோம் அப்புறம் பேசலாம்..."

"ப்ச்... அப்படி என்ன புதுசா சொல்ல போறீங்க? எப்போதும் போல தானே? எனக்கு இந்த அறுவை எல்லாம் வேண்டாம்... நான் உங்க செல்ல பொண்ணை தொந்தரவு பண்ணலை போதுமா?"

"இது என்ன புது பிடிவாதம்... நான் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.... நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்... நீயும் வா... சாப்பிட்டு முடிச்சிட்டு பேசலாம்...."
என்றார் அர்ச்சனா சற்றே கண்டிப்பான குரலில்.

விருப்பம் இல்லாத போதும், அன்னைக்காக, வழக்கம் போல் சரி என தலை ஆட்டினாள் இந்து.


ரவு உணவை முடித்து விட்டு, இந்துவின் அறையில் இருந்த பால்கனியில் வந்து இருவரும் அமர்ந்தனர். அர்ச்சனா எதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கவும், சிறிது நேரம் அமைதியாக இருந்த இந்து, பொறுமையின்றி,
"ஏதோ சொல்லனும்னு சொன்னீங்க அம்மா...." என்றாள்.

மகளை பார்த்து புன்னகைத்த அர்ச்சனா,
"உனக்கு பொறுமை கொஞ்சம் கூட இல்லை இந்து... இந்த விஷயத்தில நீ கொஞ்சம் மாறி ஆகனும்... சரி அதை அப்புறம் பார்ப்போம்.... இந்து நான் இப்போ சொல்றதை நடுவில் கேள்வி எதுவும் கேட்காமல் கேள்.... இதை உங்க அப்பா உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு நினைச்சிருந்தார், அதை பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்... உனக்கு கொஞ்சம் முன் கோபம் இருந்தாலும், நீ ரொம்ப நல்லவள் என்பது எனக்கு தெரியும்... அதனால அவசர படமால் முழுதுமா கேள்...."

அன்னையின் சற்றே நீண்ட பீடிகையில், ஆர்வமுற்று சரி என தலை ஆட்டினாள் இந்து.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# manam virumbudhey unaijenny 2012-07-31 07:47
hi, wen will the next episode be posted? :lol:
Reply | Reply with quote | Quote
-1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 13Thenmozhi 2012-07-23 18:44
Hi Jenny, Sasirekha, Ma:a and all readers,
Next part of MVU will be published on Thursday :-) There will be no delay. Enjoy!
Reply | Reply with quote | Quote
+1 # manam virumbudhey unnaijenny 2012-07-23 07:11
expecting next episode eagerly,,,,,,,,,,,,,,,,,,, :lol:
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 13Sasireka A 2012-07-21 00:20
expecting next episode of Manam virumbuthe unnai :-|
Reply | Reply with quote | Quote
+2 # RE: மனம் விரும்புதே உன்னை... - 13Mala 2012-07-09 20:29
expecting next episode of Manam virumbuthe unnai
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 13Nanthini 2012-07-08 05:31
Hmm... as expected... But what's going to be the twist that you hinted in the last episode?? Eagerly waiting for the next episode :-)
For the first two episodes why don't you chaage the author name :P
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 13Sasireka A 2012-07-06 23:29
Hurray!! atlast ..after 2 weeks..read it.fabulous.thanks shanti & aadhi.. :-) :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 13Thenmozhi 2012-07-07 18:37
Thanks a lot for your support Sasirekha :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 13Sasireka A 2012-07-09 23:58
Not only me.lot of viewers are behind.you have a wondeful gift of creativity and imagination.we will support u till that lasts.all the best :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 13Admin 2012-07-06 04:46
Nice Aadhi. So probable villi #2 Nandhini is also out or is this going to be the turning point?????
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 13Thenmozhi 2012-07-06 20:58
If I tell u the story now, then there will be no suspense right?

Wait and watch :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 13Nanthini 2012-07-06 00:19
priya k, ronnieshanthy.l, Denisha, Anonymous & All other readers,
Our sincere apologies for the delay in posting the next episode. Our Shanthi madam is busy and there were some privilege issues. Hope everything will be back to normal from now on :-)

Thanks for your support :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top