Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 4.43 (7 Votes)
கம்பன் ஏமாந்தான் - 03 - 4.4 out of 5 based on 7 votes
Pin It

03. கம்பன் ஏமாந்தான் - வினோதா

பார்த்திபன் அன்று ரொம்பவே பிசியாக இருந்தான். மறு நாள் அனுப்ப வேண்டிய ஒரு டெண்டருக்கு இன்று மாலைக்குள் வேலைகளை முடித்து அவன் தந்தையிடம் ஒரு முறை காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அவன் வேலைகளுக்குள் முழ்கி இருந்த போது அவனின் செயலாளர் தொலைபேசியில் அழைக்கவும், சற்றே அலுப்புடன் தான் எடுத்து பேசினான். ஆனால் விவேக் அவனை காண வந்திருப்பதாக அறிந்த உடன் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. உடனே உள்ளே அனுப்ப சொல்லி விட்டு தொலை பேசியை கிழே வைத்தான்.

விவேக்கும் பார்த்திபனும் பல வருட நண்பர்கள். பள்ளி படிப்பு மட்டும் அல்லாது கல்லூரியிலும் ஒன்றாக படித்தவர்கள். பார்த்திபனுக்கு விவேக் மீது எப்போதுமே பிரியம் அதிகம். இப்போது திருமணமான பின் முன்பு போல் நண்பனை சந்திக்க முடியாவிட்டாலும் அவன் மனதில் அந்த நட்பு அப்படியே பசுமையாக தான் இருந்தது. அது மட்டும் அல்லாது விவேக் தான் அவர்கள் நண்பர்கள் செட்டின் தலைவன். படிப்பில் மட்டும் அல்லாது மற்ற எல்லா துறையிலும் அவனுக்கு ஈடுபாடு உண்டு. அவனை கண்டு பார்த்திபன் பல முறை ஆச்சர்யப் பட்டிருக்கிறான்.

விவேக்கை பற்றிய சிந்தனையில் பார்த்திபன் இருந்த போதே, குளிர்சாதானமயமாக்கப் பட்டிருந்த அந்த அறையின் கதவை திறந்து விவேக் உள்ளே வந்தான்.

"என்னடா விவேக் அதிசயம்? போன் செய்தால் கூட பிசி பிசின்னு பறப்ப??? என்ன விஷயம்... உட்காருடா... உட்கார்ந்து சொல்...."

நண்பனின் இருக்கைக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்த விவேக்,
"என்னடா ரொம்ப பேசுற? இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்... சரி அப்படியே உன்னை பார்த்துட்டு போகலாமேன்னு தான்...."

"ம்ம்ம்ம்... நம்ப முடியலையே... உனக்கு என் ஞாபகம் சும்மா வராதே...."

"டேய் போதும்டா... சரி அப்புறம் போன வாரம் என்ன ஆச்சு? அங்கிள் ரொம்ப திட்டினாரா?"

"அதை விடுடா... அப்பா திட்ட தான் செய்தார் அம்மாக்கும் கொஞ்சம் வருத்தம் தான் ஆனாலும் எப்போதும் போல் எனக்கு சப்போர்ட் செஞ்சு காப்பாத்திட்டாங்க..."

"சாரி டா..."

"அட இது என்ன புதுசா? சரி உனக்கு இப்போ சந்தோசம் தானே அதை சொல்...."

விவேக் உடனே பதில் ஏதும் சொல்லாது அமைதியாக இருந்தான். பின்,
"இல்லைடா பார்த்தி... ஏதோ தப்பு செஞ்சுட்ட மாதிரி அந்த விஷயம் மனசை அரிச்சிட்டே இருக்கு..."

"அன்னைக்கு அப்பா உன்கிட்டயும் பேசினார்ல... என்ன உனக்கும் டோஸ் விட்டாரா?"

"ப்ச் இல்லை... நீ எப்போ இப்படி மாறினேன்னு கேட்டார்... உன் கூட சேர்ந்து என் மகன் உருபடுவான்னு பார்த்தால் நல்லா இருக்க பையனை நீயே கெடுத்துடுவ போல இருக்குன்னு சொன்னார்..."

"அடடா... சாரிடா... அப்பா எப்போதும் இப்படி தான்..."

"இல்லை பார்த்தி எனக்கு அவர் மேலே கோபம் எல்லாம் இல்லை.. தப்பு நம்ம மேலே தான்... அந்த மாதிரி ஒரு பர்சனல் விஷயத்தை பத்தி அங்கே பேசி இருக்க கூடாது தான்..."

"ம்ம்ம்... அதில் உன் மேலே தப்பு இல்லையே... உனக்கு அதை பத்தி எதுவும் தெரியாதே..."

"ஆமாம் பார்த்தி... உனக்கு எப்படி அந்த பாரதி லவ் மேட்டர் எல்லாம் தெரிய வந்தது? உனக்கு அவளை முன்னாடியே தெரியுமா என்ன?"

"அதெல்லாம் இல்லைடா.. அது ஒரு பெரிய கதை...."

"சொல்லேன்டா........."

ஆர்வத்துடன் ஒலித்த நண்பனின் குரலில் ஆச்சர்யப் பட்ட பார்த்திபன்,
"ஓஹோ சார் கதை அப்படி போகுதா??? என்ன சார் இவ்வளவு ஆர்வம்??? என்ன லவ்வா?"

நண்பனின் கேள்வியில் சற்றே திகைத்த விவேக்,
"ப்ச் என்னடா நீ... லவ் எலாம் இல்லை.. சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னு தான் கேட்டேன்....."

"நீ என்னைக்காவது அடுத்தவங்க விஷயத்தை அவங்களே சொல்லாமல் கேட்டு தெரிஞ்சுருக்கியா? என்கிட்டேயே கதை விடாத...."

"என்னடா பார்த்தி இப்படி சொல்ற.... சும்மா தாண்டா கேட்டேன்..."

"சரி... சும்மா தானே கேட்ட அப்போ அடுத்த வாரம் சொல்றேன்.. இன்னைக்கு ரொம்ப முக்கியமான வேலை ஒன்னு இருக்கு..."

"டேய்... ரொம்ப பிலிம் காட்டாதே..."

"என்னடா நீ.. நிஜமாவே வேலை இருக்கு...."

விவேக் பதில் சொல்லாது முறைக்கவும், வழக்கம் போல் பார்த்திபன் இறங்கி வந்தான்.
"சரிடா முழு கதையை அப்புறம் சொல்றேன்... இப்போதைக்கு ஷார்ட்டா சொல்றேன்.... பாரதியும் அவளோட காலேஜில கூட படிச்ச பாலாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புனாங்க... பாலா அவங்க வீட்டில ஒரே பையன்... கொஞ்சம் பணமுள்ள குடும்பம் தான்... பாரதியும் அவங்க வீட்டில ஒரே பொண்ணு தான்... ஆனால் பணக்காரங்கன்னு சொல்ல முடியாது கொஞ்சம் அப்பர் மிடில் கிளாசுன்னு வச்சுக்கோ... வீட்டுக்கு விஷயம் தெரிஞ்ச போது முதல்ல பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை... கொஞ்சம் லைப்ல செட்டில் ஆன பிறகு கல்யாணம்னு முடிவு செஞ்சாங்க... இப்படி இருக்கும் போது தான் பாலா சவுந்தர்யாவை மீட் செய்தான்... சவுந்தர்யா நம்ம முருகா அண்ட் கோ சொந்தக்காரர் பழனியப்பாவோட ஒரே மகள். சவுந்தர்யாவிற்கு பாலாவை ரொம்ப பிடிச்சுது. அப்புறம் என்ன அவங்க அப்பா அம்மா கிட்ட சொன்னாள். ஒரே பொண்ணு விருப்பத்தை ஏத்துக்காம விட முடியுமா, அவங்க ரெண்டு பேரும் எதிர்க்கலை. பழனி சாருக்கு பாலாவை ஓரளவிற்கு தெரியும் அவருக்கும் அவனை பிடிச்சு தான் இருந்தது... அப்புறம் என்ன நம்ம தமிழ் சினிமால வர மாதிரி காதலை பணம் வென்றது... பணத்தை பார்த்தவுடன், பாலாவுக்கு சவுந்தர்யா உசத்தியா தெரிஞ்சா....."

பார்த்திபன் சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த விவேக், இப்போது இடையிட்டு,
"ஆனால் நீ அன்னைக்கு ஏதோ விட்டுக் கொடுக்குறது பத்தி எல்லாம் சொன்னீயே????"

"ம்ம்ம்ம்...அதில தான் அப்பா வரார்... எங்க அப்பாவும் பாரதியோட அப்பாவும் பால்ய நண்பர்கள்... அப்பா கம்பெனி ஆரம்பிக்க தன்னுடைய நிலத்தை வித்து அந்த காலத்திலேயே ஒரு லட்சம் கொடுத்திருக்கார் பாரதியோட அப்பா... அப்பா நல்ல நிலைமைக்கு வந்த பின்னும் கூட அந்த பணத்தை திருப்பி வாங்க பாரதியோட அப்பா மறுத்துட்டார்... மகள் கல்யாணத்தில் பிரச்சனைன்னு வந்த போது, பாரதியோட அப்பா உதவி கேட்டு எங்க வீட்டுக்கு வந்திருக்கார். அப்போ அப்பா அவர் தன்னுடைய தொழிலில், அவரையும் ஒரு ஸ்லீப்பிங் பார்ட்னரா இவ்வளவு நாளும் பாவிச்சு அவர் பேர்ல போட்டு வச்சிருக்கிற கிட்டத்தட்ட பத்து கோடி பத்தி சொன்னார்... அப்புறம் என்ன? விஷயம் தெரிஞ்ச உடனே நம்ம பாலாக்கு மனசு மாறிடுச்சு.. அங்கே நூறு கோடி இருந்தாலும் மாமனாருக்கு ஜிங் ஜாங் போடனும்... இங்கே கல்யாணத்தின் போதே பத்து கோடி கையில் வந்திடும்... கூடுதலா விரும்பின பொண்ணு வேற.. அப்புறம் என்ன ஐயா பாடு ஜாலி தானே??? சரியான கேனையன்...."

"அப்புறம் ஏன் அந்த கல்யாணம் நடக்கலை???"

 

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# கம்பன் ஏமாந்தான் - 03DEVARAJAN THEAVER 2017-02-08 09:52
READING TIME 3 TP 6 MINUTUES NOW OK

THANKS A LOT
Reply | Reply with quote | Quote
# RE: கம்பன் ஏமாந்தான் - 03Nanthini 2012-07-20 20:48
Wow, Vinodha your reply to Aadhi is increasing my eagerness...

So you will tell us why Vivek proposed in next episode???
Reply | Reply with quote | Quote
# RE: கம்பன் ஏமாந்தான் - 03Thenmozhi 2012-07-19 19:35
Saringa Vinodha madam :-)

Oru aarva kolaaru thaan!
Reply | Reply with quote | Quote
# RE: கம்பன் ஏமாந்தான் - 03Thenmozhi 2012-07-19 18:00
Enna Vinodha, athukkulla hero (sariya?) propose senjuttaaru?
Romba early illai???? :-)
Reply | Reply with quote | Quote
# RE: கம்பன் ஏமாந்தான் - 03Bindu Vinod 2012-07-19 19:09
Aadhi, athu enna avvalavu avasaram ungalukku? Next episode padichaa theriya poguthu thaane? :D

Quoting Aadhi:
Enna Vinodha, athukkulla hero (sariya?) propose senjuttaaru?
Romba early illai???? :-)
Reply | Reply with quote | Quote
# RE: கம்பன் ஏமாந்தான் - 03Admin 2012-07-17 21:42
Ok... Atlast we have the next episode of Kamban Emaandhaan too... :-)

So now only our continue the story is pending......
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top