Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 11 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It
Author: karna

தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யா

En kathale

ன் பெயர் கயல்விழி.என் கைக்கோர்த்து என் வாழ்க்கையின் சில பக்கங்கள் பயணிக்க வாங்க.

அழகான அமைதியான கிராமம்....இருங்க அப்படி இல்ல என்கதை.சற்று இரைச்சலான ஆனால் எதிலும் ஒரு உயிரோட்டமுள்ள டவுன் தான் என் ஊர்.ஆற்றங்கரையில் சிவனும் விஷ்ணுவும் தனக்கென வீடுகட்டிக்கொண்டு ஒன்றாக வசிக்கும் ஊர்.பல இன மக்கள் ஒற்றுமையா அன்பா பழகும் சின்ன பாரதம் எங்க ஊர்.நடந்தே முழு ஊரையும்சுற்றி வரலாம்.அவ்வளவு அழகு.பெரிய வீதிகள்,பொட்டிகடைகள்,விளையாட்டு திடல்,சினிமா தியேட்டர்,துணிககடைகள்,டீ கடைகள் எல்லாமே அழகு.இன்னும் அழகு சேர்ப்பது கோபுரங்கள்.கோபுரம் உள்ளநுழைந்தாலே ஆளைத்தூக்கும் காற்று, கோபுரத்த தாங்கி புடிச்ச மாதிரி பொம்மைகள்.உட்புறமா சின்ன திண்ணைகள்,அதுல உட்கார்ந்து மழைஇரசிக்கிறது தனி சுகம்.சொட்ட சொட்ட நனைஞ்ச கோபுரத்த பார்க்கிறதுல தனி ஆனந்தம்.

எங்க ஊர் அழகா தெர்ய காரணம் அவை தந்த இனிக்கும் நினைவுகள்.அதுக்கு காரணமான என் குடும்பம். அப்பா!இந்த உலகத்துல எங்க இந்த வார்த்தை கேட்டாலும் என் கண்ணில் கருத்தில் தெரியும் ஒரே முகம் என் அப்பா இராமசந்திரன். அன்பான ஆசிரியர்.அவருக்கு ஏற்ற அம்மா ஜானகி.இவர்களோட அன்பான வாரிசுகளான அண்ணன் ரகு தம்பி கண்ணண் நடுவில் நான். என்னை சுற்றி அன்பு மயம்.அமைதியான குடும்பமோ ன்னு கற்பனை பண்ணாதீங்க.எப்பவும் ஓயாத சத்தம் தான் வீட்டில். அம்மா அப்பா சண்டையில்லாத வீடா.என்னன்னு தெரியாம சண்டை வரும்.உடனே சட்டைய மாட்டிக்கொண்டு வெளியே செல்லும் அப்பா அவர் திரும்பும் போது சூடான காபி தரும் அம்மா.அது தான் காதல்ன்னு அப்போ புரியல.

இவங்க சண்டைக்கு சலைச்சதில்லை எங்க ரகளை.ரகு ஒரு சுத்தக்காரன்.கண்ணண் சேட்டைக்காரன்.நடுவில் நான் பலிஆடு.ரகு என் ஆசான் மரியாதை அதிகம் அவனிடம்.மூத்தவன் என்ற பொறுப்பு மிக்கவன்.எல்லா நேரங்களிலும் எனக்கு பக்கபலமானவன்.பொடியன் என் குழந்தை ,தோழன்,சண்டைக்கான சரி ஜோடி.ரொம்ப சுவாரஸ்யமான எளிமையான வாழ்க்கை. கவலைகள் அண்டாத பருவம்.அப்பா உழைப்பில் மட்டும் இயங்கிய குடும்பம்.அதனால வரவு செலவு அறிஞ்ச வளர்ப்பு.அளவுக்கு அதிகமா பொருள் வாங்கவோ சேர்க்கவோ கூடாதுங்கற வைராக்கியம் இயல்பா அமைந்தது.சிறந்த சில விஷயங்கள் பார்த்து பார்த்து தான் பழக்கத்தில் வரும்.கற்றுக்கொடுக்கனங்கறது இல்லை. இயலாமை இல்லாதபோதும் ஆடம்பரம் மீது பற்று இல்லாமல் போச்சு.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தரையில் பாய் போட்டு ஒரே போர்வைக்குள்ள நானும் அம்மாவும். கீழே உட்கார்ந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு சிரித்து மகிழ்ந்த தருணங்கள்.பக்கத்துல விளைஞ்ச காய்கனிகள் அன்றாடம் வாங்கி வந்து சமையல்.அக்கம்பக்கம் வீட்டோடு இருந்த குடுக்கல்வாங்கல்.அன்யோன்யமான அன்பு நெஞ்சங்கள்.தண்ணீர் ஆரம்பித்து எல்லாமே சிக்கனமாக செலவு. அம்மா மனசரிஞ்ச அப்பா,அப்பா பாக்கெட் அறிஞ்ச அம்மா.எளிமை எளிமைன்னு எந்த குறையும் வச்சதில்லை.குழந்தை பருவம் என்னவெல்லாம் கேட்குமோ அது எல்லாம் கிடைத்தது. பொருளைவிட மனிதனை நேசிக்கும் வாழ்க்கை. உண்மையிலேயே எளிமையான வாழ்க்கை தான் நிம்மதியான வாழ்க்கை. கால ஓட்டத்தில் இதை தொலைத்துவிட்டு இன்றைக்கு மினிமலிஸம் ன்னு வெளிநாட்டாள் சொல்லும் பாடம் நாம் இப்போ வாய்மூடி தலையாட்டி கேட்டகிறோம்.கொடுமை.நம்ம முன்னவன் சொன்ன வழி நடந்தாலே பல அற்புதங்கள் புரியும்.அப்பா இன்று வரைக்கும் அப்படி தான் இருக்கார்.

 அப்பா மகள் உறவு ஒரு அற்புதம் தான் அதிசயம் தான்.தன்னோடபெண் உருவா மகளை பார்க்கிறார்.தன் அன்னையையும் பார்க்கிறார்.என் அப்பா இன்று வரை என் உற்ற தோழன் தான். குழந்தையா இருந்தபோது என் கூட தவழ்ந்தார்.என் கூட கூட்டாஞ்சோறு சாப்பட்டார்.வளர்ந்த பின் எனக்கு நிறைய புத்தகங்கள் அறிமுகப்படுத்தினார்.பருவம் வந்த போது மற்றவர் முன்னிலையில் எப்படி கௌரவமாக தெரிய வேண்டுமென தெளிவு படுத்தினார்.பல சமயங்களில் தாயுமானார்.ரகு கண்ணண் விட அதிக அன்பு என்னிடம் தான். அவர் அதை மறுத்தாலும் உண்மை அதுவே.ரகுவிற்கு பாடம் சொல்லிததரும் போதும் சரி கண்ணணுடன் விளையாடும்போதும் சரி வயதிற்கு ஏற்றாற்போல் மாறிப்போவார்.அப்பா தான் என் ஹீரோ.

அம்மா எல்லா அம்மா போல கண்டிப்ப பேர்வழி தான். ஆனால்அன்பு சுரக்கும் அமுதசுரபி.நல்லா பாடுவா.சாஸ்திரியம் படிச்சிருக்கா.ஆனா அதை கொண்டு சம்பாதிக்க நினைச்சதில்லை.எங்க குடும்பம் தான் அவ உலகம்.மன அமைதிக்காகவும் தன் உற்சாகத்துக்காகவும் பாடுவா.வாய் மட்டுமல்ல அவ கையும் பாடும்.சமையல் ராணி.ஆனால் கற்றது கையளவங்கற அடக்கம்.ஆசிரியர் ஆகனும்னு ஆசை அவளுக்கு ஆனால் குடும்ப பொறுப்புகள் சுமக்க ஆரம்பிச்சதும் அதுவே தன் முதல்கடமைன்னு முடிவு பண்ணிட்டா.அதுக்காக என்றைக்குமே புலம்பினதோ கிடையாது.வாழ்க்கை போற திசையில் தன்னை செலுக்கிட்டா.ஒவ்வொரு நாளும் திருவிழா என்பது தான் அவ தாரகமந்திரம்.ஆனால் எங்கள பற்றின கவலை படும்போது சராசரி அம்மா.

பாட்டு அவ தந்த வரம் எனக்கு.நான் ஆசிரியர் ஆகனும்னு தான் அம்மா அப்பா ஆசை ஆனால் என் மேல அந்த எண்ணங்கள் திணிச்சது இல்லை.தன் பிள்ளைகள் மீது கதன் கனவுகளை திணிக்காத பெற்றோர் கிடைப்பது வரம் தானே.ரகு கண்ணண் இருவரையும் வெளியூர் அனுப்பி படிக்க வைத்தார் அப்பா நான் மட்டும் கூட்டுக்குறுவியா அம்மா அப்பா அரவணைப்பில பக்கத்து ஊர் கல்லூரியில் படிச்சேன.சாதாரண ஆசிரியர் சம்பளத்தில எங்க மூன்று பேரையும் எப்படி படிக்க வைத்தார் என்பது இன்று வரை புதிர் தான். அண்ணன் தம்பி விட உலக அறவு எனக்கு குறைச்சல் தான். அதனாவலேயே வேலை தேடி சென்னை அனுப்ப்பட்டேன். ரகு தான் முக்கிய காரணம். அவன் எனக்கு இனனொறு தந்தை. பெண்கள் சமூக அறிவோட தன் சொந்த கால்களை நம்பி இருக்கனுங்கறது தான் அவன் எண்ணம்.என்னுடைய மிகப்பெரிய உந்துதல் அவன் தான். குடும்பம தாண்டி என் நட்பு வட்டம்.சிறிய வட்டம் தான் ஆனாலும் உண்மையான நட்புகள்.அதிலும் யாதவ் என் உயிர் தோழன்.இந்ந அழகிய உலகம் தவிர வேறேதும் அறியாத நான் இப்போது சிங்கார சென்னையில்.விடுதியில். சென்னை எனக்கு நிறைய புது அனுபவங்கள் தந்தது.சில இனிப்பு சில கசப்பு.எல்லா அனுபவங்களுமே பாடங்கள் தானே.சென்னை தந்த இனிமையான பரிசு காதல்.என்னை மாற்றி என் உலகை மாற்றிய காதல்.

சிற்பம் செதுக்கப்படும்

Episode # 02

Go to En Kathale story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Ramya

Latest Books published in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யாmahinagaraj 2018-12-31 13:27
ரொம்ப அழகா இருக்கு மேம்...😍😘👏👏
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யாkarna 2018-12-31 22:11
நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யாnithicloudy 2018-12-31 11:20
nice update :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யாkarna 2018-12-31 22:11
நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யாmadhumathi9 2018-12-31 06:28
:clap: nice epi. (y) waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யாkarna 2018-12-31 22:10
நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யாAdharvJo 2018-12-30 21:06
wow elegant start Ramya ma'am :clap: :clap: and Sweet+ beautiful family :dance: Amma manasaranji appa, appa pocket aranji amma :hatsoff: what more required (y) Vizhi-k Chennai kodutha inippu+Kasapana anubavangalai vasika waiting. Thank you and keep rocking. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யாkarna 2018-12-30 21:41
மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யாSrivi 2018-12-30 19:48
Good start.. all the best.. Happy new year in advance
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யாkarna 2018-12-30 20:01
நன்றி. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யாRaVai 2018-12-30 19:16
ரம்யா! உங்க குடும்பத்திலே ஐந்துபேர் என ஆரம்பித்து முதல் அத்தியாயத்திலேயே, வாசகர்கள் அனைவரையும் கவர்ந்து குடும்பத்தினராக்கிக் கொண்டுவிட்டாயே! பாராட்டுக்கள்! ஆழமான கருத்துக்கள் கொட்டப் போகிறாய் என்பது உறுதி! வாழ்க! வெல்க!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யாkarna 2018-12-30 19:59
மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 03 Mar 2019 20:24
"கயல் சீக்கிரம் கிளம்பு.அப்புறம் கல்யாணம் முடிஞ்சி சாப்பிட போன மாதிரி ஆகிடும்."ரகு

"அண்ணா அதுக்கு தானே போறோம்"சுட்டி கண்ணண்

"நீ வேற ஏன்டா..அப்பாவும் பொண்ணும் என்ன தான் பேசுவாங்களோ"அம்மா

"ஏன் மா அவசரம் உன் பொண்ணுக்கு புதுசா மாப்பிள்ளை தேட தானே கல்யாணத்துக்கு வர..."கண்ணண்

"நான் ஏன் டா தேடனும்.சிவா தம்பி விடவா நல்ல பையன் கிடைப்பாங்க...அது விடு கயல் கிளம்ப சொல்லு"

*******************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-en-kathale-ramya-10
karna's Avatar
karna replied the topic: #2 25 Feb 2019 09:31
Nandri
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 24 Feb 2019 21:37
என் அப்பா வரும் வரை காத்திருந்து என்னை அவரிடம் ஒப்படைக்கும் அளவிற்கு என் மீது அவன் காட்டும் அக்கறை இன்னமும் அவனை நேசிக்க செய்தது. பிரிவு என்பது உடலளவே.அவனை நானே என்றும் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று ஏன் சொன்னேன்.எனக்கென்ன அத்தனை கோபம்.அத்தனை அகங்காரம். ஆனால் நான அவனோடு தொடர்பில் இருப்பது அவனுக்கு பாரமாகும தான்.அவன் நிம்மதியாக அவன் கடமைகளை நிறைவேற்றட்டும்.நாட்கள் ஓடின்.என் நிலை மட்டும் தேங்கியது தொலைத்த அவனை எங்கு தேடுவது என்றே தெரியாமலேயே தேடித்தேடி தேய்ந்து போனேன்.எந்த சூழ்நிலையிலும் உனக்காக நான் இருப்பேன் அப்பாவின்இந்த வார்த்த்தைகள் மட்டுமே

************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-en-kathale-ramya-09
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 17 Feb 2019 20:01
அறிவழகன் தன் மனம் திறக்கப்போகிறான்.அவனுக்கு என் செவியும் சுமை இறக்க தோளும் தர ஆயத்தமானேன்.

"கயல் உனக்கு என் குடும்பம் பற்றி ஓரளவு தெரியும். நான் என் அப்பா அம்மா தம்பி அத்தை இது தான் என் குடும்பம்.நிம்மதி சந்தோஷம் நிறைஞ்சி தான் இருந்தது. ஆனால் சில மாதங்களா பல புயல் வீசிடுச்சு.பல குழப்பங்கள் பல சிக்கல்கள். எல்லாத்தையும் ஏதோ தட்டு தடுமாறி எதையும் உடனே எதிர்கொள்ள முடியாம சமாளிச்சேன்இன்னமும் சமாளிக்கிறேன்.கேட்கறீயா கயல்?"

"ம்ம்ம சொல்லுங்க"

**********

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-en-kathale-ramya-08
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 11 Feb 2019 05:24
இரவெல்லாம் தலையனை நனைத்து தலை பாரமாய் ஆனது.கண் திறக்க முடியாமல் எழுந்து அமர்ந்தேன்.நேற்றைய நினைவுகள் சுட்டது.அதெல்லாம் வேறும் கனவாய் இருக்க வேண்டுமென தெய்வங்களை வேண்டிக்கொண்டேன். நேற்று மெய் என்பதை அலைபேசியில் இருந்த குறும்செய்திகளும் கால்களும் நிரூபித்தது. கண்ணீல் நீர்கேர்க்க தலை நிமிர்ந்தேன்.அன்பாய் தலை வருடி நின்றிருந்தார் அப்பா.

"அப்பா?!"

"கண்ணா ரொம்ப கலைப்பா இருக்க... காப்பி தரேன் வா"

*****************
படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-en-kathale-ramya-07

🆕 Latest Updates 🆕

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F
MM

MOVPIP

NPMURN

KAKK

VEE

MVK

VKPT

KMEE

UANI

UKAN

VeCe

KKK

EEIA

VM

AV

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top
Menu

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.