(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - என் காதலே – 02 - ரம்யா

En kathale

சிங்கார சென்னை.கூட்டுக்கிளியாய் வளரந்த நான்உலகின் வேறு பரிமாணங்களையும் அறிய பெறும் உறுதுணையாக இருந்தது.பள்ளியிலும் கல்லாரியிலும் என் நட்பு வட்டம் மிக சிறிது ஆனாலும் இனிமையானது.அந்த வட்டம் பெரிதானது சென்னையில் தான். பல முகம் பல நிறம் கொண்ட மனிதர்கள்.எல்லொரிடமும் நட்ப வேண்டும், அதே சமயம் எல்லைக்கோடும் வேண்டும். எல்லொரையும் நம்ப வேண்டும் சமயத்தில் சமயோஜிதமாய் நம்பாமல் இருக்க வேண்டும். இது தான் நிஜ உலகம் .புரிந்தது.இந்த நிஜம் என்னை கொஞ்சம் புரட்டிப்போட்டது.எதிலும் உடன் நிற்கும் என் அப்பா இப்போதும் உடனிருந்தார்.குடும்பத்துடன் சென்னை இடம்பெயர்ந்தார்.எனக்காக அவர் செய்தது பிறர் கண்களுக்கு சாதாரண விஷயமாய் இருக்கலாம் ஆனால் பிறந்து வளர்ந்த ஊரை பிரிந்து எங்கோ வாழ்பவர்களுக்கு இதன் ஆழம் புரியும்.நெகிழ்ந்து போனேன்.இப்போது நான் ஒரு மகாராணியாகவே உணர்ந்தேன்.பெரும் உற்சாகத்துடன் என் வாழ்க்கை நகர்ந்தது. இந்த உற்சாகம் இரடிப்பானது அவன் வருகையால் தான். மற்றவர் கண்ணுககும கருத்திற்கும உறுத்த கூடாதென நினைக்கும் நான் வெகு நேரம் என்னை அலங்கரித்து அழகு பார்த்துக்கொண்டேன் அவனால்.உள்ளுக்குள்ளேயும் ஒரு அழகான அவஸ்தை தந்தது அவன் மீதான காதல்.இது வரை என் உற்ற தோழனான ன் அப்பாவிடமே வெட்கப்பட வைத்து ஒளித்து வைத்து இன்பம் காண செய்தது இந்த காதல்......சரிங்க...புரியுது...அவனைப்பற்றி சொல்லறேன்.

அவன் என் வாழ்க்கையின் பௌர்ணமி. என்னையே புரட்டிப்போட்ட சூறாவளி. இந்த உலகை வேறுவிதமா காட்டிய கண்ணாடி.சில காயங்கள் கூட ஏற்படுத்தின கத்தி.எங்க சந்திப்ப கொஞ்சம் வித்தியாசமானது.எலலோருக்கும் பள்ளி கல்லூரியில ஆரம்பிக்கும் எங்களுக்கு அந்த பருவம் தாண்டி ஏற்பட்டது. ஒரே பணியிடமா?னு கேட்கரீங்களா இல்லை. எங்க சந்திப்ப சொல்றேன்.கல்லூரி முடித்து சென்னையில் வேலை சேர்ந்த அப்புறம் ஒரு நாள் அவனை பார்த்தேன்.அவன் முகம் எங்கேயோ என் மனதில் இருந்திருக்கு அதனால் பார்த்ததும் அடையாளம் தெர்ந்தது.ஓடும் இரயிலில் இரண்டடி தூரத்தில் அவன் என்னையே பார்த்துக்கொண்டிருக்க.அது தெர்ந்தும் நானும் அவனையே பார்த்து கொண்டிருந்தேன்.அங்க நாங்கள் இருவரும் பறிமாறிக்கொண்ட புன்னகை இன்னமும் பசுமைய் நினைவிருக்கு.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஒற்றை புன்னகையில் இதயம் கடத்த முடியும் ங்கறது பொதுவா பெண்களுக்கு சொல்லுவாங்க.அது ஆண்களுக்கும் பொருந்தும்ங்கறது அன்று புர்ந்தது.நல்லா பழகி பரிச்சயமாகி பிரிந்த இருவர் சந்திக்கும்போது வரும் புன்னகை எங்கோ எப்போதோ பார்த்து சில வார்த்தைகள் பறிமாறி சில நிமிடங்கள் பழகின எங்களுக்குள் வந்தது தான் அதிசயம்.அவன் யார் எங்கோ பாரத்த முகம்.மனம் புத்தி எல்லாம் என் மூளைக்குள் தேடிக்கொண்டிருக்க அவன் நெருங்கி வந்து,

"நீங்க கயல தானே...கயல்விழி!"

"ஆமா!!!நீ.....ங்....க"

"கண்டுபுடிங்க"உயிர் தீண்டும் புன்னகை இப்போது மிக அருகில்.

"பார்த்த ஞாபகம் இருக்கு ஆனா...."

"அத விடுங்க அப்புறம் ஞாபகம் பண்ணிக்கலாம்...எப்போ சென்னை வந்தீங்க....இங்க தான் இருக்கீங்களா?"

சகஜமாக அவன் பேச ஆரம்பித்தான்.என் மூளை வேலை நிறுத்தம் செய்து அவன் பேச்சில் லயித்தது.மனம் அவன் சிந்தும் ஒவ்வொரு புன்னகையிலும் சிறிதுசிறிதாய் பின்பு மொத்தமுமாய் அவன் வசம் போனது.ஒரு மணி நேர இரயில் பயணம் எப்படி முடிந்தது தெரியவில்லை.அவன் புன்னகை பூத்தமுகம் மட்டும் மனதில் நின்றது.இறங்குமிடம் வந்ததும் கைகுலுக்கி விடை பெற்றோம் மறுமுறை சந்திக்க விரும்பும் ஆசையோடும் நம்பிக்கையோடும்.வீடு போகும் வழியில் வழ்கமான இளையராஜா ஆனால் பாடல் வரிகளில் எல்லாம் அவன் முகம் அவன் புனனகை.காற்றில் மிதந்தேன்.என்னுள் சிர்த்தேன்.வெட்கமும் கொண்டேன்.இந்த உண்ர்வுக்கு என்ன பெயர்?விளங்கவில்லை ஆனால் இன்பமாக இருந்தது.வீட்டினுள்ளும் அவன்.உணவு செல்லவில்லை.இது என்ன புது உணர்வு. திரும்ப திரும்ப அவன் முகம் அவன் குரல்.

என் ஏகாந்த சாம்ராஜ்யம் என் வீட்டு மொட்டை மாடி..அங்கு சென்று என் மூளையை திருகினேன்.அவன் முகம் அவன் புன்னகை தாண்டி அவன் பெயர் தேடினேன்.சட்டென்று மூளை சொன்னது'அறிவழகன்'.அவன் என் பெயர் மறக்காமலிருக்கநான் எப்படி மறந்தேன.என்னையே திட்டிககொண்டேன்.திருமப திரும்ப அவன பெயர் சொல்லிப்பார்த்தேன்.'அறிவழகன் அறிவழகன அறிவழகன்' ஒவ்வொரு முறையும் ஒவ்வொறு ஸ்ருதியில்.ஏனோ என்னுள் சிலிர்ப்பு.வெட்கம் ஏனோ எட்டிப்பார்த்தது.கல்லூரியில் சில நாட்கள் பழகிய முகம்.இருங்க இது கல்லூரி காதல் இல்லை.ஆனால் அன்று விதைககப்பட்டிருக்கலாம்.

என் எண்ணவோட்டம் கலைத்தது அவன் அழைப்பு. அலைபேசியில் புது எண்.ஏனோ அவனாய் தானிருக்கும் என்ற எண்ணம். மறுமுனையில்

"கயல்...நான் தான் உங்க இரயில் சினேகிதன்"

"யாரு?தெரியலையே..."பொய் தான் சொன்னேன்.

"சரியா போச்சு இன்னும் ஞாபகம் வரலையா?அது சரி உங்களையும் உங்க குரலையும் அறியாதவங்க இருக்க முடியாது.நான் அப்படியா"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.