5 வருடங்களுக்கு முன் திருடு போன நாளிற்கு முந்தைய நாள் ஆதித்யவர்மாவின் நினைவுகள் ஓடியது.
அன்று முற்றத்தில் தாத்தா, கேசவமூர்த்தி, பாட்டி ஒரு புறம் இருக்க சுமித்ரா, நிர்மலா, திலகா, சகுந்தலா இன்னொரு பக்கம் இருந்தார்கள். தாத்தாவுக்கு எதிராக நின்றுக் கொண்டிருந்தான் ஆதி அவனுக்கு பின்னால் சித்தப்பா மகேஸ்வரன், கணேசன் மாமா, கதிரேசன் மாமா இருந்தார்கள். அங்கிருந்த தூணில் சாய்ந்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் நடேசன், நிகிலன், அகிலா.
”தாத்தா வெளிய போய் ஊருக்குள்ள என்னை பத்தி விசாரிங்க, எல்லாரும் என்னைப்பத்தி நல்ல விதமா சொல்றப்ப நீங்க ஏன் நம்பமாட்டேங்கறீங்க தாத்தா” என முற்றத்தில் நின்று தாத்தாவிடம் கத்திக் கொண்டிருந்தான் ஆதித்யவர்மன்
”ஆதி இப்ப நீ என்னத்த செஞ்சிட்ட, ஒரு வீடு 2 கடை கட்டியிருக்க அவ்ளோதானே இன்னும் உனக்கு அனுபவம் பத்தாது”
”என்ன அனுபவம் வேணும் என்னாலயும் நல்லாவே வீடு கட்ட முடியுதே தாத்தா”
“டேய் அந்த வீடு நமக்கு தெரிஞ்சவங்களோடது நீ தப்பாவே கட்டியிருந்தா கூட அவங்க உன் மேல எதுவும் தப்பு சொல்லமாட்டாங்க”
”சரி கடைகளை என்ன சொல்றீங்க, அது மத்தவங்களோடது தானே”
”ஆதி 2 கடையெல்லாம் பெரிய விசயமே இல்லை, பெரிய பெரிய நகரங்கள்ல பெரிசா 3 அடுக்கு 6 அடுக்குல எல்லாம் கடைகள் கட்டறாங்க, உனக்கு அந்த மாதிரி வாய்ப்புகள் இன்னும் வரலையேப்பா பொறு முதல்ல இந்த கவர்மென்ட்ல கட்டிடம் கட்டற ஆர்டர்கள் வந்தா அதை எடுத்து செய் அப்புறமா சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கலாம்”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
”தாத்தா அதுக்குதான் நானும் கேட்கறேன், இப்படி நாம கவர்மென்ட்லயும் சரி வெளியிடங்கள்லயும் சரி ஆர்டர்கள் வாங்கனும்னா நமக்குன்னு ஒரு பேர் இருக்கனும் ஆபிஸ் இருக்கனும் என் பேர்ல ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியிருந்தா அது நல்லதுக்குதானே தாத்தா”
என அவன் சொல்லவும் ஆதியின் தந்தை கேசவ மூர்த்தி அவனிடம்
”ஆதி நீ சின்ன பையன், உன்னை விட பெரிய ஆளுங்க சுத்து வட்டாரத்தில இருக்காங்க, நீ இப்ப கம்பெனி தொறந்துட்டா மட்டும் உடனே உனக்கு ஆர்டர்கள் கொடுத்துடுவாங்களா. பெரிய ஆளுங்கள தாண்டி உனக்கு வராது, அப்படியே வந்தாலும் உன்னை எதிர்க்க ஆளுங்க வருவாங்க பேசாம இரு. இப்போதைக்கு உள்ளூர்ல சின்ன சின்னதா கடைங்க வீடுங்க கட்டி அனுபவத்தை வளர்த்துக்க, ஒரு 5 வருஷம் போகட்டும் தானாவே உனக்கும் இந்த தொழில்ல இருக்கற இலாப நஷ்டம், வில்லங்கம் புரியவரும், அப்புறமா நீ கம்பெனி தொறந்தாலும் உன்னால எல்லா பிரச்சனையும் சமாளிக்க முடியும், எல்லாருக்கும் உன் மேல நம்பிக்கையும் வரும்”
”அப்பா நீங்களுமா ப்ளீஸ்பா, எனக்கு இப்ப ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு இங்க சின்னதா எல்லா வசதிகளும் கூடிய க்ளீனிக்கை கட்டறதுக்காக ஆர்டர் ஒண்ணு வந்திருக்கு இப்ப மட்டும் என் பேர்ல ஒரு கன்ஸ்டர்கஷன் கம்பெனி இருந்தா அந்த ஆஸ்பிட்டல் கட்டற வாய்ப்பு எனக்கு கிடைச்சிடும். ஒரு முறை நான் கட்டற பில்டிங்கைப் பார்த்தா பல பேர் என்னை தேடி வருவாங்கப்பா, என் திறமை இந்த உலகத்துக்கு முன்னாடி நிரூபிக்க இது சரியான தருணம்” என்றான் ஆதி உற்சாகமாக அதற்கு அவனது தந்தையோ
”ஆதி, அப்பா என்னிக்குமே உன் நல்லதுக்குதான் சொல்வேன். உன்னோட இந்த அவசர வேகமே உன்னை அழிச்சிடும் இன்ஜினியரிங் படிச்சி வந்ததும் தெரிஞ்சவங்க உனக்கு வீடு கடைங்க கட்ட வாய்ப்பு கொடுத்தாங்க, இதெல்லாம் ஒரு அனுபவமே கிடையாது. ஆஸ்பிட்டல் கட்டறது நல்ல விசயம் ஆனா, அதுக்கு முன்னாடி நீ ஒரு விசயத்தை மறந்துட்ட. நீ மட்டும் இல்லை அந்த ஆஸ்பிட்டல் கட்டற ஆர்டருக்காக உன்னை விட பெரிய ஆளுங்க அனுபவசாலிங்க ஏன் அரசியல்வாதிங்க கூட போட்டி போடறாங்க, அவங்களைத் தாண்டி உனக்கு கிடைக்கனும்னா சொசைட்டியில பெரிய அளவுல பேரும் புகழும் பலமும் இருந்தாதான் முடியும், அரசியல்வாதிகளோட உன்னால போராடி ஜெயிக்க முடியாது ஆதி”
“சரிப்பா வேணாம், அந்த ஆர்டர் விடுங்க இப்ப என்னை தேடி வர்றவங்க என்ன சொல்றாங்க தெரியுமா, என்ன ஆதி உங்களுக்கு சொந்தமா ஆபிஸ் கூட இல்லையா உங்களுக்குன்னு கம்பெனியில்லையா, எந்த லைசைன்ஸ் வெச்சி நீங்க கட்டிடம் கட்டறீங்கன்னு கேட்கறாங்கப்பா, அதுக்காகவாவது நான் கம்பெனி தொறந்து லைசைன்ஸ் வாங்கனும்னு ஆசைப்படறேன்”
”ஆதி சொல்றதக் கேளு, இந்த பிடிவாதம் வேணாம் உன்னோட 10 வயசுல என் அப்பா உன்னை அவரோட அடுத்த வாரிசாக்கினாரு. அந்த நாள்ல இருந்து உனக்கு என்ன தேவையோ அதை நீயே செஞ்சிக்கற, யார்கிட்டயும் கேட்கறதில்லை, எல்லாமே உன் முடிவுதான், பெரியவங்க நல்லது கெட்டது பார்க்கறவங்க வீட்ல இருக்கோம், ஒரு நாளாவது எங்களை நீ மதிச்சியா” என கேசவமூர்த்தி மகனிடம் கத்த சுமித்ரா வந்தாள்
”என்னங்க நீங்க பையன் ஏதோ சொந்த கால்ல நிக்கனும்னு ஆசைப்படறான், அவன் மேல இப்படி கோபப்படறீங்களே”
”நான் ஒண்ணும் வேணாம்னு சொல்லலையே சுமித்ரா அதுக்கு அனுபவம் தேவைன்னு சொல்றேன், ஒரு வீடு கட்டிட்டா அனுபவம் வராது” என சொல்ல அதற்கு ஆதியோ
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
யப்பா யாமினி மூளை என்னமா யோசிக்குது..👌👏😵
ஆதி இனிமே ப்ரீதான்
யாமினிக்கு கொண்டாட்டம்
நைஸ் எபி