(Reading time: 6 - 12 minutes)

"என்ன சொல்ரீங்க தப்பான ஆள்கிட்ட பேசறீங்கன்னு நினைக்கிறேன்"

"கயல் கொஞ்ச நேரம் முன்னாடி தான் சந்திச்சோம்.நீங்க கயல் தானே."

அவனை சீண்ட விரும்பாதவளாய்"ஆங் நீங்களா...என்ன திடீர்னு கால்"

"அப்பாடா....தப்பிச்சேன்.நம்பர் கொடுத்தீங்க சரியா வாங்கினேனான்னு தெரிஞ்சிக்க தான்"ஆள் திண்ணும் புன்னகை.

" "

"ஒன்றும் பேச மாட்டீங்களா. நாம எங்க சந்திச்சிருக்கோம்னு தெரிஞ்சதா?"

"இன்னைக்கு இரயிலில்"

"அதில்லை அதுக்கும் முன்னாடி"

அது மறக்குமா அவனை சந்தித்து முதல் என் மனதின் ஆழத்திலிருந்து தோண்டி எடுத்த நினைவு.யோசனையில் பதில் அளிக்கமறந்தேன்.

"என்னமா பாடறீங்க கயல் அருமை"

"பாட்டா?நான் ஒன்னும் பாடலையே"

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"உங்க மௌனம் கூட சங்கீதம் தான் கயல்"

ஏனோ அவன் அழைக்கும் 'கயல்'பிடித்தது.சிரித்தேன்.மறுமுனையிலும் புன்னகை.

"என்ன சிரிக்கறீங்க.என்னை மறந்துட்டீங்களா?"

"இல்லை அறிவழகன் ஞாபகம் இருக்கு.நம் கல்லாரி விழா கமிட்டி ல சந்திச்சிருக்கோம்"

அப்பாடா...மூச்சு வந்தது எனக்கு"

"கல்லாரி நாட்கள் எல்லாம் பசுமையான இனிமையான நாட்கற் இல்லையா அறிவழகன்"

ஆமா"இரவரும் சில நொடி அந்த இனிமையில திளைத்தோம்.

"ம்ம் வேறென்ன விஷயம்"

"ஒன்றுமில்லை குட்நைட் கயல்"

"குட்நைட் அறிவழகன்"

ஏனோ மறுமுனையில் அவன் குரல் நின்றதும் இதயம் படபடத்தது.

"ஹலோ"

"சொல்லுங்க கயல் லைன்ல இருக்கேன்"

"கால் கட் பண்ண சத்தம் கேட்கலை..அதான்"அசடு வழிந்தேன்

"உங்கள கட் பண்ணமுடியலை கயல்.ஏதாவது பேசுங்க"

"என்ன பேச ..தெரியலைங்க"

"முதல்ல வாங்க போங்க நிறுத்துங்க"

"நீங்க?!"

"சரி கயல் நான் நிறுத்திட்டேன்.நீயும் நிறுத்து"

"அதெப்படி சட்டுனு உங்கள வா போன்னு சிரமம் அறிவழகன்.கொஞ்சம் டைம் கொடுங்க"

"டைம் எவ்வளவு வேணாலும் எடுத்துகோங்க.அப்போ நம்ம சந்திப்புகள் ஒன்னா செலவழிக்கப்போற தருணங்கள் நிறைய இருக்குங்கறீங்க"

அவன் கேட்பது புரிந்தவளாய்

"கண்டிப்பா அறிவழகன்"

"ரொம்ப நன்றி கயல்"

தொடர்நது அரைமணி நேரமாய் ஏதேதோ பேசினோம்.சிரிததோம்.மகிழ்ந்தோம்.மனம் நிறைந்து போனது.அலைபேசி அனைத்த பின்னும்அவன் குரலும் சிரிப்பும்என் மனதில்எதிரொலித்துக்கொண்டிருந்தது.அறிவழகன்!யாரிவன்.அவன்மீது எனக்கென்ன இத்தனை ஈர்ப்பு. அவன் குரலில் ஏனிந்து மயக்கம். அவன் முகம் பார்க்க ஏன் இந்த தவிப்பு.அறிவழகன் அவர் பெயர் உச்சரித்துக்கொண்டே மகிழ்ந்தது உள்ளம்

சிற்பம் செதுக்கப்படும்

Episode # 01

Episode # 03

Go to En Kathale story main page

{kunena_discuss:1244}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.