(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - என் காதலே – 03 - ரம்யா

En kathale

றிிவழகன்'ஓயாமல் நெஞ்சில் எதிரொலித்துக்கொண்டிருந்தது.கல்லூரியில் சில நாட்கள் மட்டும் மே பழகிய முகம் ஆனாலும் நெஞ்சு நிறைந்து ஆட்டிபடைத்தது.நாங்கள் இருவரும் ஒரே நிறுவனத்தின் இரண்டு கல்லூரிகளில் பயின்றோம்.எங்கள் சந்திப்பு சற்று வித்தியாசமானது.எங்கள் கல்லூரி ஆண்டு விழா வெவ்வேறு நாட்களில் நடப்பது வழக்கம் .அந்த வருடம் சிறப்பு விருந்தினர் வேண்டுகோளுக்கு இணங்க ஒரே நாளில் ஏற்பாடு செய்யப்பட்டது.இதை பெரிய விழாவாக கொண்டாட எணணி இரண்டு கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கலை நிகழ்ச்சிகள் செய்ய ஊக்கப்படுத்தப்பட்டனர்.

என் கல்லூரியின் என் பாடல் திறனுக்காக கலைநிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர் ஆனேன்.பாடல் பகுதி என் பொறுப்பு.இதில் அவன் கல்லூரி மாணவர்கள்களுடனும் சேர்ந்து அந்த வேலை செய்ய நேர்ந்தது. அங்கு தான் எங்கள் சந்திப்பு நேர்நதது.இருங்க...டூயட் இல்லை.எங்க முதல் சந்திப்பு தான் இது.இருந்தாலும் உங்களுக்காக ரொமாண்டிக்கா சொல்றேன்.சில்லென்று காற்று.......வெயில் வெளியேற முடியாத மேகக்கூட்டம்.......மழை எப்போது வேண்டுமானாலும் பூமி தொடும் அழகான நேரம்.......பெயர் பலகையில் ஏதோ பெயர் தேட்க்கொண்டு மூன்று மாணவர்கள்.

"என்ன பெயர் தேடறீங்க.நான் ஹேலப் பண்றேன்"என்றேன் ஒருவனிடம்

.திரும்பிய அவன் கண்கள் என் கண்களை நோக்கியவாறு பெயர் சொன்னான்.அவன் குறிப்பிட்ட பெயரை பலகையில் தேடிக்கொடுத்தேன்.நன்றி அவன் வாய் சொன்னது கண்கள் மட்டும் வேறேதோ சொன்னது.நட்பாய் கை நீட்டினான்.நானும் கை சேர்க்க....மேகம் மழை பொழிந்தது.

அதன்பின் கலைவிழா நிமித்தமாக எங்கள் சந்திப்புகள் அவ்வப்போது ஏற்பட்டது. சில சந்திப்புகள் சில பகிர்தலகள்.என் குரலின் இரசிகனாம் அவன்.மகிழ்ந்தேன்.நட்பும் இல்லாமல் காதலும் இல்லாமல் ஓர அழகான உறவாக இருந்தது.கலைவிழாவோடு அதுவும் முடிந்தது.அதை தொடர நாங்கள் இருவருமே முயற்ச்சிக்கவில்லை.கலைவிழாவில் அவன் வேண்டுகோளுககாக நான் பாடிய இளையராஜா

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெர்கிறது"

அன்று பாடிய பாடல் இன்றும் ஒலிக்கிறது.அன்று ஏன் அந்த பாடல் எனை பாடச்சொன்னான் என்று இன்று புரிவதாய் இருந்தது.கோடை மழைப்போல எங்கள் சந்திப்புகள் ஓய்ந்தது.ஆனால் காலம் யாரை எப்படி எப்போது சேர்ததுப்பார்க்கும் பிரித்துப போடும் யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் இதெல்லாம் முன்னமே தெரியக்கூடாதா என தோன்றும்.ஆனால் இந்த அறியாமை தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது. அடுத்தடுத்து என்ன என்ற தேடலில் தான்ஒரு கிக்.எண்ணவோட்டம கலைத்தது அலைபேசி.மறுமுனையில் யாதவ்

"கயல் எப்படி இருக்க...இரண்டு வாரமா பேசவே இல்ல?"

"யாதவ் உன்ன தான்டா நினைச்சிட்டிருந்தேன்"

"இது பொய்"

"இல்லடா உண்மை தான் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்"

"அதானே...என்னை பற்றி தான் நினைச்சியோன்னு பாரத்தேன்"

"டேய் அமைதியா கேளு....இன்னைக்கு யார பாரத்தேன் தெரியுமா?"

என தொடங்கி அறிவழகன் சந்திப்பு முதல் அலைபேசி உரையாடல் வரை சொல்லி முடித்தேன்.

"என்ன கயல் மலரும் நினைவுகளா?அது சரி என்றைக்காவது என்னை பற்றி இப்படி பேசிருக்கியா?"

"இதென்னடா கேள்வி பிறந்தது முதல் நமக்கு பழக்கம்.அடிதடி தொடங்கி அழகா மலர்ந்த சினேகம்"

"போதும் போதும் உன் பேச்சு....பேச்சு தான் உனக்கு மூளை காலி...."இப்படி வம்புகள் தொடங்கி பேசிக்கொண்டேயிருந்தோம்.அலைபேசியிவ் வம்புகளும் சண்டைகளும் சிரிப்புகளுமாய் நான் இருந்தால மறுமுனையில் யாதவ தான் என்று குடும்பமே அறியும்.ஒரு வழியாக பேசி ஓய்ந்தேன்.மனம் மட்டும் ஏனோ அசைப்போட்டுக்கொண்டே இருந்தது.

யாதவ் எத்தனை அழகான பெயர்.உயிர் தோழன்.ஆண் பெண் பேதமில்லாமல்எதையும் பேச முடியும் அவனுடன்.பிறந்தது முதல்சென்னை வரும் வரை என் கூடவே பயணித்த நிழல யாதவ்.அவன் நட்பில நெகிழ்ந்து போனாலும என் விரோதியாய் நினைத்த காலங்கள் உண்டு. அறியாத பருவத்தில்உண்டான சண்டைகள் எப்படி சமரசம்  ஆனது தெரியவில்லை.வயது கூடகூட எங்கள் நட்பு வளர்ந்தது. அவன் வீட்டில செல்லப்பெண் நான .என் வீட்டில் கடைகுட்டி அவன்.இன்று அறிவழகன் சந்திப்பு வரை ன வாழவின் அத்தனை நிகழ்வும் தெரியும் அவனுக்கு.

சென்னை வந்த புதிதில் நான பெரிதும் ஏங்கியது இவனுககாகவும் தான்.மிக எளிமையானவன். ஊரை பெரிதும நேசிப்பவன்.சொந்த ஊரிலேயை வாழ்க்கையை அமைத்து கொண்டான்.இதில் எனககு பொறாமை கூட உண்டு அவனிடத்தில..உதவி என்றால உயிரையும் கொடுப்பான். எனக்காக உலகையே மாற்றுவான்.அவன் என் வாழ்வின் பொக்கிஷம். கல்லூரி நாட்களில் எங்களை கண்டு ஆச்சரியப்பட்டோர் பல உண்டு.என் வாழ்க்கையில் எந்த நிகழ்விலும் அவன் நினைவு இல்லாமல் இருக்காது.அவனுடம் பேசியதில் கல்லூரி நாட்கள் மனதில் வந்த வந்து போனது.கல்லூரி நினைவுகளில் இன்று ஏனோ அறிவழகன் முகமும் அவன் நினைவுகளும் அலை மோதியது.ஏனோ மனதில் ஒரு இன்பம்.அலைபேசியில் குறுஞ்செய்தி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.