(Reading time: 10 - 20 minutes)

"கயல் உன்னை சந்தித்ததில் பூரிக்கிறது உள்ளம்.மறுமுறை சந்திக்க காத்திருக்கிறேன்"

அனிச்சையாக என் கைகளும் பதில் அனுப்பின

"நானும் அறிவழகன்".

அன்றையிலிருந்து ஒவ்வொரு நாளும் காத்திருந்தேன் மறுமுறை அவனின் தரிசனத்திற்காக.எப்படி என்னுள் நுழைந்தான என்றே புரியவில்லை..அலைபேசி உரையாடல்களோடும் இரயில்பயணங்களோடும் சனி ஞாயிறு சந்திப்புகளோடும் எங்கள் நெருக்கம் வளர்ந்த்து.இது நடபா காதலா விவாதம் தாண்டி காதல் தான் என்று புரியவைத்துக் கொண்டிருநதது.காற்று என் உயிர் தொடுகிறது.பூக்கள் இன்னம் அழகாய் சிரிக்கிறது மழைநீர் என்னை முத்தாடுகிறது.அவன் புன்னகையும் குரலும் மாறி மாறி செவிப்பாறையில் எதிரொலிக்கிறது.இது காதலா காதலா.காதல் என்ற மூன்றெழுத்து பிடித்துப்போனது.தேடி தேடி காதல் கீதம் பாட சொன்னது.கவிதைகள் படிக்க வைத்தது ஒரு சில எழுதவும் வைத்தது.அவனுக்கு அனுபபியும் வைத்தேன்.புன்னகை மட்டுமே பதிலாய் வந்தது.

இதென்ன நான் இப்படி மாற்ப்போனேன். அசாதிய உற்சாகம். உலகையே வளைக்கும் ஓர் துடிப்பு. அலைபேசி சிணுங்களில் பல மடங்கு துடிக்கும் இதயம்.சத்தமான சபையிலும் அமைதி கிடைக்கிறது.ஏதோ ஆனந்த நினைவுகள்...பல கனவுகள். கண்டதும் காதல் என்று அவனிடம் வீழ்ந்தேனா?.பாறையால் ஆன என் இதயம் இப்படி பனியாய் உருக காரணம் என்ன?.என்னை ஈர்த்தது வெளிதோற்றமா?அவன் கதைகளில் வரும மன்மதன் அல்ல.தமிழன் நிறமும் தமிழன் உரமும் கொண்ட சாராசரி மனிதன்.அவன் பேச்சின் வசீகரமா?இருக்கலாம்.உண்மை மட்டுமே அழகாய் பேசும் அவன் இதழ்கள். எவ்வளவு பாரம் நெஞ்சில் இருந்தாலும் அரைமணி அவனுடனிருந்தால் பஞ்சாய் பறந்து போகும்.

எங்களுக்குள் கருத்து ஒற்றுமை கிடையாது. ஒரு விஷயத்தில அவன் பார்வையும் என் பாரவையும் வேறு வேறு.ஆனால் தன் பார்வையே சரி என்று இறுமாப்பு கொணடதில்லை.இதுவும் ஒரு கோணம் ன்று முன்வைப்பான.இந்த வேற்றுமை தாண்டி அவன் அளிக்கும் மதிக்கும கருத்து சுதந்திரம் அசாத்தியமானது.பகட்டு நாகரிகம் இல்லாமல் இறுமாப்பு இல்லாமல் தலைக்கணம் சிறிதுமில்லாமல் கடை ஊழியர்வரை அவன் காட்டும் அன்ப மரியாதை பகிரும் அந்த புன்னகை...ஆச்சரியத்திற்குரியது. பரபரப்பான இந்த நகர வாழ்வில் தொலைந்து கொண்டிருக்கும் நற்பண்புகள் அவை.தான் எந்த மனநிலையில் இருந்தாலும் அடுத்தவர் சூழல தெரிந்து முதிர்ச்சியாய நடந்து கொள்வான்.ஆனால் அழுத்தக்காரன்.தன் மனவோட்டம் வெளிவர தடை போட்டுவிட்டால் அதை அறிந்து கொள்ளவே முடியாது.என் முகம் பார்த்து என் மனம் அறியும் கலை கற்று வைத்திருந்தான். இந்த குணங்களில் என் அப்பாவை அவனில் கண்டேன். அவனிடம் சரிநதேன்.நற்பண்புகள் நிறைந்த நிறைய நபர் நாம் சந்திக்கக்கூடும் ஆனால் இதயம் தொடுவது ஒருவர் தான். முதல் பார்வையிலேயே அவனிடம் ஈர்க்ப்பட்டது உண்மை ஆனால் பழகபழக அவன் என்னுடையவன் என்று இதய சிம்மாசனத்தில் அமர்த்தி விட்டேன்.

மனித வாழ்க்கை இந்த ப்ரபஞ்சத்தின் சிறு தளி அதில் நம் ஆயுட்காலம் துளியிலும் துளி.நீர்குமிழிப்போல என்று அது உடையும் தெரியாது.இதை அறிந்து கொண்டால் வேற்றுமைகள் வராது.நமக்கு வரும் இன்பம் துன்பம் எல்லாம் வாழ்வின் அங்கம்.நாம் சந்திக்கும் நபர்கள் நம் மனதில் நிற்பதும் மகிழ்விப்பதும் அல்லது அழவைப்பதும் நம் கையில். மகிழ்ச்சி ஆனந்தம் வெளிவிஷயங்களில் அல்ல.நாம் எதையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில்.மள அமைதி ஒன்றிருந்தால் போதும் எதையும் உள்ளது உள்ளவாறு எடுத்துக்கொண்டு நடக்க முடியும்.இதை போன்று உயர்ந்த சிந்தனைகள் பல அவனிடம் கற்றது.இத்தனை தெளிவாக ஆழ்ந்த சிந்தனைகள்தான் அவன் நம்புவதும் பின்பற்றுவதும்.இத்தனை முதிர்வான எண்ணங்கள் நான் இதற்கு முன் கண்டது என் அப்பாவிடம்.

இந்த முகம் மட்டுமல்ல அவனுக்கு இன்னொரு முகம் உண்டு. பார்க்க மன்மதனாய் இல்லாவிட்டாலும் பேச்சில் மன்மதனின் அண்ணன். மயங்கச் செய்து விடுவான்.வெள்ளை மனமும் வெள்ளை சிரிப்பும் குறும்பத்தனமும சேர்ந்த என் காதலன்.என் மனதின் கொள்ளைக்காரன்.எங்களுக்குள் காதல் பூ அழகாய் பூத்துக்கொண்டிருக்க இருவருக்குள்ளும் பகிர்ந்து கொள்ளா இன்ப அவஸ்த்தைகள் பல.எத்தனை பேச்சுகள் எத்தனை பகிரதல்கள் எல்லாம் தித்திப்பு தித்திப்பு. சந்திக்காத தினங்கள் கூட எங்களுககுள் எங்கள் நினைவுகள் தான் பெரிதும் ஓடிக்கொண்டிருக்கும். எஙகள் நெருக்கம் அதிகரித்து கொண்டு வந்தது.ஒரு நாள் என் அலைபேசி அழைக்க.

"கயல் உன்னை பார்க்கனும்...வரமுடியுமா.கோவிலில் இருக்கேன்."

"கண்டிப்பா...இதோ வரேன்"

காலை வேளையில் அவன் அழைப்பு பரபரப்பு தர வேகமாக தயாரானேன்.ஏதோ ஓர் எதிரபாரப்புடன் என் ஸ்கூட்டி உதைத்து பறந்தேன்.கோயில் வாசலில் அவன் வண்டி நிறுத்தியிருக்க அதை உரசும்படி என் வண்டியை நிறுத்தினேன்.அந்த உரசலில் கூட ஏதோ ஓர் ஆனந்தம்.கிறுக்கு ஏறிய ஆனந்தம்.உள்ளே சென்று அவனை கண்டேன்.

"கயல்!ஒரு விஷயம் பேசனும் வா கபே போகலாம்...சாமி பார்த்துட்டு வா வெயிட் பண்றேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.