(Reading time: 10 - 20 minutes)

கோவிலின் புனிதம் பரிந்த ஓர் இளைஞன். நெகிழ்ந்தேன்.வெளியே வந்ததும் எங்கள் வண்டிகளின் உரசல் பார்த்து என்னையும் பார்த்து ஓர் ஓரப்புன்னகையும் பூத்தான். என்னை கொள்ளும் புன்னகை.

"என்ன அறிவு"

"உன் வண்டி உரசி நின்றிருக்கு?"உதடு கடித்து ஒற்றை புருவம் உயர்த்தி அழகாய் கேள்வி ஒரு புன்னகையுடன்.

என் இதயம் மொத்தமாய் சரிந்தது

கஃபே சென்று அமர்ந்தோம்.நீண்டமௌனம்.

"அறிவு என்ன பேசனும்"ஆவலாய் கேட்டேன்.

"நம்ம நாட்டில இந்த வாகனங்களால பொல்லுஷன் அதிகமாயிடுச்சு"அவன் கைகள் சாவிதுழாவி கொண்டிருந்தன.ஏமாற்றம் அடைந்தேன்..

"அதற்கென்ன ஏதாவது மாநாடு போடப்போறியா?"

"ச்ச அவ்வளவு பெரிய எண்ணம் எல்லாம் எனகில்லை.நம்மால முடிஞ்ச வரை ஏதாவது காற்று மாசு படாம பார்த்துக்கலாம்"

"அதெப்படி"

"இப்போ ஒரே இடத்துக்கு போகிறப்போது சேர்ந்து ஒரே வண்டியில போகலாம் மாசு குறையும்"

"ஆமா கார்பூலிங்க்"

என் மனம் என்னை வைதது.அவன் ஏதோ சொல்ல புக மரித்து என் மேதாவித்தனம் காட்டியது தவறென அவன் மௌனம் கூறியது.

"சாரி அறிவு நீ சொல்ல வந்தத சொல்லு நான் குறுக்க பேசலை...சொல்லு.."

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

என்னை அறியாமல் என் கை அவன் கைக்குள் புக சட்டென்று பிடித்துக்கொண்டான்.ப்பாபா என்ன ஓர்  அழுத்தம்.என் கையை அவனிரு கைகளால் எடுத்து அதில் அவன்விரல்கள் உரச....மெல்ல அவன் விரலுடன் என் விரல் பின்னி உள்ளங்கை உஷ்ணம் மறிமாறிக்கொள்ளும் நேரம்"சார் யுவர் ஆர்டர்"இந்த காதல் சீண்டல் களைந்ததில் மண்ணுலகம் வந்த நான் என் கையை சட்டென்று விலக்க என் சிறு விரலோடு அவன் சிறுவிரல் கோர்த்துக்கொண்டான். மெல்ல அவன் முகம் நோக்க எங்கள் கண்கள் மோத்க்கொள்ள சிவந்தேன்.

"கயல் நான் என்ன சொல்ல வரேன்னா..நீயும் நானும் அருகிலேயே தான் இருக்கோம்.இப்போ ஒரே இடம் தான் வந்திருக்கோம்...ஒரே வண்டியில் வரலாமே"

"இது தான் முக்கியமான விஷயமா?இத சொல்லத்தான் வர சொன்னியா?"

ஓரப்புன்னகையுடன் தோள் உயர்த்தி "ஆமா..நீ என்ன நினைச்ச"

என் தவிப்பை உள்ளுக்குள் இரசிப்பதை உணர்ந்தேன். இராட்சஸன்.

"வேறேதும் பேசனுமா?"

"ஆமா...."

"அடுத்து என்ன பசுமை புரட்சி யா மரம் நடனுமா?விவசாயம் பண்ணணுமா?"

"நாம் சேர்ந்தா மரம் வைக்கலாம் விவசாயம் பண்ணலாம் இன்னும் என்னவோ என்ன வேணா பண்ணலாம் "

ஏதோ புரிந்ததாய் இருந்தது.ஏமாற்றம் தந்த கோபத்தில"என்ன"சற்று உச்சமாய் தான் கேட்டுவிட்டேன்.

"பயமுறுத்தாத மா சின்ன பையன்.அப்பறம் டக்னு சொல்லிபுடுவேன் வம்பாயிடும்"

"என்ன நேரா சொல்லு"

விரல் கோர்த்தபடியே......

ஒரே லைன் தான் ஆனால் திக்குது.அத விடு உனக்கு சம்மதமா"

"எதுக்கு?"

"என் கூடவே வர"

"?"

"என் வண்டியில் என் கூட வர சம்மதமா"

"சம்மதம்".

காலை கதிரவன் மெல்ல தன் கிரணங்களை எங்கள் மீது தூவினான்.

சிற்பம் செதுக்கப்படும்

Episode # 02

Episode # 04

Go to En Kathale story main page

{kunena_discuss:1244}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.