Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 16 - ராசு - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 16 - ராசு

handsTogether

புயலின் வேகம் கண்டு சிவரஞ்சனிக்குப் பயம் வந்தது.

மின்சாரம் வேறு இல்லை. அவள் படுக்கப் போகும் வரையில் மின்சாரம் இருந்தது. அதன் பிறகு எப்போது நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை. செல்போனை எடுத்து அதிலிருந்த டார்ச்சை உபயோகித்தாள்.

காற்றினால் ஜன்னல் திறக்காமல் இருக்க வழி செய்தவள் அறையை விட்டு வெளியில் வந்தாள்.

மற்ற இடங்களில் என்னவெல்லாம் நடந்திருக்கிறதோ? கவலை அப்பிய முகத்தோடு வெளியில் வந்தாள்.

அங்கே அவளுக்கு முன்பே மாமனார், மாமியார் உடன் கொழுந்தன் சரவணனும் நின்றிருந்தான்.

எதற்கும் இருக்கட்டுமே என்று முன்தினம் கொஞ்சம் மெழுகுவர்த்தி வாங்கி வந்திருந்தான் சரவணன். அதைத்தான் இப்போது ஏற்றியிருந்தனர்.

வீட்டிற்குள் வந்த தண்ணீரை அள்ளி அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தான் சரவணன்.

அந்த புயலின் வேகத்திலும் அவளது மூத்த கொழுந்தன் பிரபாகரன் வெளியில் எழுந்து வந்தானில்லை.

எல்லோரின் முகமும் கவலையோடுதான் காணப்பட்டது.

சமையல் அறைப்பக்கம் பார்த்த அவள் அதிர்ந்தாள்.

அங்கே காற்றிற்காக வைக்கப்பட்டிருந்த பெரிய வட்ட வடிவ ஓட்டை வழியாக மழை நீர் உள்ளே கொட்டிக் கொண்டிருந்தது.

பைப்பைத் திறந்து தண்ணீர் கொட்டுவது போல் கொட்டிக்கொண்டிருந்தது.

வெளியில் பார்க்க முயன்றாள். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.

“சிவா. அங்கே இப்ப போக வேண்டாம். உள்ளே வா.” என்ற வடிவு, “என்னங்க. காத்து இத்தனை வேகமா இருக்கு?”

என்று சண்முகத்திடம் கேட்டாள்.

“இந்த மாதிரி காற்றை நானும் பார்த்ததில்லை வடிவு.”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவரது குரலிலும் கவலை தெரிந்தது.

வீட்டிற்குள் இருந்தும் காதை அடைத்தது.

என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து அமர்ந்திருந்தனர்.

சிவரஞ்சனி சரவணனுக்கு உதவியாகத் தானும் தண்ணீரை அள்ளிக்கொட்டலானாள்.

அப்போது அவளது செல் ஒலி எழுப்பியது.

கருப்பையாதான் அழைத்திருந்தான்.

அவள் அவனது அழைப்பை ஏற்று காதில் வைத்தாள். ஆனால் அவனிடம் அவள் பேச ஆரம்பிக்கும்போதே அழைப்பு துண்டிக்கப்பட்டது. புயலின் வேகத்தால் செல்போன் கோபுரம் பாதிப்படைந்ததால் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

எப்போதும் வர்றேன் வர்றேன் என்று பயமுறுத்தும் புயல் வேறு பக்கம் நகர்ந்துவிடும். இப்போதும் அது மாதிரிதான் நடக்கும் என்று நினைத்திருந்த அனைவரின் எண்ணத்திலும் மண்ணையள்ளிப்போட்டது இயற்கை.

கொஞ்சம் கொஞ்சமாக புயலின் வேகம் நின்றது. மெதுவாக கதவைத்திறந்து வெளியில் சென்றனர்.

அவர்களைப் போன்றே மற்றவர்களும் எட்டிப்பார்த்தனர்.

எதிர்த்த வீட்டின் மேல் வேயப்பட்டிருந்த தகரம் அப்படியே பெயர்ந்து பக்கத்து மனையில் விழுந்திருந்தது.

‘அப்பாடா. புயல் நின்றுடுச்சு.’ என்ற நிம்மதியில் இருந்தவர்களை மீண்டும் அச்சுறுத்தும் வகையில் ஆரம்பமானது புயல்.

வெளியில் நின்றவர்கள் வீட்டின் உள்ளே நுழைந்தனர்.

முன்பு வந்த புயல் கூட பரவாயில்லை என்று நினைப்பது போல் அதிபயங்கரமாக இருந்தது இரண்டாம் முறையாக வந்த புயல்.

இப்போது வெளிச்சம் வந்திருந்ததால் வெளியில் பார்க்க முடிந்தது.

காற்றின் வேகத்தில் மரங்கள் பயங்கரமாக அசைந்தன.

தென்னை மரத்தில் இருந்த பச்சை மட்டைகள் அப்படியே பறந்தன.

ஏதோ சினிமாவில் கிராபிக்சில் பார்ப்பது போல் காட்சிகள் தெரிந்தன.

எதுவும் செய்ய இயலாமல் அப்படியே அமர்ந்திருந்தனர்.

புயல் ஓய்ந்திருந்தது.

வீட்டின் பின்பக்கம் அவர்களுக்கு தென்னந்தோப்பு இருந்தது.

அந்தப் பக்கம் சென்றிருந்த மாமனாரையும், கொழுந்தனையும் காணவில்லை என்று சென்ற சிவரஞ்சனி அதிர்ந்து நின்றாள்.

புயலுக்கு முன்பு அது சோலைவனமாய் காட்சியளித்தது.

இப்போதோ?

இந்த இடமா அன்று கணவனுடன் தான் தனித்திருந்த இடம். அப்போது எத்தனை இன்பமாய் இருந்தது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 16 - ராசுmaya deva 2019-01-06 13:22
super super.... sikiram adutha episode uplodekaka romba aarvammaka wait pandren.... ennavo intha storyil naaney irupathu pol feel aaguthu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 16 - ராசுsaaru 2019-01-01 21:41
Nice update rasu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 16 - ராசுRaasu 2019-01-01 22:07
Thank you Saaru.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 16 - ராசுmadhumathi9 2019-01-01 05:38
:clap: nice epi.puyalin thsakkam kavalai alikkirathu.waiting to read more. :thnkx: (y) :GL: :clap: Happy New Year to All
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 16 - ராசுRaasu 2019-01-01 22:05
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 16 - ராசுAdharvJo 2018-12-31 21:25
Excellent Rasu ma'am :clap: :clap: :hatsoff: andha trees paduthuttu irukura scene rombha pidichadhu amam yaru paduka sonnadham facepalm highlight of the epi saravanan Agri mele avaru uyiraiye vachi irukaru and adhai ninga miga azhaga portray seithu irukinga :hatsoff: when he started crying enamo ethon irundhadhu idhukka ippadi ahurarun kuda thonichi considering the situation but indha moment la kuda saravanan thudipadhu really heart touching. Hatsoff to the agriculturist. Secondly Mr BB Oda selflessness, impressive! Thank you for such an valuable epi subha ma'am and wish you happy and prosperous new year. Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 16 - ராசுRaasu 2019-01-01 22:05
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 16 - ராசுrspreethi 2018-12-31 18:56
Nice update... Story la yaarkum yedhum aagala bt nijathula periya badhippu... Namma makkal adhula irundhu meendu varanum avangaluku udhavi kidaikanum my yen prathanai yeppavum irukku... Putthandu vazhthukal Rasu mam...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 16 - ராசுRaasu 2018-12-31 19:06
Thank you Preethi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 16 - ராசுmahinagaraj 2018-12-31 18:09
நல்லா இருந்தது மேம்.... :clap: :clap:
ரொம்ப பெரிய பாதிப்பு தான் மனதளவிலும்... :sad: :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 16 - ராசுRaasu 2018-12-31 18:41
Thank you Mahinagaraj.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

YNEA
13
VD

KNP

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

IOKK
16
Siva

NKU

Tha
17


VTKS

UNMT

Mor

AN

Eve
18
EVUTNiNi
19
MMSV

ILU

YNEA
20
GM

KNP

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24


VTKS

UNMT

* Change in schedule / New series
* On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top