(Reading time: 12 - 24 minutes)

அங்கே நின்றிருந்த மரங்கள் எல்லாம் சொன்னதைக் கேட்கும் குழந்தைகள் போன்று சமர்த்தாய் ஒரே சீராய் படுத்துக் கிடந்தன. யார் சொன்னது அவற்றை படுத்துக்கொள்ளும்படி.

அவளுக்கு கண்களில் குளம் கட்டியது. நின்றிருந்த ஓரிரு மரங்களும் சாய்ந்துகொண்டிருந்தன.

வீட்டிற்குள் நுழைந்த சண்முகம் நெஞ்சில் கைவைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

சரவணன் அப்படியே தோப்பில் அமர்ந்திருந்தான்.

அவள் அவன் அருகே சென்றாள்.

“சரவணா.”

அவள் அழைத்ததும்தான் தாமதம்.

அவன் அப்படியே அவள் காலடியில் சுருண்டு அழ ஆரம்பித்தான்.

அவள் அதை எதிர்பார்க்கவில்லை.

“சரவணா.”

அழைத்துக்கொண்டே அவனருகே அமர்ந்தாள்.

அவளறிந்த சரவணன் இப்படியில்லை.

அவன் எப்போதும் கலகலப்பானவன். அவன் இருக்குமிடம் எப்போ

...
This story is now available on Chillzee KiMo.
...

ியவங்க இடிஞ்சுபோயிருக்க நேரத்தில் நீதானே பார்த்துக்கனும்? மாப்பிள்ளை இருந்திருந்தால் எல்லாம் அவர் பார்த்துக்குவார். இப்ப அவரோட இடத்தில் இருந்து நீ பார்க்கனும். ஓடு ஓடு. முதல்ல குடிக்க ஏதாவது கொண்டு வா.”

அவர் சொன்னதும் அதற்காகவே காத்திருந்தது போல் சமையல் அறைக்குள் நுழைந்தாள் சிவரஞ்சனி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.