(Reading time: 12 - 24 minutes)

குளிருக்கு இதமாய் இருக்கட்டும் என்று சுக்குக் காபி தயாரித்தாள்.

வடிவு எப்போதும் ஒரே மாதிரி பானங்களை தயார் செய்ய மாட்டாள்.

அதுவும் டீ தயாரிக்கும் போது சுக்கு, மல்லி என்று எதையாவது போட்டுத்தான் தயாரிப்பாள்.

அவள் உள்ளே நுழையும்போது சந்திரசேகர் சண்முகத்திடம் பேசிக்கொண்டிருந்தார்.

“சம்பந்தி. நீங்க எதுக்கு இப்படி இடிஞ்சு போய் அமர்ந்திருக்கீங்க?”

“என்ன பண்றது சம்பந்தி. எல்லாமே போயிடுச்சே.”

“அதை எல்லாம் நீங்கதானே உருவாக்கினீங்க? இப்ப கவலைப்படறதை விட்டுட்டு இனி என்ன செய்யனும்னு யோசிங்க.”

“நீங்க சொல்றது சரிதான் சம்பந்தி. நான் உருவாக்குனதுதான். அப்ப வயசு இருந்துச்சு. உழைக்க உடம்பில் தெம்பும் இருந்துச்சு. ஆனால் இப்ப இரண்டுமே இல்லையே. என்ன செய்யறது?”

“எது வேணும்னாலு

...
This story is now available on Chillzee KiMo.
...

ு எதிர்பார்க்கவில்லை. நம்ம இடத்திற்குத்தான் இந்த அளவிற்குப் பாதிப்பு என்று தெரியவில்லை. போனிலும் பேச முடியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று கிளம்பி வந்தேன்.”

“சரி உள்ளே போங்க மாப்பிள்ளை. ரொம்ப களைச்சுப் போயிருக்கீங்க.”

அவன் உள்ளே நுழைந்தான்.

கண்கள் மனைவியைத் தேடியது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.