Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - சுஷ்ருதா – 04 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - சுஷ்ருதா – 04 - சித்ரா

sushrutha

வள் முகம் இப்போது முழுவதும் சரியாகி  நார்மலாக இருந்தது .

கூட வந்திருந்த வயதான பெண்மணி அவள் அம்மாவாக இருக்க கூடும் என்பதை சாயல் சொன்னது .

அவள் முகம் சற்றே வயது முதிர்ந்தாள் இப்படித்தான் இருக்குமோ என்பதுபோல்  அத்தனை  ஒற்றுமை இருந்தது ,

அந்தம்மாளுக்கு நடக்கும்  போது  ,முகத்தில் சிறு அவஸ்தை தெரிந்தது ..

கூடவே அந்த முகத்தில் ,ஒரு மெல்லிய சோகம் திரை போல் படிந்திருப்பதை கண்டான் .

அவள் முகத்தில் அது போல் எந்த திரையும் இல்லை ,வழக்கமான நிமிர்வுடன் ,காயமோ ,கன்றளோ  இன்றி பளீரென்று மின்னியது .

அதை திருப்தியுடன்  பார்த்தபடி   லேசாய் புன்னகைத்து ,எப்படி இருக்கீங்க இப்போ என்று கேட்க வந்தான் .

அவள் கண்களில் அவரசரமாய் ஒரு மறுப்பை கண்டான் .

ஓஹோ ...அவள் இங்கு வந்ததை ,தனக்கு பட்ட அடியை  மறைக்கிறாள்  என்பதை நொடியில் புரிந்து கொண்டான் .

சோ தன்  வழக்கமான '' சொல்லுங்க'' வில்   தொடங்கினான் .

அந்த அம்மாவிற்கு முதுமைக்கே உண்டான பிரச்சனைகள் இருந்தன 

நடந்தால் மூச்சுவாங்குவது ,முழங்கால் மற்றும் முதுகு வலி ,என்று கிட்ட தட்ட  ஐம்பது வயதை தாண்டிய பெரும்பான்மை பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தாம் ,கூடவே இரண்டு கால்களிலும் ஆணி !

அதுதான் அவர்கள் அவஸ்தையின்  காரணம் என்று கண்டுக்கொண்டான் .

அவர்களை  கௌசில்  படுக்கவைத்து இரண்டு கால்களையும்  நன்றாக ஆராய்ந்ததில் ,சின்னதும் பெரியதுமாக நிறையவே இருந்தது ,ஒன்று இரண்டு  பெரிதாகவும் ,கால்களை ஊனும் இடத்தில்  இருந்து நடக்கும்  போது  வலியை  கொடுக்கிறது என்று கண்டுகொண்டான் ,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மத்தபடி கால்கள் சுத்தமாக வெடிப்புகள் இன்றி இருந்தது ,அவர்கள் அதை பராமரிக்க எடுத்திருக்கும் முயற்சியை காண்பித்தது .

இருவரையும்  பார்த்தபடியே ''கொஞ்சம் நிறைய ஆணி இருக்கு ,ஒன்னு ரெண்டு  தவிர மிட்சத்தை  சீக்கிரம் சரிபண்ணிடலாம் ,

வீட்டுலையும் செருப்பு போட்டு நடங்க ,அதோட இந்த மருந்துகளை போடுங்க ,சரி ஆயிடனும் ,அப்படி ஆகலைனா  ,அப்புறம்  வேற வழி இருக்கு ,சரி பண்ண ,அதை முயற்சிக்கலாம் ''

''என்ன வழி  டாக்டர் ''என்றாள்  அவள்  முதல் முறையாக வாயை திறந்து 

இப்போது அவளை நேராக பார்த்தபடி ''சூடு வைத்து தீய்த்து எடுப்பாங்க ''என்றபோது அவள் முகத்தில் அதிர்ச்சியை கவனித்து ,சிவப்பு இல்லாத கண்களில் நன்றாவே உணர்ச்சிகள் தெரிகிறது என்று நினைத்துக்கொண்டான் .

அதுவரை ஒரு ஓரமாக படுத்திருந்த அவன் மனசாட்சி எழுந்து வந்து அவன் மண்டையில் நங்கென்று குட்டியது !

அவள் மணமானவள் ,குழந்தையும் இருக்கு ,நீயோ பிரியாணி விற்பவன் இல்லை , ஒரு மரியாதைக்குரிய டாக்டர்.......பக்கி  ,அதை நினைவில் வச்சுக்கோ என்றது 

அதனால் அவன் எண்ணங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு  ஒரு மருத்துவனாக  அவள் கவலைக்கு பதில் சொன்னான் 

''வலி இருக்காது ,அப்படி பார்த்து தான் பண்ணுவாங்க ,சின்ன புரசீஜர் தான் ,பட் அதுக்கு கூட அவசியம் இருக்காது ,நான் சொல்றதை  முயற்சிக்கட்டும் ,சரி ஆகலைனா  தான் அதுக்கு போகணும் ''என்று தன் வழக்கமான  சமாதானத்தை செய்து அவள் முகத்தில் இருந்த கவலை மறைவதை திருப்தியுடன்  கண்டுகொண்டான் .

அப்படியே  உன் முகத்தில்  வலி ஏதும் இல்லியா,உன் வாழ்வில் பிரச்சனை என்ன  என்பதையும் சொன்னால் ,  சந்தோசமாக இருக்கும் என்று அவன் நினைக்கும் போதே ,

அவன் மனசாட்சி  கவலையுடன் மறுபடி களத்தில்  இறங்கியது ..

உன் வேலை சரி பண்ணுவது மட்டுமே ,அவர்கள்  பிரச்சனை உனக்கு  தேவை இல்லாதது என்று... 

உண்மைதான் ,பொதுவாக  நோயாளியே  முன்வந்து தன் சொந்த கதை ,சோக கதையை மருத்துவரிடம் பகிர்த்தாலும்  ,அதை காதில் வாங்கி அவர்கள்  நிலை புரிந்து ,மருத்துவம் செய்தபின் ,அதை மறந்துவிட வேண்டும் என்பதே மருத்துவ தர்மம் ,

கூடவே அதைப்பற்றி வேற யாரிடமும் செல்லாதிருப்பதும்  ,அத்துடன் தோ  இது போல் அவர்களே அதை பற்றி பேச விரும்பாத போது  ,அதையும் இயல்பாக எடுக்க தான் வேண்டும் .

மற்றபடி அவள் பர்சனல் வாழ்க்கையின் சிக்கல்களை தீர்க்க ,அவளே இவனை அணுகினால் தான் உண்டு ..

அப்போதும் அது இவனது துறை ஆகாது ..என்பதை  யோசிக்கும்போதே  அப்படியாவது அவளுக்கு ஏதும் தேவை இருப்பின் அதை தான் சந்தோசமாக நிறைவேற்றுவோம் ,என்றுதான் அடங்காமல் அவன் சிந்தனை சென்றது .

என்ன செய்வது மருத்துவன் என்ற போதும் ,அவனும் மனிதனே !

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Like Chitra Kailash's stories? Now you can read Chitra Kailash's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
  • Sushrutha (Updated fortnightly on Friday Morning)
Add comment

Comments  
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 04 - சித்ராsaaru 2019-01-06 07:16
Nice update...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 04 - சித்ராPadmini 2019-01-04 17:31
nice update Chitra!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 04 - சித்ராmahinagaraj 2019-01-04 15:35
ரொம்ப நல்லாயிருக்கு மேம்... :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 04 - சித்ராSrivi 2019-01-04 11:58
Super update..Ella story layum ippide thidukku thodarum potta enna panradhu.. What's the update that Shinde would have given? Oru velai, indha baby should be her sisters or seethave Pavithra Ku athaiya? Bayngara suspense maintaining polaye..
Happy New year sis..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 04 - சித்ராAdharvJo 2019-01-04 10:49
:D acho sasi, shinde idam solluvadhukku badhila namba vasul raja mbbs kuda otti kittu irupare prabhu sir kitta solli irukalam facepalm shinde appadi ena information collect seithuttu vandharun therindhu kola waiting. Ivanga rendu peroda frndship and the casual convo was nice. Sasisatchi is super cute chitra ma'am :dance: but dr kula instant aga ippadi oru heart disease ah :Q: Look forward to read the next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 04 - சித்ராmadhumathi9 2019-01-04 05:42
:clap: nice epi.kooduthalaana pages kodukka mudiyuma? Waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top