Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 15 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 15 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

ந்த ஜொள்ளு ரிஷியிடம் இருந்து தப்பித்து பார்க்கிங்கை அடைந்தவள் தன் ஷ்கூட்டி டிக்கியை திறந்து அதில் உள்ளே வைத்திருந்த அவளுடைய அந்த ஷ்கார்ப்பை எடுத்து அணிந்து முகத்தை நன்றாக மூடி கட்டிக்கொண்டு, தலையில் ஹெல்மட்டை அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்து தன் முகம் தெரியவில்லை என்று உறுதி செய்துகொண்டு, பின் தன் ஷ்கூட்டியை ஷ்டார்ட் பண்ணி, அதை வேகமாக முறுக்கினாள் ஆதி வருவதற்கு முன்பே வீட்டிற்கு போய் விடவேண்டும் என்று..

வழியில் அவன் கார் எங்காவது இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்துகொண்டே வந்தாள்..  நல்ல வேளையாக ஆதித்யா வரும் முன்னே வீட்டை அடைந்தாள்...எல்லா கடவுளுக்கும் நன்றி சொல்லி, வேகமாக தன் வண்டியை உள்ளே எடுத்து வந்து வைத்து அதற்கு முன்பு போட்டிருந்த மாதிரி கவரை போட்டு மூடி விட்டு நிம்மதி மூச்சு விட்டாள்.. பின் தான் வாங்கி வந்திருந்த கவரை எடுத்து கொண்டு தன் அன்னையிடம் சென்று காட்டிக் கொண்டிருக்கும் பொழுதே ஆதித்யா வந்துவிட்டான்..அவனை கண்டவள்

“தேங்க் காட்.. ஜஷ்ட் மிஷ்... நல்ல வேளை.. இவன் வர்ரதுக்குள்ளே வந்துட்டேன்..செம ஷ்பீட்...

பவித்ரா.. சைக்கிள் ரேஷ் மாதிரி ஷ்கூட்டி ரேஷ் வச்சா கப் உனக்குதான்..  “ என்று மனதுக்குள் தனக்கு ஹை பை கொடுத்துக் கொண்டாள்..

இந்த முறை முன்னெச்சரிக்கையாக தன் தலையை குனிந்தபடியே உள்ளே வந்தவனை கண்டு சிரித்துக் கொண்டாள்... அவளின் சிரிப்பை கண்டவன் அவளை முறைத்தவாறே உள்ளே வர, பார்வதி அவனை வரவேற்று அவன் அருகில் வந்து  தன்  மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த பரிசை கொடுத்தார்...

அதை கண்டவன் பதறி,

“இதெல்லாம் எதுக்கு அத்தை?? .. என்கிட்ட நிறைய ட்ரெஷ் இருக்கு.. “ என்று மறுத்தான்...

“சும்மா வாங்கிக்கங்க பாஷ்.. நீங்க எவ்வளவு தான் உங்க சொந்த காசு போட்டு வாங்கினாலும் இந்த மாதிரி மாமியார் வீட்ல ஓசியில கிடைக்கிறதை வாங்கி போட்டு பாருங்க.. அதுல ஒரு தனி சுகம் இருக்கும்.. “ என்று அவன் காதில் கிசுகிசுத்து சிரித்தாள்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவனும் அதற்குமேல்  மறுக்காமல் அவர் காலில் விழுந்து  ஆசிர்வாதம் வாங்கிகொண்டு அவர் கொடுத்த பரிசை வாங்கி கொண்டான்.. பின் அந்த மோதிரத்தை எடுத்து   பவித்ராவிடம் கொடுத்து மாப்பிள்ளைக்கு   போட சொன்னார் பார்வதி.. 

அதை கேட்டு அதிர்ந்த பவித்ரா

“அவரே போட்டுக்குவார் மா.. நீங்க அவன் .. அவர் கையில கொடுங்க.. “  என்று சமாளிக்க,

“இருக்கட்டும் பவி.. நீயே போட்டு விடு.. “ என்று அவர் முடிக்க,  மறுக்க வேறு வழி இல்லாமல் அந்த மோதிரத்தை வாங்கினாள் பவித்ரா...

பார்வதியும் இங்கிதம் தெரிந்தவராக சமையல் அறைக்குள் சென்று விட

 அவனோ தன் கையை நீட்டாமல் அவளையே குறும்பாக பார்த்து சிரித்துகொண்டு இருக்க, சிறிது நேரம் பொறுத்தவள் அவன் கையை பிடித்து இழுத்து அவன் விரலில் மோதிரத்தை அணிவித்தாள்...

தன் விரல் பிடித்து மோதிரம் போடும் அவளையே மையலோடு நோக்கினான் ஆதி .. அவளின் அந்த மென்மையான விரல் பட்டு சிலிர்த்தது அவன் உள்ளே... அந்த மோதிரம்   அவனுக்கு ரொம்ப பிடித்தது..

“என்ன பேபி.. உன் இதயத்துல நான் இருக்கிறதை இப்படி சிம்பாலிக் ஆ காட்டிட்ட... வெரி நைஷ்... உன் இதயத்தில்  நான் இருக்க அந்த இதயத்தையே எனக்கு பரிசா கொடுத்திட்டியே... சூப்பர் செலக்ஷன்... நான் உனக்கு கொடுத்த கிப்ட்ஷை விட உன்னுடையது precious gift.. I never leave this gift in my life… “  என்று அந்த மோதிரத்துக்கு முத்தமிட்டான்

அவன் அறியவில்லை... நாளைக்கே அந்த மோதிரத்தை கழட்டி தூக்கி வீசப்போகிறான் என்று..

ஆதி  சொன்ன விளக்கத்தை கேட்டு கன்னம் சிவந்தாள் பவித்ரா... அதை வாங்கையில் அவளுள் இந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லை.. இவள் இதயத்தில் அவன் என்றெல்லாம் நினைத்து பார்க்கவில்லை.. அந்த டிசைன் நன்றாக இருக்கவும் வாங்கி இருந்தாள்.. அவன் இதற்கு இப்படி ஒரு விளக்கம் கொடுக்கவும் வாயடைத்து நின்றாள்..

“இந்த அருமையான gift ஐ கொடுத்த இந்த பட்டு கைக்கு இந்த ஆதியின் return  gift .. “என்று அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் கையை இழுத்து அழுந்த முத்தமிட்டான்...

அதில் கிறங்கி நின்றாள் அவளும்..

அதற்குள் பார்வதி சமையல் அறையில் இருந்து வெளியில் வர, அவசரமாக தன் கையை இழுத்து கொண்டு, கன்னம் சிவக்க சமையல் அறைக்குள் ஓடி விட்டாள் தன் அன்னைக்கு உதவும் சாக்கில்...

அவனும் சிரித்துக் கொண்டே அங்கிருந்த ஷோபாவில் அமர, பார்வதி தான் சமைத்ததை எல்லாம் எடுத்து வந்து ஹாலில் வைத்தார்...

 அவர்கள் வீடு சிறிய வீடு என்பதால் டைனிங் ஹால் என்று தனியாக இல்லை.. எப்பவும் சமைப்பதை எடுத்து வந்து ஹாலில் வைத்து விட்டு தரையில் அமர்ந்து கொண்டு  இருவரும் கதை பேசி கொண்டே சாப்பிடுவது வழக்கம்..

அந்த நினைப்பில் பார்வதி அனைத்தையும் எடுத்து வந்து வைக்க, பவித்ராவும் அவருக்கு உதவ, எல்லா ஐட்டங்களையும் ஹாலில் கொண்டு வைத்த பிறகுதான் உறைத்தது தன் மாப்பிள்ளை எப்படி கீழ அமர்ந்து சாப்பிடுவார் என்று...

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 15 - பத்மினிsaaru 2019-01-05 07:55
Semma cute ...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 15 - பத்மினிPadmini 2019-01-05 09:20
Thanks saaru!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 15 - பத்மினிmahinagaraj 2019-01-04 18:01
செம சூப்பர் மேம்... :clap: :clap:
பவிய ரொம்ப படுத்திர வேண்டாம்..
செம ரொமான்ஸ்.. :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 15 - பத்மினிPadmini 2019-01-04 22:02
:thnkx: Mahi!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 15 - பத்மினிAdharvJo 2019-01-04 14:23
Mm Oru pidi pidichatru sapatu ramar:cool: update padmini ma'am :clap: :clap: boss royal Richard range la scene pottalum mammiyar machiya marumagan award winner 😍👌 :D anga pakathu veedu mechiya mama kuda :dance: but not readers mechiya nayagan because ninga engalukku pizza tharalai steam Paahhhh andha abhi nijamave kutti sathan than pavikutti una ippadi mativitutingale ma facepalm anyway idhu varaikum smootha pochi boss unga jollu-k stop-a ilaya ;-) 😜 ring thooki podnga and thuni kilichi rishi mele visunga :grin: look forward to read next update. Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 15 - பத்மினிPadmini 2019-01-04 22:03
:thnkx: Adharv!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 15 - பத்மினிmadhumathi9 2019-01-04 12:17
:clap: nice epi. :thnkx: :thnkx: 4 big epi.egarly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 15 - பத்மினிPadmini 2019-01-04 22:01
:thnkx: Madhu!!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top