(Reading time: 59 - 118 minutes)

தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்? - 08 - சுதி

Uyire yen pirinthaai

ம்பியிடம் பேச வேண்டும் என்று காத்திருந்த அஜூவின் காதில் கீதா பேசியதும் அவள் சென்றவுடன் நகுலன் பேசியதும் கேட்டு மனம் பாரமாகியது.தன் வாழ்விற்காக இவர்கள் இருவரும் எந்த எல்லை வரை சென்றிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது தன் தம்பியை நினைத்து பெருமைபட்டவன்.அவனது வாழ்வை இப்படி சிக்கலாக்கி கொண்டானே என்று அவனை நினைத்து வருத்தபடவும் செய்தான்.நகுனின் கண்ணீரை காண சகியாதவனாக ஆறுதலாக அவனை தொட்டான் அஜூ.

அண்ணனை அங்கு எதிர் பார்க்காத நகுலன் கண்ணீரை துடைத்து கொண்டு ஒன்றும் இல்லை அண்ணா கண்ணில் தூசிபட்டுவிட்டது அதுதான் உறுத்துகிறது என்று சமாளிக்க முயல, எல்லாம் நான் கேட்டுவிட்டேன் என்ற அர்ஜூனின் பார்வை நகுலனை நிமிர்ந்து பார்க்கவிடாமல் செய்தது.

இப்பவாவது என்ன நடந்தது என்று என்னிடம் முழுவதுமாக சொல்வாயா இல்லை மீண்டும் மறைக்க போகிறாயா?மறைக்க போவதென்றால் இதையும் கேட்டு கொள் கீதா பேசியது.அவள் சென்றுவிட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு நீ புலம்பியது அனைத்தையும் நான் கேட்டு விட்டேன் என் மேல் கொஞ்சமாவது பாசம் இருந்தால் என்னிடம் சொல் இல்லையேல் உன் விருப்பம்.நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்.

ஏன் அண்ணா இப்படி பேசுகிறீர்கள் நீங்கள் என்றால் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உங்களுக்கே தெரியும். என்னுடைய ரோல் மாடலே நீங்கள்தான்.நீங்களும் இப்படி பேசி என்னை வதைகாதீர்கள் என்றவன் ஆண் மகன் அழ கூடாது என்பதை மறந்து தன் காதல் தன்னைவிட்டு சென்று விடுமோ என்ற பயத்தில் கண்ணீர் விட தொடங்கினான்.காதல் என்று வந்துவிட்டாள் எப்பேர்பட்ட வீரனையும் கோழையாக்கிவிடுகிறது என்று நினைத்து கொண்டான் அர்ஜூன்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சற்று நேரம் தன் தோளில் சாய்த்து தட்டி கொடுத்தவன். அவனை திசை மாற்றும் விதமாக என்ன நகுல் இது சின்ன பிள்ளை மாதிரி எதுக்கு இந்த அழுகை உனக்கு உன் அண்ணன் இருக்கிறேன்.முக்கியமாக நீங்கள் நாடகமாடி சேர்த்து வைத்த அண்ணி இருக்கிறாள்.

எங்கள் காதலை சேர்த்து வைத்த உங்கள் காதலை நாங்கள் பிரிய விட்டுவிடுவோமா கவலை படாமல் என்ன நடந்தது என்று உன் காதல் கதையை என்னிடம் சொல் நானும் தெரிந்து கொள்கிறேன்.

எல்லா விஷயத்திலும் நீ என்னை ரோல் மாடலாக கொண்டிருந்தாள் இந்நேரம் கீதா அமெரிக்காவிற்கா கிளம்பி இருப்பாள்.ஹாஸ்பிட்டலுக்கு கைனக்காலஜிஸிட்டை அல்லவா பார்க்க போய் இருப்பாள் என்று கிண்டல் செய்தான் அர்ஜூன்.

அர்ஜூன் எதிர் பார்த்தது போலவே நகுலனின் முகத்தில் சிறு புன்னகை எட்டி பார்த்தது.அட போங்க அண்ணா நீங்க வேற அவளபத்தி தெரியாம பேசுறீங்க அவ பாக்கதான் பெரிய பொண்ணு மாதிரி இருக்கா சில சமயம் அவ பண்றத பாத்தீங்கனா அபிக்கும் அவளுக்கும் வித்தியாசமே தெரியாது.

சில சமயம் ரொம்ப மெச்சூர்டா பேசுவா ஆன கொஞ்ச நேரத்துலயே வேற ஏதாவது குறும்புதனம் பண்ணி மொதல்ல அவ்ளோ விவரமா பேசுனவளா இவ அப்படினு யோசிக்க வச்சிருவா என்று கண்களில் கனவு மிதக்க பேசியவன். இருந்தாலும் அந்த சின்ன பிள்ளைதனம் தான் என்னை கவர்ந்ததுனு நினைக்கிறேன் என்னை படுத்தறா. நகுல்.

சரி ..சரி உன்னோட லவ் ஸ்டோரிய சொல்லு. அஜூ.

நகுலன் ஒரு பெரு மூச்சுடன் அவளை மீட்டிங் சென்ற இடத்தில் பார்த்தது அவர்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தை என்று அனைத்தையும் சொன்னான்.கேட்டு கொண்டு இருந்த அர்ஜூன் எங்கள் வாழ்விற்கு நீங்கள் இவ்வளவு சிரமம் மேற் கொள்ள வேண்டியதாகிவிட்டது.இனி நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றவன்.

நீ போய் உன்னோட லட்டோட டூயட் பாடு போ.நான் பார்த்து கொள்கிறேன் என்று கிண்டலாக கூறினான்.

அர்ஜூனை பார்த்து அசடு வழிந்த நகுல் தேங்ஸ்னா. எல்லாமே முடிஞ்சு போன மாதிரி ரொம்ப கஷ்டமா இருந்தது.உன் கிட்ட பேசுனதுக்கப்புறம் கொஞ்சம் பிரியா இருக்கு என்று சொல்லிவிட்டு கீழே சென்றான்.

தம்பியின் வாழ்வை எப்படி சரி செய்வது என்று சிறிது நேரம் யோசித்துவிட்டு.தன் காதலை மனைவி தன்னிடம் சொல்ல தடுமாறுகிறாள் என்பதை அறிந்து சந்தோஷபட்டவன்.தன் காதல் நிறைவேறிய சந்தோஷத்தை மனைவியோடு கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தான்.

என்ன டா வது குட்டி ஒன்னோட மாமாகிட்ட பேச உனக்கு என்ன தயக்கம்?நான்தான் என் மேல் நீ கோபமாக இருப்பாயோ என்று லேட்டாக வந்து இவ்வளவு நாளை வேஸ்ட் செய்துவிட்டேனா?கவலையே படாதே இதோ மாமா வந்துகிட்டே இருக்கேன் என்று தனக்குள் பேசி கொண்டவன் வேகமாக தனது அறையை நோக்கி நடந்தான்.தன் அறைக்கு சென்ற அர்ஜூன் அதிர்ந்து போனான்.

தோழி தன் மேல் அப்பிய கிரீம் பிசு பிசுவென இருக்க வந்தவுடன் அபியையும் இழுத்து கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்தவள்.அவனை சுத்தம் செய்து தூங்க சொன்னாள் அபியோ வள்ளி பாட்டியோடுதான் படுப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க வள்ளியின் அறைக்கு அனுப்பிவிட்டு இவள் சுத்தம் செய்ய பாத்ரூமிற்குள் சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.