(Reading time: 59 - 118 minutes)

காலையில் அனைவரும் டிபன் சாப்பிட வந்தமர்ந்தனர் ஒருவரை தவிர அது நகுலன்தான்.

கீதா நகுலன் எங்க? சுந்தரி.

அவரு மேல ரூம்லயும் இல்ல அத்த. கீதா.

காலைல டிபன் கூட சாப்பிடாம இவன் எங்க போனான்.எப்ப பாரு பிஸ்னஸ்.சாப்பிடாம கூட என்ன பிஸ்னஸோ.சொல்லிட்டாவது போனானா அதுவும் இல்ல இவன் என்ன நெனச்சுக்கிட்டு இருக்கான் சாயந்திரம் வரட்டும் பேசிக்கிறேன் என்று திட்டிக்கொண்டே மற்றவர்களுக்கு பரிமாறினார்.

நகுலன் சாப்பிடவில்லை எனவும் கீதாவிற்கு சாப்பாடு இறங்க மறுத்தது.தட்டில் இருந்த இரண்டு இட்லியை அலைந்து கொண்டு இருந்தவள் அனைவரும் சென்றதும் தானும் சாப்பிடாமலே எழுந்து கை கழுவ சென்றாள்.அவளது தட்டில் இட்லி அப்படியே இருப்பதை பார்த்த சுந்தரி என்ன மா சாப்பிடவே இல்லை என்று கேட்க.

இல்லை அத்தை நைட் கேக் சாப்பிட்டது ஒரு மாதிரி இருக்கிறது எனக்கு வேண்டாம். கீதா.

உனக்கு பிறந்த நாள் என்று கேசரி எல்லாம் செய்திருக்கு நீ எதுவுமே சாப்பிடவில்லையே என்று ஆற்றாமையாக சொன்னார்.

நான் பிறகு சாப்பிடுகிறேன் அத்தை என்றவள் இன்னும் அங்கிருந்தாள் எதுவும் சொல்வார்கள் என்று நினைத்து வேகமாக தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.அவள் செல்வதையே பார்த்து கொண்டு இருந்த அர்ஜூன் யோசனையாக புருவத்தை சுருக்கினான்.

சுவாதியிடம் இதைபற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அன்று முழுதும் நகுலன் எங்கு இருக்கிறான் என்ன செய்கிறான் என்று தெரியாமல் மண்டையை பிய்த்து கொள்ள வேண்டும் போல இருந்தது கீதாவிற்கு.

மனைவிக்கு பிறந்த நாள் சரி மனைவி தான் இல்ல அட்லிஸ்ட் பிரண்டுனு நெனச்சாவது ஒரு விஷ் பண்ணுணனா.இப்ப எங்க இருக்கான்னு வேற தெரியலா.டேய் நளா ஏண்டா இப்படி படுத்துற.ஒரு வேலை அவனோட லட்ட பாக்க போயிருப்பானோ என்று கண்டதையும் யோசித்து அவளுக்கு தலைவலி வந்ததுதான் மிச்சம்.

என்னமோ பண்ணு அதுதான் இனி உன் இஷ்டத்துக்கு இருக்கலாம்னு சொல்லிட்டனே என்று தன்னுடைய மனதுக்கு சமாதானம் செய்வது போல் சொல்லி தன்னை தானே தேற்றி கொண்டாள்.மற்றொரு அறையில் சுவாதி கோபமாக அர்ஜூனை முறைத்து கொண்டு இருந்தாள்.

எவ்வளவு பெரிய விஷயம் இதை முதலில் சொல்லாமல் என்ன வேலை செய்தீர்கள் நேற்று. சுதி.

ஹேய்......என்னடி என்னை சொல்ற.தப்பு உன் மேலதான். அஜூ.

தப்பு என் மேலயா!?நான் என்ன செஞ்சேன்.

சுதி.

உன்னை யாரு நான் வரும் போது அப்படி நிக்க சொன்னது. சும்மாவே உன்ன பாத்தா எங்க என்ன கண்ட்ரோல் பண்ண முடியாம போயிடுமோனுதான் நான் வீட்டுக்கு லேட்டா வந்துகிட்டு இருந்தேன்.அப்படிபட்டவன் முன்னாடி நீ அந்த போஸ்ல நின்னா என்ன பண்ணுவேன் சொல்லு என்று அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு சொன்ன கணவனை என்ன செய்வது என்று சுதி கோபமாக பார்த்து கொண்டு இருந்தாள்.

அதுமட்டும் இல்லாம மேடம் என்கிட்ட பேச வெயிட் பண்ணிகிட்டு இருக்கறதாவும் என்னுடைய கடைகண் பார்வை படாதானு ஏங்கிகிட்டு இருப்பதாகவும் எனக்கு தகவல் வந்தது.என் வது குட்டிய இனிமே காக்க வைக்ககூடாதுனு வேகமா வந்தனா வந்ததும் உன்ன பாத்து டோடல் பிளாப்.

அஜூ.

அவனது வார்த்தைகளில் இருந்த கிண்டலை கண்டு கொண்டவள்.இவனை பேசவிட்டாள் இப்படியே பேசி கொண்டே இருப்பான் இவன் வாயை அடைக்க ஒரே வழிதான் இருக்கு என்று யோசித்தவள்.

சரி நீங்க இப்படிதான் பேசிக்கிட்டு இருக்க போறீங்க.இங்கு யாரும் உங்களுக்கு ஏங்கிகிட்டு இருக்கல.அதனால ரொம்ப பீல் பண்ணாம தூங்குங்க எனக்கு தூக்கம் வருது என்று படுக்க போனாள்.

என்னடி இப்படி டக்குனு தூக்கம் வருதுனு சொல்ற கொஞ்சம் பில்டப்பண்ணா எக்ஸ்ட்ராவா எதாவது கிடைக்கும்னு பாத்தா உள்ளதுக்கே மோசம் வந்துடும் போல சரி..சரி..எந்திரி சொல்றேன். அஜூ.

நோ தேங்ஸ் நான் காலைல கீதாவ மிரட்டி கேட்டுக்கறேன்.

ஓகே ஓகே போதும் விளையாட்டு.நாம சீரியஸா பேசலாம்.

அப்படி வாங்க வழிக்கு என்று மனதுள் நினைத்து கொண்டாலும் என்ன அஜூ நீங்க என்று சலித்து கொள்பவள் போல் காட்டி கொண்டாலும் தோழியின் வாழ்க்கையாயிற்றே என்று கவனமாக கேட்க ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.