(Reading time: 59 - 118 minutes)

கீதாவை அந்த வீட்டில் இறக்கிவிட்ட லாரா தன்னுடைய வீடு இரண்டு வீடு தள்ளி இருப்பதாகவும் எதுவும் தேவை என்றால் அழைக்குமாறு தன்னுடைய அழைபேசி எண்ணை கொடுத்தவள் தன்னுடைய மகன் பிளே ஸ்கூல் முடிந்து வரும் நேரம் நான் செல்ல வேண்டும்.இரண்டு நாள் கழித்து வந்து ஜாயிண்ட் பண்ண சொல்லி இருக்கிறார்கள் அதனால் இப்போது ரெஸ்ட் எடுங்கள்.நாளை காலை இருவரும் சென்று வீட்டிற்கு தேவையானதை வாங்கி வருவோம் என்று சொல்லி சென்றுவிட்டாள்.

ஆபிஸில் அவளுக்கு என்று ஒதுக்கி இருந்த வீடு சின்னதாகவும் அழகாகவும் இருந்தது.ஒரு ஹால்,கிச்சன்,ஒரு பெட்ரூம் அதனுடன் அட்டாச்டு பாத்ரூம் வெளியே அளவான அழகான தோட்டம் என்று ஒரு அளவான குடும்பம் தங்குவது போல் அழகாக இருந்தது. வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தாள்.ஜெட்லாக் நீங்க படுத்தவள் அப்படியே தூங்கி போனாள்.

லாரா தன் மகனுடன் மறுநாள் காலை வந்து எழுப்பும் போதுதான் எழுந்தாள்.லேட்டானதற்கு அவளிடம் மன்னிப்பு கோரி.வேகமாக ஒரு ஜீன்ஸீம்,டி-சர்ட்டும் எடுத்து மாட்டி கொண்டு கிளம்பிவிட்டாள்.

லாரா பழகுவதற்கு நல்ல பெண்ணாக இருந்ததாள். இருவரும் அந்த ஷாப்பிங் முடிவதற்குள் நல்ல தோழிகள் ஆனார்கள்.

லாரா தன்னைபற்றியும் இந்திய கலாச்சாரத்தைபற்றியும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறைபற்றியும் வியந்து கூறினாள்.

தன்னுடைய முன்னோர்கள் இந்தியர்கள் என்றும் வேலைகாக வந்தவர்கள் இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்கள் அது மட்டும் இல்லாமல் தன்னை இந்திய கலாச்சாரபடி கண்டிப்புடன் வளர்த்தது.

வேலைக்கு வந்த இடத்தில் ஒரு இந்தியனான ஆதித்யனை காதலித்து மணந்தது.அவர்கள் வீட்டில் திருமணத்துக்கு ஒத்து கொள்ளாமல் தனித்து இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது.ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு விபத்தில் ஆதி இறந்தது.இப்போது தனித்து வாழ்வது என்று அனைத்தையும் சொன்னவள்.

கீது உனக்கு தெரியுமா?ஆதி தமிழ் படம் பார்க்கும் போது நானும் பார்ப்பேன் அதில் அனைத்து சொந்தங்களும் ஒன்றாக சந்தோஷமாக வாழ்வதை பார்க்கும் போது நாமும் அப்படி இருக்க வேண்டும் என்று தோன்றும்.ஆனால் அவர்கள் வீட்டில் கடைசி வரை எங்களை ஏற்று கொள்ளவே இல்லை இருந்தாலும் அதை இப்போது என் மகனிடம் சொல்லி வளர்க்கிறேன்.இந்தியாவின் கலாச்சாரத்தை இவனும் பின்பற்ற வேண்டும் என்று கூறி லேசாக சிரித்தாள் லாரா.

லாராவின் கதையை கேட்டு கீதா மிகவும் வருந்தியவள்.நீங்க கவலைபடாதீங்க எங்க குடும்பம் பெரிய குடும்பம் நீங்கள் நினைத்தது போல் இனி எங்களுடன் சந்தோஷமாக இருங்கள். உங்களுக்கு யாரும் இல்லை என்று கவலை படாதீர்கள் என்று கூறி நட்பு கரம் நீட்டினாள்.இதுதான் கீதா யாருடனும் விரைவில் பழகிவிடுவாள்.

லாராவின் மகன் மித்ரனை பார்க்கும் போது அபியின் நினைவில் கண் கலங்கியது கீதாவிற்கு.அன்று முழுவதும் வீட்டிற்கு தேவையானதை வாங்கிவிட்டு வெளியே சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தவளுக்கு இன்னும் தான் வந்ததை இந்தியாவில் இருப்பவர்களிடம் சொல்லவில்லை என்பது நினைவு வர போன் செய்தாள்.

ஒரே ரிங்கில் போனை எடுத்த சுவாதி கீது என்று அழைக்க.

ஆமாம்.தி கிரேட் கீதுதான் பேசறேன் மேடம் எப்புடி இருக்கீங்க? நான் இல்லாம ஜாலியா இருக்கறதா எனக்கு தகவல் வந்தது என்று வழக்கம் போல் கலாய்க்க ஆரம்பித்தவள் லாராவைபற்றியும் மித்ரனைபற்றியும் தான் தங்கியிருக்கும் அட்ரஸ் அனைத்தையும் சொன்னவள்.மற்றவர்களை பற்றி விசாரித்துவிட்டு வைத்துவிட்டாள்.அவளுக்கு நகுலன் தன்னை வழி அனுப்ப வரவில்லை என்ற கோபம் அதனால் அவனைபற்றி எதுவும் கேட்காமல் வைத்தாள்.

இங்கு இந்தியாவில் கீதாவிடம் பேசிய சுதி சிரித்து கொண்டே தனது அறைக்கு சென்றாள்.சிரிப்புடன் வரும் மனைவியை பார்த்த அஜூ என்ன மேடம் இன்னைக்கு புல் பார்ம்ல இருக்கீங்க போல இருக்கு என்று இடையில் கையை போட்டான்.கணவனின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரிந்தவள்.

என்ன அஜீ இது எப்ப பாரு இதே நியாபகம்தானா?

ஹேய்...என்னடி இந்த வயசுல இந்த நியாபகம் இல்லனாதான் ஏதாவது ஹார்மோன் பிராப்ளம்னு சொல்லுவோம்.நான் நார்மலா இருக்கேன் அதனால இந்த நியாபகம் வருது.

அஜூ.

உங்ககிட்ட போய் பேசுறேன் பாருங்க என்ன சொல்லனும் எதுக்கெடுத்தாலும் ரெடியா ஒரு பதில் வச்சிருக்கீங்க.நான் சொல்வதை பொறுமையாக கேட்டால் மற்றதுக்கு அனுமதி உண்டு. இல்லையென்றால் நான் தூங்கிவிடுவேன்.

சுதி.

அம்மா வன தேவதை நீ என்ன சொன்னாளும் கேட்கறேன் சொல்லுமா. அஜூ.

அப்படி வாங்க வழிக்கு.உங்க தம்பி டெல்லில இருந்து எப்ப வர்ரேனு சொன்னாரு. சுதி.

நாளைக்கு நைட் ஏன் என்னாச்சு. அஜூ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.