(Reading time: 59 - 118 minutes)

சுதியின் பேச்சை கேட்ட நகுலன் வேகமாக தன் அறைக்கு வந்தவன்.அப்போதே அமெரிக்காவிற்கு பிளைட் டிக்கெட் இருக்கிறதா என்று டிராவல் ஏஜென்ஸிக்கு போன் செய்து கேட்டான்.

அவனது நல்ல நேரமாக அஜூ அப்போதுதான் டிக்கெட்டை கேன்சல் செய்ததால்.அந்த ஏஜெண்ட் ஒரு டிக்கெட் இருக்கிறது சார் கடைசி நேரத்தில் கேன்சல் செய்துவிட்டார்கள்.ஆனால் இன்னும் ஒரு மணி நேரத்தில் பிளைட் சீக்கிரம் வந்துவிடுங்கள்.எங்கள் ஏஜெண்ட் ஆட்கள் டிக்கெட்டுடன் ஏர்போர்ட்டில் உங்களுக்காக காத்திருப்பார்கள் என்று கூறி இணைப்பை துண்டித்தனர்.

வேக வேகமாக உடைகளை அள்ளி தன்னுடைய டிராவல் பேக்கினுள் திணித்தவன்.ஏர்போர்ட் நோக்கி வேகமாக சென்றான்.

அடிபாவி ஏன்டி இப்புடி என் தம்பிய இரவோடு இரவாக நாடு கடத்துற?எவ்ளோ ஈகோ பாக்கறவன் இன்னைக்கு தலை தெறிக்க ஓடறான்.

அஜூ.

உதட்டில் ஒரு மந்தகாச சிரிப்புடன்.காதல்னா சும்மா இல்ல பாஸ்.ஈசியா கெடச்சுட்டா அதோட மதிப்பு தெரியாது.அவங்க ரெண்டு பேருக்கும் எல்லாமே ஈசியா கெடச்சதாலதான் இப்புடி ஈகோ பாத்துக்கிட்டு யார் பர்ஸ்டு சொல்றதுனு இருக்காங்க.

நம்ம காதல் கையவிட்டு போயிடுமோங்கற பயம் வரும் போது தானா மனம்விட்டு பேசுவாங்க.இவர கெளப்பியாச்சு அடுத்து அந்த கீது எருமைய பயமுறத்துவோம் அப்பதான் அளுக்கும் காதல்னா அவ்ளோ ஈசி இல்லனு புரியும் என்றாள்.

இப்பதான் அவன் தெறிச்சு ஓடறான் அடுத்து உன்னோட பிரண்டா,நடத்து,நடத்து.

சும்மா என்னோட மூஞ்சியவே பாக்காமா போய் அந்த போன எடுத்துட்டு வாங்க.

நேரம் டி எல்லாம்.ஒரு பேமசான ஹார்ட் சர்ஜன ரூம் பாய் மாதிரி வேலை வாங்கற.இதுக்கு எல்லாம் வட்டியும் முதலுமா வசூலிப்பேன் பாத்துக்க என்று புலம்பினாலும் போனை எடுத்து வந்து மனைவியிடம் கொடுத்தான்.

கணவனின் பேச்சில் முகம் சிவந்தாலும் பேச்சை மாற்றும் விதமாக ஸ்ஸ்ஸ்....பேசாம இருங்க

போன் ரிங்காகுது.

அந்த பக்கம் கீது எடுத்ததும் சுதி பதட்டமாக பேச ஆரம்பித்தாள்.

ஹலோ கீது நான் பேசறது கேட்குதா?

ஹேய் சுதி கேட்குது சொல்லு டி.ஏன்டி பதட்டமா இருக்க அம்மா அப்பா எல்லாரும் நல்லாதானே இருக்காங்க.

ம்ப்ச்.....அவங்க நல்லா இருக்காங்க இந்த நகுலன்தான் எங்க இருக்காருனே தெரியல.திடீர்னு கோபமா வண்டிய எடுத்துகிட்டு வேகமா போனாரு எங்க போறாரு என்னனு ஒண்ணும் சொல்லல. அவருக்கு போன் போட்டாலும் சுவிட்ச் ஆப்னு வருது.உன்கிட்ட பேசுனாறா.ஏதாவது சொன்னாரானு கேட்கதான் போன் பண்ணேன்.ஹலோ...ஹலோ......கீது இருக்கியா என்ற சுதியின் குரல் கீதாவின் காதில் விழவே இல்லை.சுதியே கீதாவின் நிலையை உணர்ந்து கட்டாகிடுச்சு போல என்று கீதாவின் காதுபட சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

சுதி பேசி முடிக்கும் வரை ஆ....வென்று அவளையே பார்த்து கொண்டிருந்த கணவனை பார்த்த சுதி என்ன என்று கேட்க.

அஜூவோ கையை தலைக்கு மேல் தூக்கி அம்மா தாயே நான் ஏதாவது தப்பு பண்ணுனா நேரா என்கிட்டவே சொல்லிடு ஷாக் டிரீட்மண்ட்னு எனக்கும் இப்படி ஹார்ட் அட்டாக் வர வச்சிராத.எனக்கு இருக்கறதே சின்ன ஹார்ட் அதுல என் பையனும் மனைவியும் பத்திரமா வச்சிருக்கேன்.நீ கண்டதையும் சொல்லி அங்கு ஏதாவது பிரச்சன வர வச்சிராத.என்ன நடிப்புடா சாமி இந்நேரம் கீதுவுக்கு என்ன ஆச்சோ தெரியல..

அது எல்லாம் ஒண்ணும் ஆகாது அவளபத்தி எனக்கு நல்ல தெரியும் இப்ப அவ நகுலன நெனச்சு அழுதுகிட்டு இருப்பா. அவருக்கு போனுக்கு ட்ரை பண்ணுவா.

நகுலனுக்கு கீதா போன் பண்ணுனா தெரிஞ்சுருமே....அஜூ.

ஹய்யோ அஜூ ஏன் நீங்க இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க. பிளைட் ஒன் ஹவர்லனு நாம புக் பண்ணி வச்சிருந்து கரெக்டா கடைசி டைம்ல கேன்சல் பண்ணுனோம்ல அந்த டிக்கெட்லதான் இப்ப உங்க தம்பி அமெரிக்கா போறாரு சோ இந்நேரம் பிளைட்ல உங்க தம்பி செல்ல சுவிட்ச் ஆப் பண்ணி இருப்பாரு.

ஆமால பதட்டத்துல மறந்துட்டேன் என்று வழிந்தான்.

சரி சரி வாங்க நாம போகலாம் அபி எழுந்துக்குவான்.இனிமே அவங்களாவே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று எழுந்து கொண்டவள் தங்கள் அறை நோக்கி மகிழ்ச்சியாக நடந்தாள். பின்னே தோழியின் வாழ்விற்காக தன் வாழ்வையே கேள்வி குறி ஆக்கி கொண்டவளின் வாழ்வை சரி செய்துவிட்டாளே அந்த சந்தோஷம் அவள் முகத்துக்கு தன் அழகை கொடுத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.