(Reading time: 59 - 118 minutes)

அமெரிக்காவில் சுதி பேசியதில் இருந்து உலகம் தன்னுடைய இயக்கத்தை நிறுத்தியது போல் போனையே வெறித்து கொண்டு கண்ணில் வடிந்த நீரை துடைக்க கூட தோன்றாமல் அருகில் இருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தாள் எவ்வளவு நேரம் அப்படி இருந்தாலோ.காலிங் பெல் அடிக்கும் சத்தத்தில் மீண்டவள் போனை அதன் இடத்தில் வைத்துவிட்டு அழுது கொண்டே கதவை திறந்தவள் முதலில் அதிர்ந்து பெரிய கேவலுடன் நளா..... என்று அவன் மார்பில் சாய்ந்து அழ துவங்கினாள்.

சுதியின் பேச்சை கேட்டு கோபமாக வந்தவன் கீதா தன் மீதே சாய்ந்து அழவும் என்ன வென்று விசாரிக்க அவனுக்கு பதில் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தாள்.அப்போது வீட்டின் உள் இருந்து போன் அடித்தது.

ட்டு என்ன ஆச்சு?எதுக்கு இப்படி அழற?சரி வா உள்ள போலாம்.போன் அடிக்கிது.யாருனு பாக்கலாம் வா.என்று உள்ளே அழைத்து சென்றவன் கீதா போன் பேசும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்தவன் தானே போனை எடுத்தான்.

போன் செய்தது மித்ரன்தான்.ஹலோ டார்லிங் வேர் ஆர் யூ?என்ற மழலை குரலை கேட்டு அதிர்ந்தான் நகுல்.என்ன பேசுவது என்று தெரியாமல் அவன் நின்ற சில நிமிடங்களில் ஹலோ ஹலோ என்று பலமுறை கத்தியவன் பதில் இல்லை என்னவும் தன் தாயை அழைத்து கொண்டு கீதா வீட்டிற்கு வந்துவிட்டான்.

கீதா இன்னும் நிலைமை உணர்ந்து கொள்ள முடியாமல் அழுது கொண்டே இருக்க.மித்ரன் மித்ரன்னு வெறுப்பேத்துனாங்க வாய்ஸ் கேட்டா குழந்தை மாதிரி இருக்கே என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே வந்துவிட்டான் மித்ரன்.

ஹேய் யார் மேன் நீ?எப்படி நீ உள்ளே வந்தாய்?கீது டார்லிங் ஏன் அழுகிறாய் என்ற மித்ரனின் கேள்வியில் தன்னிலை உணர்ந்தவள் அங்கு மித்ரனையும் லாராவையும் பார்த்து ஆச்சரியமாகி நீங்கள் எப்போது வந்தீர்கள் என்று கேட்க.

லாரா நகுலனையே ஆராய்ச்சியாக பார்ப்பதை உணர்ந்து இருவருக்கும் அறிமுகபடுத்தினாள்.

நகுலன் இது லாரா என்னோட கொலிக் அண்ட் பெஸ்ட் பிரண்ட்.இது அவங்க பையன் மித்ரன் நான் போன்ல சொன்னன்ல அந்த வாலு.லாராவிடம் திரும்பியவள் லாரா இது என்று ஒரு நிமிடம் தடுமாறி எனது நண்பர் நகுல் என்று சொன்னவளை பார்வையால் எரித்தான் நகுல்.

லாரா நட்பாக கை கொடுக்க இவனும் ஹாய் என்று கை கொடுத்தவன்.நான் இவளின் பிரண்டு மட்டும் இல்லை கணவனும்கூட என்று அழுத்தமாக கீதாவை பார்த்து கொண்டே சொன்னான்.

நகுல் சொல்வதை கேட்ட லாரா.

வாவ் நண்பனே கணவனாக கிடைத்தாள் லக்கிதான்.ஓகே நீங்க பேசி கொண்டு இருங்கள் நாங்கள் பிறகு வருகிறோம்.மித்து போன் பண்ணிய போது நீ பேசவே இல்லை.ஆபிஸ்க்கும் வரவில்லை ஒரு தகவலும் ஆபிஸ்கும் அனுப்பவில்லை அதுதான் என்னவாயிற்று என்று பார்த்துவிட்டு வருவோம் வாருங்கள் என்று என்னை இழுத்து வந்துவிட்டான்.

ஓகே சார் டேக் ரெஸ்ட் என்று வெளியே செல்ல திரும்பினாள்.மித்ரன் மட்டும் வராமல் கீதாவையே பார்த்து கொண்டு இருந்தான்.

மித்து வா போகலாம். லாரா.

ஒன் மினிட் மாம்.கீத்துதுதுதுது....டார்லிங் ஆர் யூ ஆல் ரைட்?

டேய் பொடியா உனக்கே இது ஓவரா தெரில.என்னோட பொண்டாட்டிய நானே இத்தன டைம் டார்லிங்னு சொல்லி இருக்க மாட்டேன்.நீ இத்தன தடவ சொல்றதோட இல்லாம என்னமோ வில்லன்கிட்ட இவள விட்டுட்டு போற மாதிரி என்னமா சீன் போடுற போடா என்று நகுல் தனக்குள் பேசி கொண்டு வெளியே அவனை முறைத்து கொண்டு இருந்தான்.

மித்துவின் குரலில் இருந்த கவலையை உணர்ந்து கொண்டவள் போல்.நோ மித்து ஆம் ஆல் ரைட் நீ போய் தூங்கு காலைல மீட் பண்ணலாம் என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தவள் வீட்டுக்குள் வரும் போது வாய்ஸ் மெசேஜ் வந்திருப்பதாக தொலை பேசி அழைக்க பிறகு பாத்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

வீட்டின் உள்ளே வந்து கதவை சாத்தியவள் என்ன நகுலன் திடீர்னு வந்துருக்கீங்க என்று ஒன்றும் அறியாதவள் போல் கேட்டாள்.

அவள் அழுத பொழுது அவன் லட்டு என்று அழைத்ததை கவனிக்காததாலும்,இன்னும் லட்டு யார் என்று தெரியாததாலும் தான் லாராவிடம் என்ன வென்று அறிமுக படுத்துவது என்று தடுமாறினாள் பின் ஒரு வழியாக சமாளித்து நண்பன் என்றால் அவன் கணவன் என்கிறான்.இப்போது எதற்கு இங்கு வந்தான்.ஏன் லாராவிடம் அப்படி சொன்னான் என்று மண்டையை போட்டு உடைத்து கொண்டு இருந்தவளின் அருகில் வந்தவன்.

என்ன பலமான யோசனை?

நகுல்.

நேற்றுதான் பேசினோம்.அப்போது கூட நீங்கள் வருவதாக சொல்லவில்லை.திடிரென்று சுதி போன் பண்ணி என்னை பய முறுத்திவிட்டாள்.பிறகு பார்த்தாள் நீங்கள் இங்கு வந்து நிற்கிறீர்கள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.சரி அதை விடுங்கள் உங்கள் லட்டு எப்படி இருக்கிறாள்.

அண்ணி பய முறுத்தினார்களா?என்ன சொன்னார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.