(Reading time: 59 - 118 minutes)

தயங்கி தயங்கி கீதாவை பார்த்து கொண்டே சென்ற மித்ரன் நகுலிடம் வந்து நின்றான்.பேசு என்று கீதா சைகை செய்ய மித்து நகுலை பார்த்து ஹல்லோ நளா அங்கிள் எனக்கு இந்த குட்டி ஏஞ்சலை மேரேஜ்பண்ணி தர்றீங்களா என்று கேட்டான்.அவன் என்ன பேச போகிறான் என்று ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த நகுலனுக்கும் அங்கு அனைவருக்கும் கூல் டிரிங்ஸ் கொடுத்து கொண்டு இருந்த லாராவுக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

லாரா மகனை கண்டிக்க எண்ணி கோபமாக மித்து என்று அழைக்க.நகுலன் சிரித்து கொண்டே என்ன லாரா மேடம் எதுக்கு மித்துவ மிரட்டுறீங்க ஏன் எங்க குட்டி ஏஞ்சல் உங்க வீட்டுக்கு வர்ரது உங்களுக்கு விருப்பம் இல்லையா என்று கேட்டு அவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தான்.

மித்துவை பார்த்து முறைத்த நகுலன் உனக்கு எங்க ஏஞ்சல மேரேஜ் பண்ணுக்கனுமா?ஏன்?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கீதாவிடம் சொன்னதை நகுலிடம் மித்து திரும்ப சொல்ல. இந்தியாவின் மீதும் அவர்களின் பாச பிணைப்பைபற்றியும் சொல்லி வளர்த்திருந்த லாரா மீது அவர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல மதிப்பு தோன்றியது.

உனக்கு இந்த குட்டி பொண்ணு வேணும்னா நா சொல்றத நீ செய்யணும். நகுல்.

வாட்? ஐ கேன் டூ எனிதிங். டேவி.

இனிமே நீ கீதுவ டார்லிங்னு கூப்பிட கூடாது.ஓகேவா... நகுல்.

நோ..என்று சொன்னவன் நகுல் அவனகு குழந்தையை கை காட்டி சுட்டி காட்டியதும் முகம் சின்னதாக ஓகே என்றான்.

இரண்டாவது நீ படித்து பெரிய டாக்டராக ஆக வேண்டும் என் அண்ணன் போல்.அப்பதான் நாங்க எங்க குட்டி ஏஞ்சல உனக்கு மேரேஜ் பண்ணி குடுப்போம் என்று கூறி அவனது எதிர் கால லட்ச்சியத்தை நகுலன் தீர்மானித்து கொடுத்தான்.

ஓ.கே. டன்.கண்டிப்பா நான் அஜூ அங்கிளவிட பெரிய டாக்டர் ஆவேன் என்று சொல்லி கீதாவிடம் சென்றவன். டா.....டார்லிங் என்று சொல்ல வந்தவன் கிது நான் பெரிசாகி அஜூ அங்கிள விட பெரிய டாக்டர் ஆவேன்.அப்போதுதான் இந்த ஏஞ்சலை நான் மேரேஜ் பண்ணிக்க முடியுமாம்.சோ ஐ ஆம் பிகம் குட் டாக்டர் என்று சொல்லி சிரித்தான்.

சுதி,கீதா இருவரும் தங்கள் கணவர்களை ஆச்சரியமாக பார்க்க இருவரும் ஒரே நேரத்தில் தனங்கள் சட்டையின் காலரை தூக்கிவிட்டு குறும்பாக கண்ணடித்தனர்.பல சோதனைகளை கடந்து ஒன்றிணைந்த இந்த இரு ஜோடிகளும் தங்கள் காதலை உணர்ந்து மகிழ்ச்சியில் முகம் விகசிக்க சிரித்து கொண்டனர்.இவர்களின் குடும்பம் இணைந்து தன் குடும்பத்திற்கு புதிதாக வந்த குட்டி தேவதைக்கு அரிஷ்மா என்று பெயர் வைத்து மகிழ்ந்தனர்.

இன்று போல் என்றும் இந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும் என்று வாழ்த்தி நாம் விடை பெறுவோம்.   

முற்றும்

Episode # 07

{kunena_discuss:1236}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.