(Reading time: 36 - 71 minutes)

தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்? - 07 - சுதி

Uyire yen pirinthaai

ரண்டு ஆண்களும் காதலில் உருகி கொண்டு இருக்க.இவர்களின் காதல் ரோஜாக்கள் என்ன செய்கிறது என்று வள்ளி வீட்டில் சென்று பார்ப்போம்.

அஜூ இப்ப நீ என்ன செஞ்சுகிட்டு இருப்ப.நீதான் எப்பவும் அபிக்கு கதை சொல்லி தூங்க வைப்ப.இன்னைக்கு அவன் இல்லாம உனக்கு கஷ்டமா இருக்கும் இல்ல,என்ன நெனப்பியா அஜூ.நீ எங்க என்ன நினைக்க போற,நான்தான் லூசுமாதிரி உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கிறேன் என்று சுவாதியும்.

நளன் நீ இந்நேரம் உன்னோட லட்ட பாத்துட்டு வந்திருப்ப இல்ல,ம்ம்...பாத்துட்டு வந்து தூங்க ஆரம்பிச்சு கனவுலையும் அவக்கூட நீ டூயட் பாட ஆரம்பிச்சிருப்படா.லூசு.நீ தான் லவ் பண்றல அப்புறம் எதுக்கு என்கிட்ட வம்பிழுத்து என் மனசுல ஆசைய வளர விட்ட? ஏய் சுதி பொய் சொல்ல கூடாது அவன் கரெக்ட்டா இருக்கான்.நீயா ஆசைய வளத்துக்கிட்டா அவனா பொறுப்பு போ...போ.. போய் சுதிய அர்ஜூன் அத்தானோட சேத்து வைக்க ஐடியா பண்ணு. கீதா.

கோவிந்தன் எத்தனையோ முறை அழைத்தும் நாகப்பட்டினம் செல்ல மறுத்து வந்த சுவாதி மாலதியின் ஆறாம் ஆண்டு நினைவு நாளுக்கு அனைவரும் செல்லலாம் என்று கீதா சுந்தரியைவிட்டு சொன்ன போது தலையை மட்டும் ஆட்டிவிட்டு வந்து விட்டாள்.

நாகாபட்டினம் சென்றால்,அர்ஜூனுடன் பழகிய இடங்களை சுவாதி பார்க்கும் போது ஏதாவது மாற்றம் ஏற்படாதா, என்றுதான் கீதா யோசித்து இந்த முடிவு எடுத்தால்.இந்த முடிவு எந்த அளவுக்கு உதவ போகிறது என்று நாமும் பார்ப்போம்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தனது அறையில் அமைதியாக யோசித்து கொண்டு இருந்த சுவாதியை பார்த்த அர்ஜூன்.ஏன் இவள் நாக பட்டினம் வர மறுக்கிறாள்.அங்கு போவதற்கு எதற்கு இவ்வளவு யோசனை என்று அவளையே பார்த்து கொண்டு இருந்தவன் மகனின் அம்மா என்ற சத்ததில் மகனை கவனிக்க ஆரம்பித்தான்.

தன் தாயிடம் வந்த அபி சுவாதியின் முகம் வாடி இருப்பதை பார்த்து.என்ன மா?என்ன ஆச்சு?ஏன் டல்லா இருக்கீங்க கீதாம்மா எனக்கு ஊரில் நீங்க படிச்ச ஸ்கூல் எல்லாம் காட்றேனு சொல்லியிருக்காங்க.இன்னைக்கு கதை சொல்றதா சொன்னாங்க நா அவங்க கூட போய் படுக்க போறேன் பாய்......

என்ன...... அபி கீதாக்கூட போய்விட்டால் நான் அஜூவோடு தனியாக படுக்க வேண்டுமே.அவன் இருக்கும் போதே ஏதாவது சில்மிஷம் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதவன் போல் படுத்து கொள்வான்.இதில் ஒரு மாதிரி பாடல்கள் வேறு இவனுக்குனு எங்க இருந்து தான் பாட்டு கிடைக்குமோ....ச்ச.....என்று நொந்து கொண்டவள் அபியை தடுக்கும் வண்ணம் அவன் பின்னாடியே சென்றாள்.

டேய் ராஜா வேணான்டா நீ அம்மா கூடவே படுத்துக்கோ நா உனக்கு கதை சொல்றேன் என்று பின்னாடியே போனவள்.கீதா இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டு இருப்பதை பார்த்து பேச்சை நிறுத்தினாள்.

என்னடி ஏன் அபி குட்டி என் கூட படுக்க விட மாட்டிக்கிற?அபி என் கூட படுத்து கொள்வது ஒண்ணும் புதுசு இல்லையே?உன்ன விட நான் நல்ல பாத்துபேன் கவலைபடம போய் தூங்கு.

அபி என் கூட விளையாட ஆரம்பிக்கும் போதே அவன் ஜெயிச்சுட்டா கதை சொல்லனும்னு சொல்லிதான் விளையாட ஆரம்பிச்சான்.நீ ஏன் தடுக்கற நீ வா ராஜா நாம போகலாம்.

சரி கூட்டி போ எனக்கு என்ன?நான் உங்க இரண்டு பேருக்கும் இடையில் வரவில்லை போதுமா நீ ஆச்சு,அவனாச்சு ஆளை விடுமா என்று தன் அறைக்கு சென்று படுத்துவிட்டாள்.

நகுலன் அறையில் இருவருக்கும் இடையில் அபியை படுக்க வைத்த கீதா இரு நான் போய் டிரெஸ் மாத்தி கொண்டு வருகிறேன் என்றவளை தடுத்தான் அபி.

கீது மா நம்ம இரண்டு பேரும் ஒரே மாதிரி நைட் டிரெஸ் எடுத்தோமே அதை போடுங்க நானும் அது தான் போட்டு இருக்கிறேன்.

 அபி.

ராஜா அது வேணாண்டா.இன்னோரு நாளைக்கு அதை போட்டுக்கலாம்.இப்ப அம்மா வேற நைட்டி போட்டுக்கறேன்.அபி குட்டி சமத்துள்ள கீது சொன்ன கேப்பான்ல....பிளீஸ்டா குட்டி என்று கெஞ்சி கொண்டு இருந்தாள்.

அறையின் மற்றொரு மூலையில் பைல் பார்ப்பதாக பேர் பண்ணி கொண்டு இவர்களை நோட்டம்விட்டு கொண்டிருந்த நகுலனுக்கு கீதாவின் கெஞ்சல் ஆர்வத்தை ஏற்படுத்தியது.அன்று திருமணத்திற்கு சென்று வந்த பிறகு இருவருக்கும் இடையிலான பேச்சு குறைந்திருந்தது.எப்போதும் சலசலவென ஏதாவது பேசி கொண்டு இருக்கும் கீதா அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்துவிட்டு சென்று விடுவாள்.

நகுலன் தூங்கும் வரை அபியுடன் விளையாடுகிறேன் என்று பேர்பண்ணி கொண்டு அவனுடன் சுத்தி கொண்டு இருப்பாள்.நகுலனுக்குதான் இவளின் விலகள் அதிகமாக தாக்கியது.இப்படி இருக்க அன்று மனைவி விரைவாக அறைக்கு வந்து அபியிடம் கெஞ்சி கொண்டு இருப்பதை பார்த்தவுடன் அப்படி என்ன டிரெஸ் ரெண்டு பேரும் எடுத்தாங்க என்ற ஆர்வ குறுகுறுப்பில் அவர்கள் பார்க்காத போது அவர்களை கவனித்து கொண்டு இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.