(Reading time: 36 - 71 minutes)

சுவாதியை கோபமாக நெருங்கிய அர்ஜூன் என்னடி சொன்ன இப்ப சொல்லு,தைரியம் இருந்தாள் இப்ப சொல்லு.நானும் உன் மனம் நோக கூடாது என்று அமைதியாக இருந்தால் நீ இன்று அதிகமாக பேசிவிட்டாய்.உன் எல்லா சந்தேகத்துக்கும் இன்று ஒரு முடிவு கட்டுகிறேன்.

நான் உன் அக்காவிடம் இது வரை ஒரு வார்த்தை பேசியது இல்லை.நான் பேசி பழகிய முதலும் கடைசி பொண்ணும் நீதான், உன் அக்காவை நான் விரும்பவில்லை விரும்புவதாக நினைத்து கொண்டு இருந்தேன்.மாலதி இறந்த செய்தி கேட்டு சக மனிதனாக வருத்தப்பட முடிந்த என்னால் அவள் மரணத்திற்கு ஒரு நீதி வாங்கி தரமுடியும் என்றால் அதை செய்வதில் என்ன தவறு அதைதான் நான் செய்தேன்.

நீ கத்தி குத்துபட்டு இருந்தாயே அப்போது உணர்ந்தேன் உண்மை காதல் எதுவென்று,என் வாழ்க்கை எதுவென்று நீ கண் விழிக்கும்வரை செத்து பிழைத்தேன்டி.உனக்கெங்கே அது தெரிய போகிறது.நீ இருந்த அறைக்கு வெளியே பைத்தியகாரன் போன்று உட்கார்ந்திருந்தேன்.உன் அக்காவின் மரண செய்தி கேட்டு அடுத்து எப்படி அவனை பலி வாங்குவது என்று யோசித்து செயல்பட முடிந்த என்னால்.உனக்கு அடிபட்ட சமயம் எதையும் யோசிக்ககூட முடியாமல் என் படிப்பு,அந்தஸ்து எதையும் உணர முடியாமல் உனக்கு பணிவிடை செய்து கொண்டு நீ எப்போது விழிப்பாய் என்று பார்த்து கொண்டு இருந்தேன்.என் வாழ்கையே முடிந்துவிட்டது போன்ற உணர்வை நான் அப்போது உணர்ந்தேன்.

என் வாழ்வை கண்டு கொண்ட மகிழ்வோடு,என் காதலை வெளிபடுத்த எத்தனை முறை உன் வீட்டிற்கு வந்தேன் நினைவிருக்கிறதா?ஆனால் நீ என்னிடம் பேச மறுத்துவிட்டாய், பேச என்ன உன்னை பார்க்கவே முடியாமல் நான் எவ்வளவு சிரமபட்டேன் தெரியுமா?பைத்தியம் பிடிக்காத குறை தாண்டி என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்.

ம்ம்ம்......பிறகு நீ என்னை அடிக்கடி சொல்லி குத்தும் வார்த்தை.நம்பி வந்தவளை ஏமாற்றினேன் உன்னை வலுகட்டாயமாக எடுத்து கொண்டேன் என்று எப்படிடி இப்படி எல்லாம் உன்னால் பேச முடிகிறது?நான் சொல்வதை நன்றாக உன் காது குளிர கேட்டுக்கொள்.அஜூ என்று நீயும் விருப்பத்துடன்தான் அன்று என்னை அணைத்தாய்.என்னவள் என் மனைவி என்றுதான் நான் உன்னை தொட்டேன் மற்றபடி அன்று நீ சொன்னாயே யாராக இருந்தாலும் இப்படிதான் செய்வீர்களா என்று,எனக்கு என் மனைவியை தவிர மற்ற யாரிடமும் அது போன்ற எண்ணம் தோன்றாது.அது என் காதல் மனது செய்த வேலையே அன்றி வயது கோளாறில் செய்த வேலை இல்லை.

வேறு என்ன சொன்னாய்? நம்பி வந்தவளை ஏமாற்றினேன் நீ தான் திருமணத்திற்கு நாள் குறித்து சொன்னவனிடம் எதுவும் சொல்லாமல் ஓடி போனாய்.

உன்னை நினைத்து பைத்தியகாரன் மாதிரி சுற்றி இருக்கும் உறவுகளுடன் பேச முடியாமல் உன் நினைவு வரும் போது எல்லாம் கட்டுபடுத்த முடியாமல் அறையில் கதவை மூடி கொண்டு எத்தனை நாட்கள் கண்ணீர் வடித்திருக்கிறேன் தெரியுமா?கல்யாண தேதியை சொன்ன பிறகும் உன்னை நம்பி காத்திருந்த என்னை ஏமாற்றிவிட்டு நான்கு வருடம் என் மகனை என் கண்ணில் காட்டாமல் நம்பிக்கை துரோகம் செய்தது நீயா?நானா?உன்னை தொட்டதால்தான் மணக்க கேட்டேன் என்றாயே.முதலில்தான் தெரியவில்லை இப்போது கூடவா என் காதல் உனக்கு புரியவில்லை.

நீயாக புரிந்து கொள்வாய் என்று நினைத்தேன்.அது நடக்காது என்று தெரிந்துவிட்டது.நாம் இங்கிருக்கும் இரண்டு நாட்கள்தான் உனக்கு நான் கொடுக்கும் அவகாசம் உன் மனதை மாற்றி கொண்டு என்னோடு வாழும் வழியை பார்.இன்னும் கண்டதை யோசித்து கொண்டு இருந்தாய்.நான் என் வழியில் உன்னை எப்படி படிய வைக்க முடியுமோ அப்படி படிய வைப்பேன் என்றவன் அவன் கைகளில் வைத்திருந்த அவளது கொழுசை மூலையில் விசிறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

அர்ஜூனின் குமுறலை கேட்ட சுவாதி அவன் தன்னை நேசித்திருக்கிறான் என்ற எண்ணமே பூவை அவள் மேல் கொட்டியது போல் இருந்தது.தனக்கும் அவனுக்கும்தான் என்று கடவுள் முடிச்சு இருந்தால் யார் என்ன செய்ய முடியும்.இனி நானும் என்னை மாற்றி கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.மாலதி இறந்த காலம் இந்த சுவாதிதான் நிகழ் காலம் என்று தனக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்தாள்.

அடுத்த நாள் மாலதிக்கு சாமி கும்பிட்டுவிட்டு இரு ஜோடிகளையும் கோவிலுக்கு சென்று வர சொன்னதால் அனைவரும் கிளம்பினர்.கீதா நகுலனுக்கு இடையிலான பேச்சு முற்றிலும் நின்றிருந்தது.அவசரபட்டுவிட்டோமே என்ற எண்ணத்தில் நகுலனும்,அவனை நோகடித்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் கீதாவும் பேசவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.