(Reading time: 36 - 71 minutes)

என்ன...என்று அதிர்ந்து போய் கேட்டவளை பார்க்காமல், பாத்ரூம் வாசலில் இறக்கிவிட்டவன்.காலையில் நான் ஆபிஸ்கு கிளம்ப வரும் போதே நீ அனத்தி கொண்டு இருந்தாய் பக்கத்தில் வந்து பார்த்து கூப்பிட்டேன்.நீ எந்த உணர்வும் இன்றி இருந்தாய்.எனக்கு என்ன செய்வது என்றே முதலில் புரியவில்லை.

அபியை எழுப்ப சுவாதி அண்ணி வந்தார்கள் உன் நிலைமையை பார்த்துவிட்டு என்னை உனக்கு உடை மாற்ற சொல்லிவிட்டு டாக்டருக்கு நான் போய் போன் பண்ணுகிறேன் என்று கீழே போய்விட்டார்கள்.வேறுவழி இல்லாமல்தான். அப்போதும் நான் கண்ணை மூடி கொண்டு தான் உனக்கு உடை மாற்றினேன்.என்று கண்ணன் யசோதையிடம் தவறு செய்து மாட்டி கொண்டாள் முழிப்பது போல் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு சொன்னான்.

அவனின் முகத்தை பார்த்த கீதாவிற்கு வெட்கத்தில் முகம் சிவந்தாலும் அவனது தோற்றம் சிரிப்பை உண்டாக்கியது.

பாத்ரூமில் இருந்து கீதா வெளியே வருவதற்கும் சுவாதி அவளுக்கு சூடாக கஞ்சி எடுத்து வருவதற்கும் சரியாக இருந்தது.

என்னடி என்னாச்சு?நைட் நல்லாதானே இருந்த திடீர்னு என்ன காய்ச்சல் . சுவாதி.

அவளது கேள்வியில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.நகுலன் உடனே நான் கீழே செல்கிறேன் என்று ஓடிவிட்டான்.தோழியின் தொடர்ந்த கேள்வி பார்வையில் தப்பிக்க முடியாமல் தலை குனிந்தவள் நைட் தலைக்கு குளித்துவிட்டு நன்றாக துவட்டவில்லை அப்படியே அபியோடு விளையாண்டு கொண்டு தூங்கிவிட்டேன் என்று சமாளித்தாள்.

சுவாதியின் கூர்மையான பார்வையே நீ சொல்வதை நான் நம்பவில்லை என்பதை தெரியபடுத்தினாலும்,வேறு எதுவும் கேட்காமல் கஞ்சியை ஊட்டிவிட ஆரம்பித்தாள்.

அடுத்த நாள் அனைவரும் நாக பட்டினம் கிளம்பினர்.

சுவாதியின் வீட்டிற்குள் அவர்கள் நுழைந்த நேரம் இரவு எட்டு மணி ஆகியிருந்தது.அங்கு கோவிந்தனை பார்த்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியம்.காரணம் கோவிந்தன்தான். எப்போது கோவிந்தன் சென்னை வந்தாலும் சுவாதி நாகபட்டினம் வர மறப்பதை உணர்ந்து குற்ற உணர்ச்சியில் இருப்பார்.அவர் சிரித்து பேசினாலும் அவரது கண்களை அந்த சிரிப்பு எட்டாது.ஆனால் இப்போது சுறு சுறுப்பாக முகம் முழுவதும் சிரிப்புடனும் அனைவரிடமும் வேலை வாங்கி கொண்டு இருந்த இந்த கோவிந்தன் அனைவருக்கும் புதிதாக தெரிந்தார்.

வா மா...வாங்க சம்பந்தி,வாங்க மாப்பிள்ளை என்று அனைவரையும் வரவேற்றவர்.அவரவர்க்கு ஒதுக்கிய அறைக்கு அழைத்து சென்றார்.அடுத்த நாள் மாலதிக்கு சாமி கும்பிட அனைத்து வேலைகளும் நடந்து கொண்டு இருந்தது.

அனைவரும் வந்த கலைப்பில் சாப்பிட்டுவிட்டு உறங்க செல்ல அர்ஜூனும் தனக்கு ஒதுக்கிய அறைக்கு வந்தவன்.சுவாதி தனது அக்கா,அம்மாவோடு இருக்கும் புகைப்படம் பெரிதாக்கப்பட்டு இருப்பதை வெறித்து கொண்டு இருந்தாள்.

சுவாதி தூக்கம் வரவில்லை வா அப்படியே நடந்துவிட்டு வரலாம். அர்ஜூன்.

இல்லை நான் வரவில்லை.நீங்கள் போய் வாருங்கள். சுவாதி.

இங்கு பக்கம்தான் சென்றுவிட்டு உடனே வந்து விடலாம்.பிளீஸ் வாமா..... அர்ஜூன்.

சரி போகலாம். சுவாதி.

சுவாதி உனக்கு ஒன்று காட்ட வேணன்டும் என்று.தான் முதலில் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து சென்றான் அர்ஜூன்.அதுவரை சாதாரணமாக வந்தவள் அவன் இருந்த வீட்டிற்குள் நுழையும் போது அவளே தடுத்தும் முடியாமல் பழைய நினைவுகள் எழ ஒருவித இறுக்கம் அவளை சூழ்ந்தது.

வதுமா உனக்கு ஒன்று காட்ட வேண்டும் என்றேனே.இங்கே பார் என்று எடுத்து காட்டினான்.அது அவளது ஒரு கால் கொழுசு.எங்கு தொலைத்தாயோ அங்கேயே கொடுக்க வேண்டும் என்றுதான் இவ்வளவு நாட்கள் பத்திரமாக வைத்திருந்தேன்.நீ இல்லாத இந்த நான்கு வருடத்தில் எனக்கு உயிரளித்த ஒரே பொருள் இருக்கிறது என்றால் அது இதுதான்.வா நானே போட்டுவிடுகிறேன்.

 அர்ஜூன்.

அவன் பேசுவதை காதில் வாங்காமல் அவள் ஒரு அறையையே வெறித்து கொண்டு இருந்தாள்.அவள் மனதில் இன்று ஏனோ அர்ஜூனை பார்க்கும் போது எல்லாம் இவன் தன் கணவன் என்று அவனிடம் உரிமை கொள்ள முடியவில்லையே என்ற இயலாமை கோபமாக மாறி கொண்டு இருந்தது.

உனக்கு தெரியுமா வது.நான் இங்கு அந்த ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து நீ உங்கள் வீட்டு மாடியில் நடக்கும் போது பார்த்து கொண்டே இருப்பேன்.ஏஏஏய்....வது...ஏய் இவ்வளவு வேகமாக எங்கே போகிறாய்.

ம்....தொலைந்த பொருளை தொலைத்த இடத்தில் தருவதாக சொன்னீர்களே.பெண்களுக்கு உயிரைவிட மேலாக பாதுகாக்க வேண்டிய ஒன்றை என்னிடம் இருந்து பறித்தீர்களே அதை எப்படி தர போகிறீர்கள்.இங்கு வந்து பழைய நினைவுகளை நினைத்து கொண்டு இருக்கிறீர்களா?எனக்கு என்ன நினைவு வருகிறது தெரியுமா?இப்போது சொன்னீர்களே மாடி அங்கு நான் நடந்து கொண்டிருந்தது.அந்த மரத்தின் பின் நின்று இருவர் எங்கள் வீட்டையே பார்த்து கொண்டு இருந்தது.என்னை என் மானத்தை காப்பாற்றுவீர்கள் என்று நம்பி இதோ இந்த வாசல் கதவை தட்டியது.அப்புறம்,அப்புறம் மயங்கி விழுந்தது.காலையில் என்னை தொட்டுவிட்ட கடமைக்காக என் மேல் இறக்கப்பட்டு மணக்க கேட்டது.என் அம்மாவின் மரணம்.இதுதான் நினைவு வருகிறது.இந்த கொலுசுடன் நான் தொலைத்த இல்லை இல்லை என்னிடம் இருந்து பறித்த எனது கற்பை எப்படி தர போகிறீர்கள் என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு கொண்டே போனவள்.அர்ஜூனின் ஷட்அப்.......... என்ற கர்ஜனையில் அமைதியானாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.