(Reading time: 36 - 71 minutes)

அவர்கள் போய்விட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்ட அர்ஜூன்.என்னங்க அவங்க அவ்ளோ பேசறாங்க நீங்க எதுவும் பேசாமல் இருக்கீங்க.நல்ல தைரியமா இருந்தா இந்த மாதிரி யாராவது உங்ககிட்ட வாலாட்ட முடியுமா.நீங்க அவனுங்க கண்ண பாத்து என்னங்கடா பண்ணுவீங்கனு கேட்ருந்தாளே அவனுங்க ஓடி இருப்பாங்க நீங்க பயந்து பயந்து நிக்கவும்தான் அவங்க அப்புடி பேசுனாங்க.உங்களோட பயந்த பார்வைய வச்சுதான் ஏதோ பிரச்சனைனு நான் வந்தேன் இனிமேவாவது தைரியமா இருங்க என்று சொல்லி சென்றுவிட்டான் அர்ஜூன்.

அவனுக்கும் மாலதியை பார்த்ததில் இருந்து ஒருவிதமான மாற்றம் தோன்ற ஆரம்பித்தது.அவளின் பயந்த தோற்றமும், மற்றவர்களை பார்க்கும் போது அவள் முகத்தில் ஏற்படும் மென்மையான சிரிப்பும் ஏதோ செய்ய அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.அப்போதுதான் இளவட்டங்கள் அவளை சுற்றி நிற்கவும் ஏதோ பிரச்சனை என்று அவளை தெரிந்தவள் போல் பேசி தனியாக அழைத்து வந்து பேசிவிட்டுவந்தான்.

அர்ஜூன் போவதையே பார்த்து கொண்டு இருந்த மாலதி ரம்யா அங்கு வந்து அவளை திட்டியதை கூட காதில் வாங்காமல் அவன் போகும் இடமெல்லாம் இவளும் கண்களால் கவனித்து கொண்டு இருந்தாள்.கத்தி கத்தி சலித்து போன ரம்யா ஏண்டி இங்க ஒருத்தி கத்தறது உனக்கு கேட்குதா இல்லையா?

அட அத விடுடி அங்க பார் அவரை நன்றாக பார்த்து சொல் ஓகேவா என்று.

மாலதி.

யாரடி சொல்ற. ரம்யா.

அங்க பாருடி ஒய்ட் கலர் சர்ட்,புழு கலர் ஜீன்ஸ். மாலதி.

ஓ அவரா. ம்...பாக்க நல்லாதான் இருக்கான்.ஆனா நீ ஏன் அவன பாக்க சொல்ற?என்னடி கண்டதும் காதலா?

 ரம்யா.

த்தூ...போய் வாய கழுவு நா சொன்னது நம்ம சுவாதிக்கு சரியா இருப்பாருள்ளனு கேட்க.நீ என்னடானா லூசு மாதிரி உளறுற.

மாலதி.

என்னது சுவாதிக்கா.நீ இப்புடி மாஞ்சு மாஞ்சு பாக்கறத பாத்து உன்னோட ஆளத்தான் பாத்துட்டியாட்டுக்குனு நான் நெனச்சேன்.

ரம்யா.

இல்லடி என்றவள் சற்று நேரத்துக்கு முன்பு நடந்த அனைத்தையும் சொன்னவள்.அவர் அப்படியே நம்ம சுதி மாறி இருக்கனும்னு சொன்னாரு.சோ அவரோட டிரீம் கேர்ள் குவாலிபிகேஷன் சுதிக்கு இருக்கு.நம்ம வரும்போது சுதி சொன்னால நல்ல மாப்பிள்ளையா பார்த்துட்டு வானு அவ என்ன நெனச்சு சொன்னாலோ ஆனா அதுதான் நடந்திருக்கு.அவரு என்கிட்ட பேசும் போது எனக்கு சுதிகிட்ட பேசற மாதிரியே இருந்துச்சு.அப்புடினா என்ன அர்த்தம் என்னோட சகோதரன் மாதிரினு அர்த்தம்.கண்டத உளறாம வா கல்யாண பொண்ணு தனியா நிக்கறா.மாப்பிள்ளை டிரெஸ் மாத்த போய்இருக்கிரறாம்.இவரு யாரு என்னனு விசாரிக்கலாம்.

சரி வா போலாம்.ஆன அவனுங்க மறுபடியும் கண்ணுல பட்டா சொல்லு.என்ன தைரியம் இருந்தா என்ன புல்டவுசர்னு சொல்லியிரிப்பானுங்க. ரம்யா.

சரி, சரி புலம்பாம வாடி. மாலதி.

இருவரும் சென்று கல்யாண பெண்ணிடம் அர்ஜூனைபற்றி விசாரித்துவிட்டு அவன் போட்டோ ஒன்று தனக்கு வேண்டும் என்று மறக்காமல் ரெடி பண்ணி வைக்கும்படி மாலதி சொல்லிவிட்டு செல்லும் போதுதான் ராமின் வஞ்சக கண்ணில் பட்டாள் மாலதி.

திருமணத்தில் நடந்ததை சொன்ன ரம்யா.எவ்வளவு கஷ்டபட்டு அந்த போட்டோ எல்லாம் வாங்கினாள் தெரியுமா அவரோட வீட்டு அட்ரஸ் அவரோட வேலை எல்லாம் கலெக்ட் பண்ணி சேட்டிஷ்பைட் ஆனவுடன் உனக்கு சர்ப்ரைஸா,நீ டூர்ல இருந்து வந்ததும் சொல்லலாம்னு காத்திருந்தோம் ஆன அதுக்குள்ள என்னென்னவோ நடந்து போச்சு.எப்படியோ மாலதி ஆசபட்டமாதிரி நீங்க ரெண்டு பேரும் சேந்தீங்களே அதுவே எனக்கு போதும்.சரி நா கெளம்பறேன் டைம் இருந்தா வீட்டுக்கு வர்றேன் சரியா பாய்.

ரம்யா சொன்னதை கேட்ட இருவருக்கும் மனதில் அவ்வளவு நிம்மதி ஏற்பட்டது.கீதாவிற்கு இனி தோழியின் வாழ்வில் எந்த பிரச்சனையும் வராது.நாம் அமெரிக்கா செல்ல ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் என்றும்.

மாலதி என் அஜூவை விரும்பவில்லையா எனக்கு என் குட்டிமா பார்த்த மாப்பிள்ளைதான் என் அஜூவா.சாரி அஜூ இது தெரியாமல் உன்னையும் வதைத்து என்னையும் வதைத்து கொண்டேன் என்று தனக்குள் பேசி கொண்டவள் முகம் பிரகாசிக்க வீட்டிற்கு கிளம்பினர் இருவரும்.

அன்று இரவே அனைவரும் சென்னைக்கு கிளம்பினர். மறுநாள் தன்னுடைய சென்னை பிரான்ச்சுக்கு வேலையை மாற்றி கொண்டு வந்திருந்த கீதா அமெரிக்கா செல்வதற்கு தன்னுடைய ஒப்புதலை மெயிலில் அனுப்பிவிட்டு காத்திருந்தாள்.ஏற்கனவே யாரை அனுப்புவது என்று மண்டையை போட்டு உடைத்து கொண்டு இருந்த அவளின் புராஜெக்ட் மேனேஜர் இவளின் மெயிலை பார்த்தவுடன் சந்தோஷமாகி ஓகே செய்துவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.