(Reading time: 36 - 71 minutes)

சென்னை வந்ததில் இருந்து அர்ஜூனிடம் எப்படி பேசுவது என்று பலமுறை ஒத்திகை பார்த்தும் ஒன்றும் ஒர்க் அவுட் ஆகாமல் கண்ணத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் சுவாதி.

கடமைக்காக என்ற அவளின் வார்த்தை அர்ஜூனை அதிகம் காயபடுத்தினாலும் சுதியை பார்க்கும் போது எல்லாம் அவனுள் எழும் தவிப்பை அடக்க முடியாமல் ஹாஸ்பிட்டலில் தன் வேலையை அதிகமாக்கி கொண்டு லேட்டாக வீட்டிற்கு வர ஆரம்பித்தான்.சுவாதியை பார்ப்பதையே தவிர்த்தான்.இவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சுவாதி திகைத்துவிட்டாள்.

இப்படியே நாட்கள் செல்ல இரண்டு வாரத்தில் அமெரிக்கா செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாள் கீதா வீட்டில் இருப்பவர்களிடம் முக்கியமாக சுவாதியிடம் எப்படி சொல்வது என்று யோசித்து கொண்டு இருந்தாள்.அப்போது அவர்களது அறைக்கு வந்த நகுலன் கீதா ஏதோ தீவிர யோசனையில் இருப்பதை பார்த்து இவளுக்கு என்ன ஆச்சு.ஏன் இப்படி இருக்கிறாள் என்று யோசித்து கொண்டே பாத்ரூம் சென்று உடை மாற்றி கொண்டு வந்தவன். எப்படி அவளிடம் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டும் கீதாவின் முகத்தை அப்பப்போ பார்த்து கொண்டும் இருந்தான்.

நகுலன் வந்ததை கவனிக்காத கீதா அவள் போன் அடிக்கவும் யார் என்று எடுத்து பார்த்தாள்.சுவாதிதான் அழைத்திருந்தாள்.

இவ எதுக்கு வீட்டுக்குள்ள இருந்துகிட்டே போன் பண்றா?

ஹலோ!என்னடி இங்க இருந்து கிட்டே போன் பண்ற.ஏதாவது பிராப்ளமா? கீதா.

அது எல்லாம் ஒண்ணும் இல்ல நீ முதல்ல மேலே மொட்ட மாடிக்கு வா. சுவாதி.

ஹேய் என்ன விளையாடறியா?நைட் பதினோரு மணிக்கு போன் பண்ணி மொட்ட மாடிக்கு கூப்பட்ற.நா வர மாட்டேன்.இது பேய் வாக்கிங் போற டைம். கீதா.

அடியேய்,நீ இப்ப வரல,நானே அங்க வந்து இழுத்துட்டு வந்துருவேன்.ரொம்ப முக்கியமான விஷயம்.இல்லனா உன்ன இந்த நேரத்துக்கு கூப்புடுவனா?உன்ன தவிர எனக்கு ஹெல்ப் பண்ண யாரு இருக்கா?

சரி,சரி,ஓவரா சென்டிமண்ட்ட புளியாத.நான் வர்றேன்.

கீதா.

இவளுக்கு என்னாச்சு.அதுதான் ஊர்லயே எல்லா பிரச்சனைக்கும் தெளிவு கிடைச்சுருச்சே இன்னும் இவளுக்கு என்ன பிரச்சன.போனா தெரிய போகுது.சரி கிளம்புவோம் என்று எழுந்தவள் அப்போதுதான் நகுலனை கவனித்தாள்.இவன் எப்ப வந்தான் என்று யோசித்து கொண்டு அவனிடம் எதுவும் பேசாமல் மாடியை நோக்கி சென்றாள்.

லட்டு....வர வர உனக்கு கொழுப்பு அதிகமாகிடுச்சு.இங்க ஒருத்தன் உட்கார்ந்து இருக்கானே அவனிடம் சொல்லிட்டு போவோம்னு தோணுதா.நீ என் கையில மாட்றநாள் ரொம்ப தூரம் இல்ல.அன்னைக்கு உனக்கு இருக்கு என்று மனதுக்குள் அவளை செல்லமாக வைது கொண்டு இருந்தவன்.சிக்னலுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

ஹேய்...ஏண்டி இப்படி படுத்தற.நைட் இந்த நேரத்துல கூப்ட்டு பேசற அளவுக்கு என்ன முக்கியமான விஷயம் சீக்கிரம் சொல்லு. கீழ போயிடலாம். கீதா.

அது வந்து....அது வந்து...எப்படி கேட்கறதுனு தெரியல அதான். சுவாதி.

ஏய்.... என்ன கொலைகாரி ஆக்காதடி.நானே கடுப்புல இருக்கேன்.இவ்வளவு நாளும் வாயிலதானே என்கிட்ட பேசுன.அதுலயே சொல்லு அப்பதான் எனக்கு புரியும்.நீ மூக்குல பேசுனாலாம் எனக்கு புரியாது.

அது வந்து டி....... என்று இழுத்த சுவாதி தோழியின் கடுப்பான பார்வையை பார்த்து இதுக்கு மேல் இழுத்தாள் நிச்சயம் கீழே சென்று விடுவாள் என்பதை உணர்ந்து அழைத்ததர்கான காரணத்தை சொன்னாள்.அதை கேட்ட சுவாதியின் முகம் இன்னும் கோபமாகி அவளை திட்ட ஆரம்பித்தாள்.ஏனென்றால் சுவாதி கேட்ட விஷயம் அப்படி.

போன வாரம் ஒரு மீன் வறுவல் செஞ்சல?அது எப்படி செஞ்சனு எனக்கு சொல்லு.

ஏண்டி.இத கேட்கற நேரமா டி இது.காலைல இருந்து இங்கதானே இருந்தேன் அப்ப எல்லாம் கேட்காம இந்த இரத்திரி நேரத்துலதான் இத கேட்கணுமா?ஒழுங்கா வா கீழ போலாம். காலைல உனக்கு செஞ்சே காட்றேன்.

கீதா.

ம்..ம்...நாளைக்கு நான்தான் சமைக்க போறேன்.அஜூக்கு புடிச்சதா செய்வேன்.நீ தான் வாரம் வாரம் ஓ ஆளுக்கு புடிச்சதா சமைக்கறலா.அதனால இந்த வாரம் நான்தான் சமைக்க போறேன்.

என்ன நாளைக்கு நீ சமைக்க போறீயா?நல்ல வேலை முன்னாடியே சொன்ன.எனக்கு நாளைக்கு ஆபிஸ்ல ஏதோ முக்கியமான வேலை இருக்குனு வர சொன்னாங்க.நான் அங்க போயிடுவேன்.நீயே சமை சரியா என்று வாய் சொன்னாலும். இந்த வாரம் மட்டும்தான் என்னோட நளனுக்கு என்னால உரிமையோட சமைச்சு போட முடியும்.அடுத்த வாரம் நா அமெரிக்கா கெளம்பிடுவேன்.அதுக்கப்புறம் டைவர்ஸ்.அப்புறம்.. அப்புறம் அவனோட லட்டோட அவன் இருப்பான் என்று தனக்குள் பேசி கொண்டவள் தோழியின் உளுக்களில் நினைவுக்கு வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.