(Reading time: 36 - 71 minutes)

என்னடி யோசன?நீ அப்பறமா நகுலனோட டூயட் பாடு இப்ப எனக்கு எப்படி செய்யறதுனு சொல்லு.அஜூ அன்னைக்கு வழக்கத்தவிட அதிகமா சாப்டாறு.உன்கிட்டகூட சொன்னாறு நியாபகம் இருக்க ரொம்ப நல்லா இருக்குனு அதனாலதான் உன்கிட்ட கேட்கறேன்.

சுவாதி.

சுவாதியை பரிதாபமாக பார்த்த கீதா.ஏண்டி அதுக்காக நேரம் காலம் இல்லையா?உன்னோட ஆர்வ கோளாறுக்கு அளவு இல்லாம போச்சு என்று சலித்து கொண்டாலும் தோழிக்கு எப்படி செய்ய வேண்டும் என்று முழுதும் விளக்கி கூறியவளிடம் வேண்டுமென்றே உப்பு பெயராத கேள்விகளை சந்தேகம் என்று கேட்டு வைக்க கீதா கடுப்பாகி கொண்டே இருந்தாள்.

இப்படி நீ கேள்வி கேட்டு எனை கொள்வதற்கு நான் போன வாரம் அதை சமைக்காமலே இருந்திருக்கலாம் என்று நொந்து கொண்டவளை கைதட்டும் சத்தம் கலைத்தது.

கையில் கேக்குடன் நகுலனும்.ஆளாளுக்கு கையில் ஒரு கவருடனும் அவர்கள் குடும்பத்தில் இருந்த அனைவரும் அங்கிருந்தனர்.ஹாப்பி பர்த் டே சாங் பாடி கொண்டு.

தன்னுடைய தாயும் தந்தையும்கூட வந்திருப்பதை பார்த்தவள் அவர்களை ஓடி சென்று அனைத்து கொண்டாள். அவர்களின் பாசத்தை அனவரும் கண்டு மகிழந்திருக்க.நகுலன் மட்டும் இந்த தோள்களும் உனக்காகதான் என்று புரிந்து கொள்ளவே மாட்டியா பேபி என்று அவர்களை பொறாமையாகவும்,ஏக்கத்துடனும் பார்த்தான்.

அவனது பார்வையை யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்திருக்க ஒரு ஜோடி கண்கள் இதை கண்டு கொண்டு பிறகு ஆராய்ச்சியாக பார்க்க ஆரம்பித்தது.அது வேறு யாரும் இல்லை நம்ம அஜூதான்.

போதும் பர்த் டே பேபி போய் இந்த டிரஸ் மாத்திட்டு வா என்று சுவாதி அவளை கீழே அனுப்பினாள்.

அந்த சேலையை வாங்கி கொண்டு கீழே வந்தவள்.பரவால்லையே பிளவுஸ் கரெக்ட்டா இருக்கு என்று தோழியை மெச்சி கொண்டு புடவை மாற்றி கொண்டு மாடிக்கு சென்றவள் தோழியை அணைத்து எப்புடி டி இப்புடி கரெக்ட்டா பிளவுஸ் வாங்கின?ரெடிமேட் பிளவுஸ் மாதிரி இருக்கு நீ எப்ப போன?ஒரு முறை கூட நீ எனக்கு கரெக்ட்டா வாங்கி கொடுத்தது இல்லை.இந்த முறை கரெக்ட்டா வாங்கிட்ட என்று பேசி கொண்டே போனவள் தோழியின் கிண்டல் சிரிப்பை கவனித்து இவளுக்கு என்னாச்சு நல்லா இருக்குனு தானே சொன்னேன்.அதுக்கு ஏன் இப்படி சிரிக்குறா?அவளிடமே கேட்போம்.

ஏன் டி சிரிக்கற?கரெக்ட்டா இருக்குனுதானே சொன்னேன். கீதா.

அது வேற ஒண்ணும் இல்ல.என் சாய்ஸ்பத்திதான் உனக்கு தெரியுமே.அதனால நகுலனதான் இந்த டைம் உனக்கு சேலையும் பிளவுஸும் வாங்கிட்டு வர சொன்னேன்.பரவால்ல நீயே சொல்லிட்ட கரெக்ட்டா இருக்குன்னு.உனக்கே அளவெடுத்து தச்ச மாதிரி இருக்கா? என்று மேலும் தோழியை கிண்டல் செய்ய ஆரம்பித்தாள் சுவாதி.

சுவாதி சொல்வதை எதிர் பார்க்காத கீதா வேகமாக நகுலனை பார்க்க அவன் அவளைதான் பார்த்து கொண்டு இருந்தான்.

தோழியின் பேச்சில் திகைத்து இருந்தவள் நகுலன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து.சரியான திருட்டு கள்ளன் எப்படி கரெக்ட்டா எடுத்தான்னு தெரியலயே!எதுக்கு இப்புடி ஆள முழுங்கற மாதிரி வேற பாக்கறான்.டேய் நா உன்னோட லட்டு இல்ல.எதுக்கு இப்படி பாக்குற.இப்புடி பாத்து பாத்துதான் என்ன கவுத்தியோ என்னமோ போ...என்று தனக்குள் சலித்து கொண்டாள்.

என்னடி நா கேட்டதுக்கு பதிலே சொல்ல மாட்டிக்கிற?என்ற தோழியின் கிண்டலில் முகம் சிவந்து பேசாமல் இரு டி என்று தன் தந்தையின் பின் நின்று கொண்டாள்.

மீண்டும் ஏக்கமாக பார்த்த நகுலனை பார்த்த அர்ஜூன் இவர்களுக்குள் ஏதோ நடக்கிறது என்பது வரை யோசித்தவன் அது என்ன என்று புரியாமல் தவித்தான்.ஒரு வழியாக கேக் வெட்டி பிறந்த நாளை அனைவருடனும் கொண்டாடிய கீதா.இதுதான் சமயம் எல்லாரும் இங்க இருக்காங்க என்று தான் அமெரிக்கா போகும் விஷயத்தை சொன்னாள்.

அனைவருக்கும் அதிர்ச்சி என்றாலும் நகுலனுக்கு கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது.அஜூ நகுலனையே பார்த்து கொண்டு இருந்தததால் அவனது அதிர்ச்சியை பார்த்துவிட்டான்.

ஏன் இந்த கீதா இப்படி செய்கிறாள்.நகுலன் பார்ப்பதை பார்த்தாள் அவனிடம் இன்னும் இந்த விஷயத்தை சொல்லவில்லை போல தெரிகிறதே என்று யோசித்து கொண்டு இருந்தான்.அதற்குள் அவளது பெற்றோர் அத்தை மாமா அனைவரும் மறுப்பு தெரிவித்து இருக்க அவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நகுலனை பார்த்தாள்.

அவனோ நீ தானே ஆரம்பித்தாய் நீயே முடித்து வை என்பது போல் தனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் இறுகி நின்று கொண்டு இருந்தான்.

அனைவரிடமும் அதையும் இதையும் சொல்லி ஒரு வழியாய் சமாளித்தவள் முடியாமல் போக என்னோட விருப்பம் இரண்டு வருஷம் மட்டும்தான் அதன் பிறகு நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன்.எனக்காக என் விருப்பத்துக்காக இரண்டு வருஷம் நான் என் வாழ்வில் எடுத்து கொள்ள கூடாதா என்று கோபம் போலும் கேட்டு அனைவரையும் சமாளித்து ஒரு வழியாக சம்மதமும் வாங்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.