அவள் சம்மதம் வாங்கும் வரை அவளையே வெறித்து கொண்டு இருந்த நகுலன் அனைவரும் சம்மதித்ததும் ஏமாற்றம் அடைந்தான்.அவனது ஏமாற்றத்தையும் என்னை புரிந்து கொள்ளவே மாட்டாயா என்ற ஆற்றாமையோடு கீதாவை பார்ப்பதையும் அஜூ கவனித்து இவனிடம் பேச வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.அதற்கு முன் ஒருவருடன் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.
அனைவரும் கீழே சென்ற பிறகும் கீதவும்,நகுலனும் மட்டும் அங்கு இருந்தனர்.நகுலன் திரும்பி இருட்டை வெறித்து கொண்டு நிற்க கீதா பேச்சை ஆரம்பித்தாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
என்ன நகுலன் என்னுடைய அமெரிக்க பயணத்தை பற்றி நீங்கள் எதுவும் சொல்லவே இல்லை.
கீதா.
என்ன சொல்ல வேண்டும் கீதா. நகுலன்.
அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்,தான் அவனிடம் என்ன எதிர் பார்க்கிறோம் என்பதை புரிந்து ஒன்றும் சொல்லாமல் நின்றவள்.நம் நாடகத்திற்கு முற்று புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது நகுலன்.நான் அவசரமாக செல்வதாக நீங்கள் நினைக்க கூடாது இல்லையா?நான் உங்களிடம் சொல்லலாம் என்றுதான் நினைத்தேன்.
அதற்குள் அவள் பேச்சில் இடை புகுந்த நகுலன் பூனை குறுக்க வந்திருக்கும்.இல்லை இவனிடம் எதுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கும் என்ன சரியா?
நகுலன்.
இல்லை நீங்கள் ஏதோ கோபத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.அதனால்தான் நான் சொல்ல வருவதை கூட காதில் வாங்காமல் கோபமாக பேசுகிறீர்கள். கீதா.
உங்களிடம் கோபபட நான் யாரு மேடம்.நான் ஏன் உங்கள் மேல் கோபபட போகிறேன்.அதை விடுங்கள் நாடகம் என்று ஏதோ சொன்னீர்களே அதை முழுவதுமாக சொல்லி முடியுங்கள். நகுலன்.
நகுலனின் அன்னியதன்மை மனதை பாதித்தாலும் ஊரில் மாலதியின் தோழியை பார்த்தது.அவள் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் சொன்னவள்.சுவாதிக்கு உண்மை புரிந்துவிட்டது. இனி அவள் வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை.எல்லாம் சரியாகிவிட்டது.நீங்களும் எத்தனை நாட்கள் உங்கள் லட்டுவை ஏமாற்றுகிறோமே என்ற குற்ற உணர்வில் இருப்பீர்கள். அதனால்தான் முடிந்தவரை சீக்கிரம் கிளம்ப இந்த முடிவை எடுத்தேன்.இனி நீங்கள் கனவில் மட்டும் இல்லை நிஜத்திலும் உங்கள் லட்டுகூடவே இருக்கலாம் என்று மென்மையாக சிரித்து சொன்னவள்.அந்த வார்த்தைகளை சொல்லும் போது தனக்கு ஏற்பட்ட மரண வலியை வெளியே தெரியாமல் சாமர்த்தியமாக மறைத்துவிட்டாள்.
கீதா சொல்வதை கேட்ட நகுலன் அப்போதும் ஒன்றும் பேசாமல் இருக்கவும்,கீதா அவனை நெருங்கி நகுலன் என்று அழைக்க.அவளை பார்த்தவன்.ஒன்றும் இல்லை நீங்கள் சொன்னதைதான் யோசித்து கொண்டு இருந்தேன்.அண்ணன் வாழ்கையாவது சரியானதே அதுவே சந்தோஷம் என்றவன்.போங்கள் போய் நீங்கள் படுங்கள்.நான் கொஞ்ச நேரம் இங்கிருந்துவிட்டு வருகிறேன் என்று திரும்பி இருளை வெறிக்க ஆரம்பித்தான்.
கீதா எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டி விட்டு சென்றுவிட்டாள்.
நகுலன் அவள் சென்றுவிட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு.ஏண்டி இப்படி பண்ணுன?இத்தனை நாட்களில் என்னுடைய காதல் உனக்கு புரியவே இல்லையா?உன்னிடம் அத்தனை நெருக்கம் காட்டியும் என்னை உனக்கு புரியவில்லையா?பக்கத்தில் எந்த பெண் இருந்தாலும் நான் அப்படிதான் நடந்து கொள்வேன் என்று நினைத்துவிட்டாயா?நான் பொறுக்கி இல்லடி.பார்க்கும் பெண்களிடம் எல்லாம் அப்படி நடந்து கொள்ள என் லட்டுவோடு எப்போதும் இருக்கலாம் என்று சொல்லிவிட்டு நீ சென்றால் என்னடி அர்த்தம்.என்று வாய்விட்டே புலம்பியவனின் கண்களில் கண்ணீர் கோடுகளாக இறங்கி கொண்டு இருந்தது.அப்போதுதான் அவன் தோளை மென்மையாக தொட்டது ஒரு கரம்.
தொடரும்...
{kunena_discuss:1236}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.