(Reading time: 36 - 71 minutes)

இரவு பேசிய பிறகு அவளே யோசிக்கட்டும் என்று அர்ஜூனும்,அவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று சுவாதியும் ஆளுக்கு ஒரு எண்ணத்தில் கோவிலை அடைந்த சுவாதிக்கு அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதை அறியவில்லை.

கோவிலுக்கு சென்று ஜோடியாக சாமி கும்பிட்டுவிட்டு பிரகாரத்தில் அமர்ந்திருந்த அர்ஜூனும்,நகுலனும் கோவிலை சுற்றி பார்க்க கிளம்பிவிட சுவாதியும்,கீதாவும் ஆளுக்கு ஒரு யோசனையில் இருந்தனர்.அப்போது தன் தோளில் யாரோ தொடவும் யார் என்று திரும்பி பார்த்த சுவாதிக்கு ஆச்சரியம்,ஆம் வந்தது மாலதியின் தோழி ரம்யா.அவளுடன் சிறிது நேரம் பேசி கொண்டு இருக்கும் போதே நகுலனும்,அர்ஜூனும் அங்கு வர அவர்களை ரம்யாவிற்கு அறிமுகபடுத்தினாள் கீதா.

ரம்யாவிற்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு இருவரும் பேசிவிட்டு வாங்கள் என்று கிளம்பிவிட்டனர்.அர்ஜூனையே பார்த்து கொண்டிருந்த ரம்யாவிற்கு இவரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று சொன்னாள்.சுவாதி தன் மனதின் குழப்பம் தெளிவானதால் வழக்கம்போல் அவளை கிண்டல்பண்ண ஆரம்பித்தாள்.

என்ன குண்டூஸ் எங்க பாத்த? உன்னோட சாப்பாட்டுக்கு போட்டியா வந்தவங்க முகத்த தவிர உனக்கு யாரு முகமுமே ஞாபகம் இருக்காதே.ஒருவேளை பந்தில உட்கார்ந்து இருக்கும் போதுதான் பாத்தியா அதனாலதா நியாபகம் இருக்கா. சுவாதி.

ம்ம்.....ஞாபகம் வந்திருச்சு இவர நாங்க கடைசியா போனோமே எங்க கிளாஸ்மேட்டோட மேரேஜ்கு அங்கதான் பாத்தேன்.உன்னோட அக்காவாலதா நான் இவர கவனிச்சதே. ஆன அவ சொன்ன மாதிரியே நடந்துருச்சு. நல்லவங்க இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்கள் மனதில் நினைப்பது நடக்கும்னு சொல்லுவாங்க அது உன்னோட அக்கா விஷயத்துல உண்மையாகிடுச்சு. ரம்யா.

என்ன சொல்ற ரம்யா எனக்கு ஒண்ணும் புரியல.புரியற மாதிரி பேசு.எப்புடிதான் உன் புருஷன் உன்ன வச்சு சமாளிக்கறாரோ?...... சுவாதி.

சொன்ன சுவாதியை விளையாட்டாக முறைத்துவிட்டு. நாங்க அன்னைக்கு மேரேஜ்கு கிளம்பும் போது என்ன சொன்ன நியாபகம் இருக்கா?

ரம்யா.

ம்.......பாத்து பத்திரம் போய்ட்டு வாங்கனு சொன்னேன். உங்கிட்ட சாப்பாட்ட பாத்துகிட்டு என்னோட குட்டிமாவ விட்றாதனு சொன்னேன்.இப்ப அதுக்கு என்ன? சுவாதி.

என்ன வாறுகிர விஷயம் எல்லாம் நியாபகம் வச்சிரு. இன்னோரு முக்கியமான விஷயம் உனக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னியே நியாபகம் இருக்கா?

ஹேய்... அது நான் விளையாட்டுக்கு சொன்னது.

நீ விளையாட்டுக்கு சொன்னதா இருந்தாலும் உன்னோட அக்கா அத சீரியஸா எடுத்து கல்யாண மண்பத்துல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டா.

ஏய் என்ன சொல்றா.குட்டிமா எனக்கு மாப்பிள்ளை பார்த்தாலா?

அது ஒரு பெரிய கதை சொல்றேன் கேளு என்ற ரம்யா அன்று மண்டபத்தில் நடந்தவற்றை சொல்ல தொடங்கினாள்.

அடியே மாலு தயவு செஞ்சு எங்கயும் போகாதடி.என் கூடவே இரு இல்ல ஒன்னோட தொங்கச்சி இருக்காளே தொங்கச்சி அவள என்னால சமாளிக்க முடியாது. ரம்யா.

சரிடி.நான் எங்கயும் போக மாட்டேன்.நீ என்ன விட்டுட்டு எங்காவது ஓடாமல் இருந்தால் சரி. மாலதி.

இப்படி இருவரும் பேசி கொண்டு சாப்பிடும் இடம் நோக்கி செல்ல அங்கு ரம்யாவின் சொந்தகாரர் ஒருவர் அவளை பார்த்து பேச பிடித்து கொண்டார்.கும்பலில் மாலதியின் கையை விட்டுவிட்டாள்.ரம்யா கையை உருவி கொள்ளவும் பயந்து போன மாலதி கும்பலில் இருந்து பிரிந்து தன் தோழியை தேட ஆரம்பித்தாள்.அவள் தனியாக இருப்பதை பார்த்த இளவட்டங்கள் அவளை சுற்றி நின்று கொண்டனர்.

டேய் இங்க பாருங்கடா சிட்டு தனியா மாட்டிக்கிச்சு.ஏய் இவ்வளவு நேரம் உன் கூடவே பார்டி கார்டா சுத்துனுச்சே ஒரு புல்டவுசர் அது எங்க.என்னமோ உன்ன பாத்ததுக்கே கைய புடிச்சு இழுத்த மாதிரி அந்த முறை முறைச்சா.இப்ப உண்மையாலுமே ஒன்னோட கைய புடிச்சு இழுக்க போறேன் அவக்கிட்ட போயி சொல்லு சரியா.

அடியே ரம்யா இப்படி என்ன மாட்டிவிட்டுட்டு எங்க டி போன.புல்டவுசரா டோய் இத மட்டும் அவ காதுல வாங்குனா,நீங்க செத்தீங்க.என்ன நீ என்னை பாத்தியா,அதுக்கு அவ முறைச்சா அவகிட்ட போய் வம்பிழுடா என்று அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மனதுக்குள் பதில் அளித்து கொண்டு இருந்தவள்.அவனது கடைசி பேச்சில் என்ன செய்வது என்று தெரியாமல் கண்கள் கலங்க நின்று கொண்டு இருந்தாள்.

என்னமா?ஏன் இங்க நிக்கற?உன்னோட பிரண்டு உன்ன அங்க தேடிகிட்டு இருக்காங்க.நீ இங்க நிக்கற.வா நானே கொண்டு போய் விடுறேன் என்று அங்கு வந்த அர்ஜூன் அந்த இளைஞர்களை பார்த்து முறைத்து கொண்டே அவளிடம் சாதாரண குரலில் பேசினான்.அந்த இளைஞர்களும் இந்த பழம் புளிக்கும் என்று அடுத்த பழம் ச்சீ....ச்சீ..... பொண்ணுங்களை பார்த்து போய்விட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.