Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 17 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 17 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

யுஸ், சொல்லுப்பா… பேய் இருக்கா இல்லையா?” என்று புவன் கேட்க, ஆயுஷ் திணறலுடன் பேசினான்.

“சார், எங்க ஊர் பக்கம் பேய் ஓட்டும் வேலையெல்லாம் செய்வாங்க சார்…  நடுராத்திரியில பேய் பிடிச்சவங்க தலைமுடியை விரிச்சு போட்டுட்டு சுடுகாட்டு பக்கம் ஓடுவாங்க சார். அப்போ யாரும் அவங்களுக்கு முன்னாடி போக கூடாது… அப்படி போனால் பேய் அடிச்சிடும்னு எங்க தாத்தா சொல்லுவாரு”

“ப்ச்… நான் தாத்தா சொன்ன கதை பற்றி கேட்கவில்லை ஆயுஷ். உன்னுடைய கருத்தைதான் கேட்கறேன்.”

“என்ன சார் சொல்றது, பேய் இருக்குன்னு சொன்னா நீ பாத்தியான்னு கேட்பீங்க. இல்லைன்னு சொன்னா ஒருவேளை பேய் என்னை வந்து பார்த்திடுச்சுன்னா”

“அது எதுக்கு உன்னை வந்து பார்க்கணும்?”

“பேய்ங்கற வார்த்தையை அப்யூஸ் பண்ணதா அது கோபப்படலாம் இல்லையா?. கோபப்பட்டு  நான் வந்துட்டேண்டான்னு என் முன்னாடி வந்து நின்னுச்சுன்னா.. அதனால்தான் சேஃபர் சைட் சொல்றேன்”

“அவ்வளவு கேர்ஃபுல்லா இருக்கீங்க…”

“உங்களை சமாளிச்சறலாம் சார். உண்மையிலேயே பேய்னு ஒன்னு இருந்தா அதோட கோபத்தை சம்பாதிச்சுக்க வேண்டாமே”

“அதுசரி, இருக்குன்னு நீ ஒத்துகிட்டேன்னு வச்சுக்குவோம்…  நீ பார்த்திருக்கியான்னு நான் கேட்பேனே அதுக்கு என்ன பதில் சொல்லுவே?”

“அதுக்கு என் பாட்டி சொன்ன பதில்தான் சார். நாம் தேவ கணம்னா பேய் கண்ணுக்கு தெரியுமாம் ஆனால் ஒன்னும் பண்ணாது… மனித கணம்னா பேய் கண்ணுக்கு தெரியாது ஆனால் டிஸ்டர்ப் பண்ணும்… ராட்சஸ கணம்னா பேய் பிடிச்சிடுமாம். நான் ராட்சஸ கணம் சார்”

“அது சரி, இந்த கணம்னா என்ன்?”

“போங்க சார், அது உங்களோட பிறந்த நடசத்திரத்தை வச்சு சொல்வாங்க. இதுக்குமேல கேள்வி கேட்காதீங்க சார்!”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“டென்சன்…? ஓகே… நீ என்னை கேள்வி கேட்கலாமில்லையா?”

“என்ன கேட்கணும் சார்?”

“எதுக்கு பேய்பற்றி விசாரிக்கிறீங்கன்னு…”

“வில்லங்கம் பண்ணாம விடமாட்டீங்களா சார். சரி நீங்களே சொல்லுங்க சார்”

புவன் அனைத்தையும் சொன்னான். தினமும் இரவில் சதா கத்துவதையும்… அவள் சொல்வதையும் விளக்கினான்.

“சார், இது ஆவி மேட்டர் சார். பேய் விசயம் இல்லை”

“பேய்னா தீயசக்தி சார். சுடுகாட்டிலெல்லாம் திரியும்..  டீமன்… எடெர்னல் அதாவது அழியாது. ஆவின்னா செத்து போனவங்களோட ஆத்மா தன்னுடைய  நிறைவேறாத ஆசை நிறைவேறும் வரை இப்படி சுத்திட்டு அப்புறம் ரீ பர்த் ஆயிடும்”

“நிறைய பேய் படம் பார்த்திருப்பியோ?”

“நிறைய கேள்விபட்டிருக்கிறேன் சார்”

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கு கரண் வந்துவிட்டான். இருவரையும் பார்த்து வணக்கம் வைத்தவன் மிகவும் சீரியான பார்வையை புவன்மீது வீசினான்.

“பேய் மேட்டர்பற்றி விசாரிக்க வந்திட்டியாக்கும்?”

“எப்படி இவ்வளவு சாதாரணமாக சொல்கிறாய்? சதா எவ்வளவு பயந்துபோய் இருக்கிறாள் தெரியுமா?”

“வொரி நாட் கரண்… நான் அவளை சைக்கிரியாடிஸ்ட்கிட்ட அழைச்சிட்டுபோய் கௌன்சிலிங் தந்திருக்கேன். சீக்கிரம் சரியாகிவிடும்”

“அவளுக்கு பைத்தியம் பிடித்திருப்பதைபோல பேசுகிறாய்?”

“இல்லை… இல்லை. அவளுக்குள் ஆழ்மனதில் சில குழப்பங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் சரி செய்துவிட்டால் எல்லாம் நார்மலாகிவிடும் என்று சொன்னார்”

“ஒருவேளை அவள் சொன்னது அத்தனையும் உண்மையாக இருந்தால்…?”

“அவள்தான் பொய் சொல்வாளே. கற்பனை கலந்து விளையாட்டாக  நிறைய சொல்வாள் என்று நீயே சொல்லியிருக்கிறாயே… அந்த குணம்தான் இப்போது பயமாக வெளிப்படுகிறது…”

“உன்னைபோல இந்த விசயத்தை நான் அப்படியே ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அவள் சொன்னது உண்மையா என்று தெரிந்து கொள்ளப் போகிறேன்”

“சரி நீயாவது பேய் இருக்கிறதா என்று கண்டுபிடி…”

“நான் வைசாக்கின் ஆவி இருக்கிறதா என்றெல்லாம் தேடப் போவதில்லை… சதா சொல்வது உண்மையா என்றுதான் தேடப் போகிறேன்”

“குட்… செய்… எனக்கு வேறு வேலை இருக்கிறது… சைக்ரியாடிஸ்டின் ஆலோசனைபடி அதை செய்தாக வேண்டும். நீ ப்ரொஸீட் பண்ணு” தொடர்ந்தான்

“இந்த பேய் விசயத்தில் ஒரு எக்ஸ்பெர்ட் இருக்கிறார். அவருக்கு நிறைய விசயம் தெரியும். அவரை உதவிக்கு வைத்துக் கொள்ளேன்… “

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 17 - சாகம்பரி குமார்saaru 2018-12-27 09:12
Super jiii
Ha ha ivanukuka edum nambagamaana varasu Pola eh
Sambandapatavanga eduthu kudikalum pola
Reply | Reply with quote | Quote
# hiSHIRUTHADEWI SETHAREN 2018-12-26 10:46
simple super story..wow what amazing link... :thnkx: :clap: (y).. merry christmas
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 17 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-12-26 10:34
வாவ் சூப்பர் மேம்... :clap: :clap:
பேய் இருக்கா இல்லையா... :Q:
பாத்திருக்காங்கலா.. இல்லையா.. :Q:
இதுக்கு எல்லாம் எனக்கும் விளக்கம் சொல்லுங்க மேம்.. :yes: :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 17 - சாகம்பரி குமார்madhumathi9 2018-12-26 05:35
:clap: nice epi.waiting to read more. :thnkx: 4 this epi.interesting aaga poguthu. :clap: (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 17 - சாகம்பரி குமார்Srivi 2018-12-25 21:23
So finally bhuvan remembered that's nice..paapom indha vaibhav enga ellam panranu tu..super cute episode sis..pei and aavi diff sema..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 17 - சாகம்பரி குமார்AdharvJo 2018-12-25 19:51
:D sema update ma'am :dance: childhood days la pei vilayattu adumbodhu exactly I used to have the same fear and feel 😁😁 lively play :clap: :clap: buvan ji life Oda mystery/ puzzle ippadi tac tac-n analyse seithutal embutu nala irukkum :yes: right catch!
ayush vs buvan, ayush vs karan convo was sema enjoyable 😍😍
Curious to read the new year update. Thank you and and keep rocking.

Merry Christmas and happy year end Ms sagampari.😃
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top