(Reading time: 36 - 72 minutes)

தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்? - 06 - சுதி

Uyire yen pirinthaai

டப்பது அனைத்தையும் கேட்டு கொண்டும் பார்த்து கொண்டும் இருந்த நகுலனுக்கு பயங்கர சிரிப்பு வர அவள் பத்ரூமிற்குள் சென்றது தெரிந்ததும்.வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

அய்யோ......லட்டு ......முடியலடி நீ இவ்ளோ அப்பாவினு எனக்கு தெரியாம போச்சே.எப்புடி.எப்புடி நைட் தூங்க நேரமாச்சா.நீ என்ன நினச்சு சொன்ன அவங்க என்ன புரிஞ்சுகிட்டாங்கனு புரியாம கைல டீ ட்ரேய வச்சுக்கிட்டு முழிச்ச பாரு ஹாஹாஹா.....முடியல போ..

உங்கிட்ட இருக்க இந்த இன்னோசண்ட்குணம்தான் எனக்கு புடுச்சுது.இருந்தாலும் நீ இந்த மாமாகிட்ட பொய் சொல்லியிருக்க கூடாது.அதுக்கான தண்டனை கண்டிப்பா உனக்கு உண்டு.

பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அப்போதுதான் எழுபவன் போல் பார்த்தான்.கீதா சுடிதாருடன் வேகவேகமாக வெளியே வந்து பொட்டு கூட வைக்கமல் வெளியே செல்ல போனவள்.நகுலனின் நில் என்ற வார்த்தையை கேட்டு நின்று திரும்பி பார்த்தாள்.

பொட்டு வைத்துவிட்டு போ.இல்லையென்றாள் அம்மா வருத்தபடுவார்கள்.

ம்ம்ம்ம்ம்ம்.....தலையாட்டியவள் பொட்டு வைத்து கொண்டு திரும்பியவள்.அதிர்ந்து பின்னே நகர்ந்தாள்.அவளை நெருங்கினார் போல் நகுலன் வெற்று மார்பில் நின்றதே அதற்கு காரணம்.

எ..என்ன...? கீதா

நெற்றியில் குங்குமம் நீ வைக்கவில்லை என்று மேலும் அவளை நெருங்கி சீண்டினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இதற்குதான் இப்படி வந்தீர்களா?நான் வைத்து கொள்கிறேன் நீங்கள் நகருங்கள்.

நான் நகர்வது இருக்கட்டும் நீ ஏன் புடவை கட்டாமல் சுடிதார் போட்டு இருக்கிறாய் என்று அவளை உறசினார் போல் நின்று கொண்டே பேச்சு கொடுத்தான்.

அ..அது எனக்கு புடவை கட்ட தெரியாது.

என்ன புடவை கட்ட தெரியாதா?என்னோட லட்டு சூப்பரா புடவை கட்டுவா தெரியுமா?நான் அவளை அடிகடி சேரி கட்ட சொல்வேன்.எனக்காக கட்டுவாள்.நீ புடவையே கட்ட தெரியாதுனு சொல்ற.ஹோ..ஹோ மேடம் கொஞ்ச நாள் டெல்லில இருந்ததால நம்ம கல்ச்சர் மறந்திருச்சோ?

அவன் வார்த்தையில் கோபம் கொண்ட கீதா.கோபமாக அவன் மார்பில் கை வைத்து தள்ளி நிற்க வைத்துவிட்டு இங்க பாருங்க நீங்க என்னை மற்றவர்களோடு கம்ப்பேர் பண்ணுவதை நிறுத்துங்கள்.

உங்க லட்டுக்கு புடவை கட்ட தெரியுமானு நா இப்ப கேட்டனா?எதுக்கு என்கிட்ட அத சொல்றீங்க.நான் காலேஜ் படிக்கும் போதுதான் டெல்லி போனேன் அதுவரை இங்குதான் இருந்தேன் எனக்கு புடவை கட்ட பிடிக்காது.அதனால் கற்று கொள்ளவில்லை.உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்.

யாருடன் யாரை கம்பேர் பண்ணுவது?நானும் அவளும் ஒன்றா? பேரை பாரு லட்டாம் லட்டு என் கையில் கிடைத்தால் அவளை அப்படியே பூந்தி ஆக்கிவிடுவேன் என்று முணுமுணுத்து கொண்டே வெளியே சென்றாள்.

ஹே....செல்ல குட்டிக்கு என்னமா கோபம் வருது.பொறாமை..ம்ம்ம்ம்ம்ம்.....இதுவும்

நல்லதுக்குதான்.

குழந்தையாகவே இருக்கும் உன்னை என் மனைவியாக மாற்றுகிறேன் என்று தனக்குள் பேசி கொண்டு தனக்கு பிடித்த பாடலை விசில் அடித்து கொண்டு குளிக்க சென்றான்.

கீழே அனைவரும் சென்று சாப்பிட்டு மறு வீட்டு விருந்துக்கு என்று சென்று வந்தனர்.நாட்கள் அதன் போக்கில் செல்ல இரு ஜோடிகளின் வாழ்க்கையும் தாமரை இலை தண்ணீராக இருந்தது.

அர்ஜூன் ஒவ்வொரு முறை சுவாதியை நெருங்கும் போதும் குத்தலாக ஏதாவது பேசி அவனை விலக வைத்து அவனை காயபடுத்தி அவன் வருந்துவது பொறுக்காமல் இவளும் வருத்தபட்டு கொண்டு இருப்பாள்.

அப்படிதான் ஒரு நாள் அபி அப்பா அப்பா என்று சுற்றி வருவதை பார்த்த சுவாதிக்கு பொறாமையாக கூட இருந்தது.இவன் என்ன சொக்கு பொடி போடறான்னே தெரியல,எல்லாருக்கும் இவனை பிடித்துவிடுகிறது என்று பார்த்து கொண்டு இருக்கும் போது அர்ஜூனிடம் வந்த அபி

அப்பா நம்ம பைக்ல ஒரு ரவுண்டு போகலாம்.என்னோட பிரண்டு டெய்லி அவங்க அப்பாகூட ஒரு ரவுண்டு போவளாம் என்கிட்ட சொல்லுவா,நீங்கதான் அப்ப பாரின்ல இருந்தீங்க கூட்டிட்டு போகல,இப்ப போகலாம்பா என்று கண்ணில் ஆர்வம் மின்ன சொன்ன மகனை அணைத்து கொண்ட அர்ஜூன் சுதியை ஒரு குற்றம் சுமத்தும் பார்வை பார்த்துவிட்டு

வா ராஜா நாம போகலாம்.அப்பா உன்னை டெய்லி கூட்டிட்டு போறேன்.இனி உனக்கு என்ன விருப்பம்னாலும் என்கிட்ட சொல்லு அப்பா செய்கிறேன் என்று கூறி வெளியே அழைத்து சென்றவன் திரும்பி வர இரவு ஆனது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.