(Reading time: 36 - 72 minutes)

அய்யோ .....இவனுக்கு இதே வேளை எப்ப பாரு புடவை கட்டு புடவை கட்டுனு.இப்ப இவன்கிட்ட மாட்டுனோம் அட்வைஸ் பண்ணியே கொன்னுடுவான் பேசாமல் இங்கிருந்து ஓடி விடுவதுதான் கீது உனக்கு நல்லது என்று தனக்குள் பேசி கொண்டவள் வேகமாக கதவு இருக்கும் பக்கம் போக அவளின் எண்ண ஓட்டத்தை திருதிருவென அவள் விழித்து கொண்டு இருக்கும் போதே கண்டு கொண்ட நகுலன்.அவளின் வெற்றிடையில் கை வைத்து இழுத்து அருகில் நிறுத்தி கொண்டான்.

நான் கேட்டு கொண்டு இருக்கிறேன்.நீ எங்கே ஓட பார்க்கிறாய்.

இல்லை நளன் அ..அத்தையும் சுதியும் கோ..கோவிலுக்கு போய் இருந்தார்கள்.நா...நான் கிளம்பும் போது யா...யாரும் இல்லை புடவை கட்டிவிட அ....அதுதான் நான் இந்த டி...டிரெஸ் நன்றாக இருக்கிறதே என்று இ..இதை போட்டு வந்தேன் என்று திக்கி திணறினாள்.

அவளது வெற்றிடையில் அவனது கைகள் அழுந்த பற்றியிருக்க.கீதாவின் உடலில் ஒருவித அனல் பரவ துவங்கியது அவன் உள்ளங்கையின் சூட்டை அவளால் உணர முடிந்தது.இயற்கையாக அவளது பெண்மை விழித்து கொள்ள அவனிடம் இருந்து விலக முயற்சித்தாள்.அவள் விலக முயற்சிப்பதை உணர்ந்த நகுலன் அவன் பிடியை மேலும் இறுக்கினான்.

அவளின் தடுமாற்றத்தை உணர்ந்தவன்.அவள் தன்னையும் அறியாமல் அவனை நளன் என்று அழைத்ததை நினைத்து மனதுக்குள் நகைத்து கொண்டு.இந்த டிரெஸ் போட்டது பரவா இல்லை அந்த ஷாலையாவது தாவணி போல் போடு. நகுலன்.

அய்யோ நகுலன் இது லெஹன்ஹா...இப்படிதான் போட வேண்டும்.தாவணி போல் போட இது ஒண்ணும் தாவணி இல்லை.

அப்படிங்களா மேடம் என்று அவளை தன்னை நோக்கி திருப்பியவன்.அவள் கண்களை பார்த்து கொண்டே.உன் அழகை அதன் சொந்தகாரன் மட்டும் பார்க்க வேண்டியதை மற்றவர்களுக்கு காட்சி பொருள் ஆக்குகிறாய்.இப்போது கணவனாக நான் உன்னை பார்த்து சொல்கிறேன் நன்றாக இருக்குமா?இருக்காதா என்று? அது வரை நீ அசையாமல் இருக்க வேண்டும் என்ன புரிந்ததா என்றவன்.

அவளின் இடையில் ஒரு கையைமட்டும் வைத்து கொண்டு மற்றொரு கையால் அவளது ஷாலை எடுத்து தாவணி போல் நன்றாக போட்டு அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்துவிட்டு இது நன்றாக தான் இருக்கிறது.என்ன இந்த அழகுதான் இப்போது மறைந்திருக்கிறது என்று அவளது இடையின் இரு பக்கமும் கைகளை வைத்து சொன்னவன் இதை மாற்ற கூடாது.இங்கிருந்து போகும் வரை நீ இப்படிதான் இருக்க வேண்டும் என்று சொல்லி வெளியே சென்று விட்டான்.

கீதாவின் நிலைதான் பரிதாபமாக இருந்தது.அவனின் ஒவ்வொரு தொடுகையிலும் தன்னுடைய பெண்மையை உணர்ந்தாள்.அவனது கூர்மையான பார்வையில் வெட்கத்தை உணர்ந்தாள்.யாரிடமும் கண்ணை பார்த்து பேசும் தன் குணம் அவனிடம் மட்டும் பழிக்காமல்,அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியாமல் ஒருவித வெட்கம் சூழ்கிறதே எதனால் என்று யோசித்து கொண்டு இருந்தவளின் காதில் விழுந்தது அந்த பாடல்.

“வாலாட்டும் வேலை எல்லாம் மூட்ட கட்டிக்கோ

பூவுனா வண்டு வரும் புரிஞ்சு நடந்துக்கோ

பொண்ணுனா வெட்கம் வேணும் தெரிஞ்சு நடந்துக்கோ...

அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்.

அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்

நான் குழந்தையென்று நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்.

அவன் பார்த்த்துமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்.”

என்ற பாடலை கேட்டவளின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.

ந...நளன் நான் உன்னை விரும்புகிறானா.நான் உன்னை காதலிக்கிறானா.இந்த தடுமாற்றத்திற்கு பெயர்தான் காதலா....என்று மகிழ்ந்து போனவள் கீது உனக்கும் காதல் வந்துவிட்டதே.ஜமாய்....என்று தனக்குள் பேசி கொண்டு அந்த அறையைவிட்டு வெளியே வந்தவள் மறந்தும் அவன் இருந்த பக்கம் திரும்பவில்லை புதிதாக முலைத்த காதல் தந்த வெட்கத்தால்.

வெளியே வந்த கீதா தன்னை பார்ப்பாள் என்று பார்த்து கொண்டே இருந்த நகுலனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அந்த ஏமாற்றம் ஒரு கட்டத்தில் கோபமாக மாறி அவளை திட்ட காத்திருந்தான்.

இருவரும் திருமணத்தை முடித்து கொண்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.கீதா அவனிடம் எதுவும் பேசாமல் தணது முதல் காதலை நினைத்து இனிய கற்பனையில் ஆழ்ந்திருந்தாள்.

அவளாக ஏதாவது பேசுவாள் என்று காத்திருந்த நகுலன்.பொறுத்து பொறுத்து பார்த்து முடியாமல் கோபமாக பேச ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.