(Reading time: 36 - 72 minutes)

என்ன மேடம் ரொம்ப குஷியா இருக்கீங்க போல இருக்கு. நமக்கு டைவர்ஸ் ஆன உடனே உனக்கும் நளனுக்கும் எப்படி திருமணம் நடக்கும் என்று இப்போதே கனவு காண ஆரம்பித்துவிட்டீர்களா?எனக்கு பிரச்சனை இல்லை என் லட்டுக்கு எனக்கு எது விருப்பமோ அதுதான் பிடிக்கும்.நான் சிம்பிளாக மேரேஜ் வைத்து கொள்ளலாம் என்று சொன்னால் கூட ஓகே சொல்லிவிடுவாள். நகுலன்.

அவனின் வார்த்தையில் அடிபட்ட பார்வை பார்த்த கீதா எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டி ஆமாம் என்று சொல்லிவிட்டு கண்களை இருக மூடி கொண்டாள்.

ஏதாவது வாய தொறந்து பதில் சொல்றாளா பாரு அங்க ரூம்ல மட்டும் நளன்னு கூப்பிட்டாளே இப்ப வாயா திறந்து அது நீ தாண்டானு சொல்றாளா பாரு நீயா சொல்ற வரைக்கும் நான் இப்படிதான் பேசி உன்னை வெறுப்பேத்துவன்டி என்று தனக்குள் பேசி கொண்டான்.

வீட்டில் அவளை இறக்கிவிட்ட நகுலன் நான் போய் என் லட்டுவை பாத்துட்டு வருகிறேன் என்று சென்றுவிட்டான்.

சோர்ந்த நடையில் உள்ளே வந்த தோழியை பார்த்த சுவாதி என்னடி என்னாச்சு?ஏன் இப்படி டல்லாக இருக்கிறாய்?கல்யாணம் நல்லபடியாக முடிந்ததா?என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்க. தோழி தன்னை எளிதாக கண்டு கொள்வாள் இவளை எப்படியாவது சமாளிக்க வேண்டும் இல்லையென்றால் அவ்வளவுதான் என்று நினைத்து கொண்டவள் அவளை பார்த்து மென்மையாக சிரித்து கல்யாணம் நல்லபடியாக முடிந்து விட்டது எனக்கு தலைவலியாக இருக்கு அதான் இந்த டல்.அபி எங்கே என்று ஓரளவு தன்னை சமாளித்து கொண்டு கேட்டாள்.

கோவிலில் இன்று சரியான ஆட்டம்.அதான் வந்தவுடனே தூங்கிவிட்டான் நீயும் போய் கொஞ்ச நேரம் படு.நான் உனக்கு இஞ்சி டீ கொண்டு வருகிறேன் குடித்துவிட்டு தூங்கு சரியாக போய்விடும்.

சுவாதி.

தூங்கினாள் சரியாக போய்விடும் வழியா இது என்று தனக்குள் பேசி கொண்டவள்.சரி என்று தோழியிடம் தலையாட்டிவிட்டு சென்று விட்டாள்.தனது அறைக்கு சென்று பிரஸ் அப் ஆகிவிட்டு முகம் கழுவி வந்தவளுக்கு சுடசுட இஞ்சி டீ யுடனும் தைலத்துடனும் நின்றிருந்த தோழியை பார்த்தவுடன் எவ்வளவு முயன்றும் முடியாமல் கண்ணீர் அணையை உடைத்து வெளியே வர ஆரம்பித்தது.

தோழியின் மடியில் முகம் புதைத்து தனது காதல் திருமணத்திற்கு பிறகு வந்தும் அதை காப்பாற்றி கௌள்ள முடியாதவள் இருக்கிறேனே.என் காதல் முளைக்கும் முன்னே மொட்டிலேயே கருகிவிட்டதே என்று நினைத்து நினைத்து அழுதாள்.

அவளின் அழுகையை பார்த்து சுவாதி பயந்து போனாள். என்னடி என்னாச்சு?எதற்கு அழுகிறாய்?போன இடத்தில் ஏதாவது பிரச்சனையா?இல்லை உனக்கும் நகுலனுக்கும் ஏதாவது பிரச்சனையா?சொன்னால்தானே எனக்கு தெரியும்.நீ அழுவதை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது என்று தோழி அழுவதை தாங்க மாட்டதவளாக சுவாதியும் புலம்ப.அவளது கடைசி கேள்வியில் விழுக்கென்று நிமிர்ந்து அவளை பார்த்த கீதா.

ஒண்ணும் இல்லடி அம்மா நியாபகமாக இருக்கிறது.இங்கு வந்து இருங்கள் என்றதுக்கு பெண் கொடுத்த வீட்டில் தங்க கூடாது என்று தனியாக வீடெடுத்து தங்கி கொண்டார்கள். பக்கத்தில்தானே இருக்கிறார்கள் வந்து பார்க்கிறார்களா பார் எனக்கு அம்மாவிடம் போகனும் போல் இருக்கிறது.நான் போய் வரவா என்று பேச்சை மாற்றினாள்.

இதற்கா இந்த அழுகை இரு நானும் அம்மாவை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.நீ சொன்னது போல் அவர்கள் இங்கு வருவது இல்லைதான்.அபி எழுந்தவுடன் மூவரும் போவோம்.நீ அதற்குள் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்துரு.தலைவலியோடு இப்படியே உன்னை அழுத முகத்தோடு பார்த்தாள் அம்மா பயந்து விடுவார்கள.இந்தா இந்த டீயை குடித்துவிட்டு படு என்று அவள் டீ குடித்த பிறகு போர்வையை போர்த்தி ஏசியை கம்மியாக வைத்துவிட்டு ஸ்கீரீனை நன்றாக இழுத்துவிட்டு போனாள்.

சுவாதி செய்வதை எல்லாம் படுத்து பார்த்து கொண்டு இருந்த கீதாவிற்கு இப்படி ஒரு தோழி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

உனக்காக உனக்காகதான் சுதி இந்த திருமணம்.ஆனால் இடையில் எனக்குள்ளும் காதல் வரும் என்று நான் நினைக்கவில்லை.உனக்கு தெரியுமா சுதி என்...என் நளன் ஒரு பெண்ணை விரும்புகிறானாம்.என்னிடம் எப்போதுமே அவளது பேச்சுதான் அதிகம் பேசுவார்.அவள் அப்படி அவள் இப்படி என்று. அப்போது எல்லாம் எனக்கு பயங்கரமாக கோபம் வரும்.

எதற்கு நமக்கு இப்படி கோபம் வருகிறது என்று கூட ஒரு முறை நான் யோசித்தேன்.இன்னோரு பெண்ணோடு என்னை கம்பேர்பண்ணுகிறார் என்ற கோபம் என்று எனக்கு நானே கூறி கொண்டேன்.ஆனால் இப்போது புரிகிறது.என் கணவன் என் முன்னால் இன்னோரு பெண்ணை புகழ்ந்து பேசுவதால் வந்த பொறாமை என்று.இப்போது புரிந்து என்ன பயன்.அவர் மனதில் இன்னோரு பெண் இருக்கும் போது கண்டிப்பாக நான் அதற்கு தடையாக இருக்க மாட்டேன்.அவர் விரும்பிய பெண்ணோடு அவர் சந்தோஷமாக இருக்கட்டும் நான் அவரிடம் கூறியது போல் பிரிந்து சென்று விடுகிறேன் என்று கண்டதையும் யோசித்து கொண்டு அப்படியே தூங்கி போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.