Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 08 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 08 - சசிரேகா

en vazhve unnodu thaan

பேருந்தில் யாமினியின் பக்கத்தில்

ஆதித்யவர்மன் சோகமாக அமர்ந்து இருப்பதைக் கண்டு அவனுக்கு ஆறுதல் சொல்ல நினைத்தவள் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு அவனிடம் வந்து நெருங்கி அமர்ந்தாள். அவன் ஏதோ யோசனையில் அவள் செய்வதைப் பார்க்க தவறினான். அவளோ ஆதியிடம்

”எனக்கு இந்த கதிரேசன், நடேசன் மேலதான் சந்தேகமா இருக்கு ஆதி” என்றாள் அவன் அவளை திரும்பிப் பார்த்து மீண்டும் யோசனையில் மூழ்கவே அவனிடம் இன்னும் நெருங்கி அமர்ந்து தன் கையால் அவன் கையை பிடித்துக் கொண்டாள்.

ஆதியின் கவனம் முழுவதும் வேறு எங்கோ இருக்கவும்

”ஆதி உங்க சித்தப்பா நல்லவர், என்ன குழந்தையில்லைங்கற குறை அவருக்கு கோபத்தையும் விரக்தியையும் கொண்டு வந்திருக்கு அவ்ளோதான் ஆனா, உன் மேல பாசம் இருக்கு நான் பேசினபின்னாடி அவர் சென்னைக்கு போய் டெஸ்ட் ட்யூப் பேபி முறைக்கு மாறுவார்ன்னு தோணுது. சோ அவர் மட்டும் இங்கிருந்து கிளம்பிட்டா என்ன அர்த்தம், அவர் நகைகளை எடுக்கலைன்னு அர்த்தம், அவரை பொறுத்தவரைக்கும் நகைகள் தேவையில்லை, நீயும் தேவையில்லை, அவருக்கு அவர் பேர் சொல்ற குழந்தைதான் தேவை, நாளைக்கு அவர் எப்படியும் சென்னைக்கு கிளம்பிடுவாரு. அதனால உன் சித்தப்பா சித்தியை லிஸ்ட்லயிருந்து தூக்கிடலாம் ஓகேவா” என அவள் சொல்லவும் அவனும் ம் என மெதுவாக தலையாட்டினான். அவனின் முகத்தைப் பார்த்தாள். குழப்ப ரேகைகள் அதிகமாக ஓடியதைக் கண்டு தனக்குள் சிரித்தவள் மெதுவாக அவன் புறம் திரும்பி அவன் தோளில் தன் தலையை சாய்த்துக்கொண்டு மீண்டும் பேசினாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”ஆதி கதிரேசனும் அகிலாவும் ஒரே மாதிரி சொல்றாங்க, உன்னால அவருக்கு ஏதோ அவமானம் நடந்திருக்கு இல்லை அப்படி அவமானப் பட்டதா அவர் தப்பா நினைச்சிட்டு இருக்காரு. அதனால கூட உன்னை அவர் பழிவாங்க நினைச்சி பழிபோட்டு விரட்டிட்டு நடேசனை வாரிசாக்க முயற்சி செஞ்சிருக்கலாம். பாட்டி நடுவுல நுழைஞ்சி கெடுத்ததால நீ இங்க இருக்க, அது அவங்களுக்குப் பிடிக்கலை ஆனா உன் அத்தைங்கள் உன் மேல அன்பாதான் இருக்காங்க ஆமா அது என்ன அவமானம்? அது பத்தி உனக்கு தெரியுமா ஆதி” என தலை நிமிர்த்தி அவனை பார்க்க அவன் கண்கள் பலமாக அலைபாய அவனது நெற்றி சுருங்கி குழப்பமும் எதையோ யோசித்த வண்ணமாக இருக்கவே மெல்ல அவனிடம் நெருங்கி அவன் கன்னத்தில் முத்தம் தர உடனே சுயநிலை பெற்றவன் விலகி அவளைப் பார்த்து முறைத்தான். அவளோ இன்னும் நெருங்கி அவனிடம் வரவும் அவளை விலக்கினான்.

தள்ளி சென்றவள் அவனிடம்

”ஆமா என்ன உன்மேல ஏதோ பேட் ஸ்மெல் வருது” என யோசித்தவள்

”யாக் நீ அந்த ஆட்டை வெட்டினல்ல பாவி அதானா இப்படி ஸ்மெல் வருது சீ சீ போ போ” என அலறி அடித்துக் கொண்டு யாமினி பஸ்சைவிட்டு வெளியே ஓடினாள். அவள் ஓடுவதைக் கண்டவன் சுற்றி சுற்றி யாராவது இருக்கிறார்களா என பார்த்து நிம்மதியடைந்து தன் சட்டையை மோப்பம் பிடித்தான். அவனுக்கு பெரிதாக எதுவும் தெரியாததால் தன் கன்னத்தைத் தொட்டு பார்த்தவன் சிரித்தான்.

”உங்கப்பா சொன்னது சரிதான், உன்னைப்பத்தி தெரிஞ்சிதான் அவர் அப்படி சொன்னார் போல, நான் அசந்த நேரத்தில முத்தம் தர்றியா ம் நீ சொன்னதும் சரிதான், கதிரேசன் மாமா மேல சந்தேகமா இருக்கு ஆனா, நான் என்னிக்கு அவரை அவமானப்படுத்த நினைச்சேன். இல்லையே எனக்கு ஞாபகம் வரலையே, அந்த பாஸ்கர் எதுக்கு கணேசன் மாமா பேரை சொல்லனும். ரெண்டு பேரும் சேர்ந்து செய்றாங்களா இல்லை பாஸ்கர் வேணும்னே சொல்றானா இன்னிக்கு அவனை தூக்கிட்டு வந்து மிதிச்சா தெரிஞ்சிடும்” என மனதுக்குள் யோசித்தவன் மெதுவாக பஸ்ஸை விட்டு இறங்கி பந்தி நடக்கும் இடத்திற்கு வந்தான். அங்கு தாத்தாவிற்கு பக்கத்தில் யாமினி அமர்ந்து மட்டன் பிரியாணியை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்தவன் வியந்து மனதுக்குள்

”பாவி நான் ஆட்டை வெட்டினதுக்கு என்னை திட்டிட்டுட்டு இப்ப மட்டன் பிரியாணியை என்ன வெட்டு வெட்றாளே ம்” என யோசித்தவன் அங்கிருந்த அனைவரையும் பார்த்தான். யாமினி யார் யாரிடம் பேசினாளோ அவர்கள் முகமே சரியில்லாமல் ஏதோ குழப்பத்துடன் இருக்கவே

”அடிப்பாவி யாமினி எல்லாரையும் இப்படி சைலன்டா ஆக்கிட்டியே இதே நீ பேசாம இருந்திருந்தா இந்த பந்தியே களை கட்டியிருக்கும், இப்ப பாரு எல்லாரும் ஏதோ யோசிச்சிக்கிட்டு அமைதியாயிருக்காங்க இதுல யார் திருடன்னு நான் எப்படி தெரிஞ்சிக்கறது. என்னை பழிவாங்க நினைச்சி கதிரேசன் மாமா நகைகளை எடுத்திருப்பாரா இல்லை கணேசன் மாமா நிகிலனை அடுத்த வாரிசாக்க நினைச்சி என்னை திருடனாக்க நினைச்சாரா இல்லை சித்தப்பாவுக்கு வாரிசு இல்லாததால அவர் ஒரு பக்கம் என்னை மாட்டிவிட்டு விரட்ட நினைச்சாரா தெரியலையே யார் செஞ்சிருப்பா எப்படியாவது கண்டுபிடிக்கனும் யார்ன்னு தெரிஞ்சா போதும் நகைகள் கிடைச்சிடும்” என நினைத்துக் கொண்டிருந்தவனிடம் சுமித்ரா வந்தாள்

Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 08 - சசிரேகாAdharvJo 2018-12-25 10:37
Sema suspense aga pogudhun sasi ma'am as always interesting update :clap: :clap: appo andha 2 uncles thirudar illayo :Q: Nala kulapividuringa😎 nice! Store room mystery enavaga irukkum anga than jewels irukomo? Adhi varaindha map parthu thana yams anga ponanga Pina eppadi avarukke anga store room irupadhu theriyala ?? Thath's please andha ummai punishment avdhu kami panungale adhu than adhi thirudi irukamatrun teridhu illangala innum konjam epi ponna avaru pesave maranthuduvaru pavam sasi ma'am adhi avaroda emotions kuda kashta patu explain panuraru ;-) aduthu Ena agumn therinhu kola waiting. Thank you and keep rocking. Merry Christmas 😍
Reply | Reply with quote | Quote
# என் வாழ்வே உன்னோடு தான்Anjana 2018-12-24 16:33
Very nice and interesting update. How it is possible.. athikum paatikum theriyama oru room. Waiting to read next epi..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 08 - சசிரேகாmahinagaraj 2018-12-24 15:00
அச்சோ செம செம செம... :clap: :clap:
இன்னைக்கு எபில எல்லாம் இருந்தது.. கோவம்,கவலை,காதல்,அன்பு,பாசம் எல்லாம் இருக்கு....😍😘👏👏💟
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 08 - சசிரேகாmadhumathi9 2018-12-24 07:29
wow thrilling & interesting aaga irukku. :Q: antha room yaar seithathaa irukkum.very nice epi. :clap: (y) :thnkx: 4 this big epi. :GL:
Eppadithaan kandupidikka poraangalo theriavillai. :Q: yaaraaga irukkum.nagai eduthavar enna nokkathirkkaaga eduthu iruppaargal.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 08 - சசிரேகாSailaja U M 2018-12-24 06:26
Interesting update.. (y) :clap: :clap: waiting to read the next update :yes: :yes:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top