ம்ம்ம்.....கஷ்டம்.வாய்க்குள் முணுமுணுத்து கொண்டவன். அது எனக்கு தோணும் போது கன்பார்ம் பண்ணிக்கிறேன்.இப்ப எதுக்கு என் பேர ஏலம் விட்டுகிட்டு இருந்தனு சொல்லு.
என்னோட ஆபிஸ்ல ஒர்க் பண்ற பொண்ணுக்கு மேரேஜ்.எல்லாரும் அவங்க பேமியோட வரணும்னு சொல்லியிருக்கா.உங்களையும் கண்டிப்பா கூட்டி வர சொன்னா.சரி நம்ம ரெண்டு பேரும் போலாம்னு பாத்தேன். நீங்க வெளியே எங்கயோ கிளம்புறீங்க போல இருக்கு என்று மென்று முழுங்கினாள்.
அய்யோ லட்டு உன் புருஷன்கிட்ட பேச ஏன்டி இப்புடி மென்னு முழுங்கற.எப்பத்தான் என்கிட்ட உரிமையா பேச போறியோ தெரியல என்று மனதுக்குள் பேசி கொண்டவன் அவளிடம் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குமா நாளைக்கு வந்துடுவேன் என்றான்.
நாம ரெண்டு பேரும் போகலாம்னு நெனச்சேன்.சரி பரவால்ல விடுங்க நான் அவள சமாளிச்சுக்கிறேன் என்று ஏமாற்ற குரலில் கூறினாள் கீதா.
ம்..... என்று யோசித்தவன் சரி எப்ப மேரேஜ். நகுலன்.
நாளைக்கு பத்து டூ பன்னிரண்டு . கீதா.
சரி நாளைக்கு சீக்கிரம் மீட்டிங் முடிச்சு நேரா நான் மேரேஜ் ஹால் வந்துவிடுகிறேன்.நீ இங்கிருந்து கிளம்பி அங்கு வந்துவிடு.ஓகேவா.
அவன் சொல்வதை கேட்ட கீதாவின் முகம் பூவாய் மலர்ந்து தலையாட்டினாள்.சரி நீங்கள் சொல்வது போல் செய்யலாம் என்று சென்று விட்டாள்.
மற்றவர்களுக்காக நான் வர வேண்டும் என்று நினைக்கிறாயா?இல்லை உனக்கே நான் வர வேண்டும் என்று தோன்றுகிறதா?லட்டு என்று தனக்குள் கேட்டு கொண்டான்.
அடுத்த நாள் பிறந்த நாளுக்கு ஆபிஸ் தோழி வாங்கி தந்த லெஹன்காவை போட்டு கொண்டு கிளம்பிவிட்டாள்.மண்டப வாசலில் நகுலனுக்காக காத்திருந்தாள்.அவள் காத்திருப்பை பொய்யாக்காமல் சரியாக பத்து மணிக்கு மண்டபத்துக்குள் நுழைந்தான்.
வாசலில் தனக்காக காத்திருக்கும் மனைவியை கண்டவனின் உள்ளம் துள்ளியது.அவளின் ஆடையை கவனித்தவன் ஏய் லட்டு யாருடி உன்ன இந்த மாதிரி டிரெஸ் எல்லாம் போட சொன்னா. உன்னை பாத்த எவனாவது கல்யாணம் ஆன பொண்ணுனு சொன்ன ஒத்துக்குவானா படுத்துறடி என்று தனக்குள் பேசி கொண்டு அவளை நெருங்கி போகலாமா என்று கேட்டான்.
வேகமாக அவள் தலையாட்டவும் இருவரும் ஜோடியாக உள்ளே நுழைந்தனர்.இருவரையும் பார்த்த அனைவரும் இவர்களின் ஜோடி பொறுத்தம் பார்த்து அசந்து நின்றனர்.
நகுலன் நீங்க இங்க உட்காருங்க.நான் போய் என் தோழியை பார்த்துவிட்டு வருகிறேன்.
கீதா.
சரி.நான் இங்கு இருக்கிறேன் நீ போய் வா...நகுலன்.
கீதா சென்றவுடன் வந்திருப்பவர்களை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த நகுலன் ஒரு குழந்தை தத்தி நடந்து வருவதை பார்த்து கொண்டும் அவனுக்கு நேர் பின்னாடி அமர்ந்திருந்த இளவட்டங்கள் சொல்லும் கிண்டல்களை ரசித்து கொண்டு இருந்தான்.
திடீர் என்று அந்த இளவட்டத்தில் ஒருவன் டேய் மச்சான்.......என்று கத்தவும் நகுலனே எதற்கு இவன் இப்படி கத்துகிறான் என்று ஒரு நிமிடம் அதிர்ந்து என்ன சொல்கிறான் என்பதை கவனிக்க ஆரம்பித்தான்.
டேய் மச்சான் அங்க பாருங்கடா....கல்யாண பொண்ணு பக்கத்துல நிக்கற பிகர செம்மயா இருக்கால்ல,அவளுக்குனே செஞ்ச மாதிரி இருக்கு இந்த டிரெஸ்.அவளோட ஸ்ட்ரெச்சர பாருங்கடா ம்ம்ம்.....எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ என்று பெரு மூச்சு விட்டான்.அவனை தொடர்ந்து அவன் நண்பர்களும் அவன் சொல்வதை ஆமோதிப்பது போல் பெருமூச்சு விடவும்.இவர்கள் யாரை சொல்கிறார்கள் என்று திரும்பி பார்த்த நகுலன் அதிர்ந்தான்.ஏனெனில் அவர்கள் சொன்னது கீதாவை.
நகுலனுக்கு கோபம் திகு திகுவென ஏற அவர்களை பார்த்து திரும்பி அமர்ந்து.அவர்களை பார்த்து சிரித்து கொண்டே
ஹாய் பிரண்ட்ஸ்.......தேங்ஸ் பார் யுவர் காம்ப்லிமண்ட் என்றான்.வாய்தான் சிரித்ததே தவிர கண்கள் அவர்களை முறைத்து கொண்டு இருந்தது.
யார் சார் நீங்க?எதுக்கு எங்களுக்கு தேங்ஸ் சொல்றீங்க?
அது வேற எதுக்கும் இல்ல இப்ப நீங்க வர்ணிச்சீங்களே பொண்ணு அது என்னோட மனைவி.நீங்க கொடுத்து வச்சவன்னு சொன்னது என்னைதான் அதனால இந்த தேங்ஸ்... நகுலன்.
சார் சாரி சார் ஏதோ தெரியாம சொல்லிட்டோம்.நீங்க சிஸ்டர்கிட்ட போங்க சார் என்று அங்கிருந்து அனைவரும் ஜகா வாங்கினர்.
லூசு பசங்க சைட் அடிக்கவே கல்யாணத்துக்கு வருவாங்க போல இருக்கு.இவங்கள சொல்லி என்ன பிரயோஜனம் அவள சொல்லனும் ஒரு சேரி கட்டிட்டு வந்திருந்த இப்படி பேசுவானுங்களா?நா பாத்து ரசிக்க வேண்டியத எவன் எவனோ பாக்கறான்.இவள,லட்டு.......எங்க இவ என்று சுற்றும் முற்றும் பார்க்க மாடியில் இருக்கும் அறை நோக்கி அவள் போவதை பார்த்தவன் தானும் அவள் பின்னாடியே சென்றான்.
தேங்காய் பழ பையை எடுக்க வந்தவள் கதவை யாரோ தாழ் போடும் சத்தம் கேட்டு யார் என்று வேகமாக திரும்பினாள்.
நான்தான்....நீ ஏன் இன்று புடவை கட்டவில்லை என்று கோபம் போல் கேட்டான்.