(Reading time: 36 - 72 minutes)

காலையில் எழுந்து மனைவியை தேடிய நகுல் அவளை காணாமல் கீழே சென்றான்.செல்லும் முன் ஒரு முறை கண்ணாடியை பார்த்துவிட்டு சென்று இருக்கலாம் விதி யாரை விட்டது.அம்மா காபி என்று அமர்ந்தவன் அப்பா தன்னை விசித்திரமாக பார்ப்பதை பார்த்து என்னப்பா அப்படி பார்க்கிறீர்கள் உங்கள் மகன் அவ்வளவு அழகாக இருக்கிறேனா என்று கண்ணடித்து சிரித்தான்.அவர் ஒன்றும் சொல்லாமல் கிண்டலாக சிரிப்பதை பார்த்து எதுக்கு பா சிரிக்கிறீங்க என்று கேட்டு கொண்டு இருக்கும் போதே நகுலுக்கு காபி எடுத்து கொண்டு வந்த சுந்தரி மகனை பார்த்து திகைத்து இது என்னடா கோலம் என்று கேட்டு சிரிக்க ஆரம்பித்தார்.

இவர்கள் என்ன சொல்கிறார்கள் புரியாமல் முழித்து கொண்டு இருந்தவனை பார்த்த அர்ஜூனுக்கும் சுதிக்கும்கூட அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.

டேய் முதலில் போய் கண்ணாடியை பார். அஜூ.

எதுக்கு?என்று கேள்வி கேட்டாலும் வேகமாக கண்ணாடியை சென்று பார்த்தவன் அதிர்ந்து போனான்.அடி பாவி நேத்து உன்ன பாத்து சிரிச்சதுக்கு இப்புடி மொத்த குடும்பமும் என்னை பார்த்து சிரிக்க வச்சிடியே என்று மனதில் நொந்து கொண்டவன் அங்கு இருந்தவர்களை பார்த்து அசடு வழிந்து விட்டு விறு விறுவென தன் அறைக்கு சென்று தன் முகத்தில் கீதா உதட்டின் அச்சு போல் லிப்ஸ்டிக்கில் ஒட்டி வைத்ததை சுத்தம் செய்தவன் தன் முகத்தில் அங்கு அங்கு ஒட்டி இருந்த மையையும் துடைத்து எடுத்தான்.

பாவி இத எல்லாம் எங்க இருந்துதான் யோசிச்சு செய்யறாலோ தெரியல.இப்புடி அப்பி வச்சிருக்கா. உண்மையாலுமே முத்தம் கொடுத்த மாதிரி வரைஞ்சிருக்கா மை எல்லாம் கூட அப்புடிதான் இருக்கு இவ வரையறது கூட தெரியாம தூங்கிய தன்னை நினைத்து வெட்க்கியவன் உனக்கு இருக்குடி என்று நினைத்து கொண்டே குளிக்க சென்றான்.

அவ பண்ண வேலைக்கு ஏதாவது சொல்லுவேன்னுதான் மகாராணி இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டா போல என்று அவனும் ஆபிஸ் கிளம்பினான்.

மாலையும் ஆபிஸில் இருந்து லேட்டாக வந்தவள்.அபியுடன் விளையாண்டுவிட்டு அவனுடனே படுத்து தூங்கிவிட்டாள்.அவளது அறையில் படுக்க சொல்லி எழுப்ப போன சுதி அவள் அசந்து தூங்குவதை பார்த்து அதிக வேலை போல என்று நினைத்து கொண்டு அவளை எழுப்பாமல் சென்றுவிட்டாள்.இப்படியே மூன்று நாட்கள் நகுலின் கண்ணில் படாமல் ஒழிந்து விளையாடியவளின் விளையாட்டை முடிக்கும் நேரமும் வந்தது.அவளது அம்மா ரூபத்தில்.

ஆபிஸில் கீதா வேலை செய்து கொண்டு இருக்கும் போது போன் செய்த கீதா சீக்கிரம் வீட்டிற்கு வா என்று கூறி போனை வைத்தாள்.யாருக்கு என்னாச்சு திடிர்னு போன் பண்ணி இப்படி வர சொல்கிறாளே என்று பயந்தவள் ஆபிஸில் லீவ் சொல்லிவிட்டு உடனே வீட்டிற்கு கிளம்பினாள்.

வீட்டிற்கு வந்த கீதா வள்ளி வந்திருப்பதை உணர்ந்து அம்மா என்று துள்ளி சென்று அவளை அணைத்து கொண்டாள். அவளை அணைத்து கொண்ட வள்ளியை கொஞ்ச நேரம் கொஞ்சியவள் அப்போதுதான் நினைவு வந்தவளாக சுதியை பார்த்து முறைத்தாள்.

என்னை எதுக்கு டி இப்ப முறைக்கற? சுதி.

அம்மா வந்திருக்காங்கனு சொல்ல வேண்டியது தானேடி.நீ உடனே போன கட் பண்ணவும்,நான் யாருக்கு என்னாச்சோனு பயந்து போய் ஓடி வந்தேன். கீதா.

அப்புடி கட் பண்ணுனதால தான் மேடம் இன்னைக்கு சீக்கிரம் வந்தீங்க.இல்லனா எப்ப பாரு வேல வேலனு இப்பலாம் நீ லேட்டா வந்து டயர்டுல சாப்படாம கூட தூங்கிற்ற அதனாலதான் அப்படி செஞ்சேன். சுதி.

ஹய்யோ நளன்கிட்ட இன்னைக்கு வசமா சிக்கிருவேன் போலவே என்று மனதுக்குள் புலம்பியவள்.சரி விடு கீது எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா என்று தன்னை தானே சமாளித்து கொண்டு வள்ளியுடன் பேச ஆரம்பித்தாள்.

நகுலனும் அன்று சீக்கிரம் வந்தவன்.கீதாவை நக்கலாக பார்த்து வைத்தான்.அவன் பார்வையே கீதாவிற்கு உணர்த்தியது இன்னைக்கு நீ வசமா மாட்டுனடி என்று.அவனின் மன ஓட்டத்தை உணர்ந்தவள் எப்படி தப்பிப்பது என்று திட்டமிட ஆரம்பித்தாள்.

இரவு உணவை அனைவரும் முடித்து படுக்க செல்லும் போது அபியை தாஜா செய்ய ஆரம்பித்தாள்.

அபி கண்ணா இன்னைக்கு நீ கீதாமா கூட படுத்துக்கிறீயா. நம்ம ரெண்டு பேரும் ஜாலியா வள்ளி பாட்டிக்கூட கதை கேட்டுக்கிட்டு தூங்கலாம். கீதா.

ஹோ மேடம் எஸ்கேப் ஆக அபியை கதைனு சொல்லி மயக்க பாக்கறாளா.சரியான ஆளுடி நீ யாருக்கு எது வீக் பாயிண்டுனு தெரிஞ்சு அத பாத்து அடிக்கற என்று மனதுக்குள் தன் மனைவியை மெச்சினாலும் அவள் அன்று செய்த வேலைக்கு அவளிடம் கொஞ்சமாவது விளையாட வேண்டுமே என்று யோசித்தவன் பாவமாக முகத்தை வைத்து கொண்டு தன் அண்ணனை பார்த்தான்.ஏதாவது உதவுடா அண்ணா என்று சைகையில் கேட்க பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதற்கு இணங்க அவனின் சைகையை சரியாக புரிந்து கொண்ட அர்ஜூன்.

இல்ல, கீது அபி இன்று எங்களுடனே படுக்கட்டும் நான் அவனுக்கு புது கதை சொல்வதாக சொல்லி இருந்தேன்.பாவம் அத்தை மாத்திரை போட்டதால் தூக்கம் வரும் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.நீ உன் அறையில் போய் படு காலையில் பேசி கொள்ளலாம் என்றவன் மகனை தூக்கி கொண்டு தங்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

ஹய்யோ இந்த ஆப்சனும் போச்சா.இவனை எப்படி சமாளிப்பது என்று யோசித்து கொண்டே மெதுவாக படிகளில் ஏறினாள்.எவ்வளவு மெதுவாக ஏறினாலும் செல்ல வேண்டிய இடம் வந்துதானே ஆகும் அவர்களது அறையும் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.