(Reading time: 36 - 72 minutes)

மெதுவாக அறையை திறந்து உள்ளே நுழைந்தவளை கதவின் பின் இருந்து அணைத்தான் அவளது கணவன்.

என்ன பண்றீங்க.கையை எடுங்க என்று கத்தியவளை கண்டு கொள்ளாமல் அவளை அப்படியே தூக்கியவன் கட்டிலில் சென்று உட்கார வைத்தான்.

என்ன மேடம் ரெண்டு,மூணு நாளா கண்ணுலயே படாம இருந்தீங்க இப்ப மாட்டிக்கிட்டமேனு தோணுதா. நகுல்.

அவனது பேச்சிலும் செயலிலும் பயந்து போய் இருந்தாலும் அதை வெளி காட்டாமல்.நான் என்ன தப்பு செஞ்சேன் உங்களிடம் இருந்து தப்பிக்க. கீதா.

ஹோ......மேடம் எந்த தப்பும் செய்யல? நகுலன்.

இல்லை.எனக்கு ஆபிஸில் வேலை அதிகம் அதனால் சீக்கிரம் வர முடியவில்லை.நீங்கள் என்னவென்றால் உங்களுக்கு பயந்து கொண்டுதான் நான் வரவில்லை என்று சொல்லுகிறீர்கள். நான் எதற்கு உங்களை பார்த்து பயப்படனும். கீதா.

நீ என் மேல் படம் வரைந்து வைத்தது தப்பு இல்லை அப்படிதானே. நகுல்.

ஆமாம்.உங்களால்தான் அன்னைக்கு எல்லாரும் என்னை பார்த்து சிரித்தார்கள்.அது போல் உங்களை பார்த்து சிரிக்க வைக்க நினைத்தேன்.இதில் என்ன தப்பு. கீதா.

அது தப்பு இல்லை பேபி.ஆனால் அது வரைந்தது என்று உனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும்.மற்றவர்களுக்கு அது எப்படி என் முகத்துக்கும் கழுத்துக்கும் வந்தது என்று கற்பனையில் நினைத்து பார்த்து இருப்பார்களே அது பரவாஇல்லையா. நகுல்.

அட கடவுளே...........அவனை அசிங்கபடுத்த வேண்டும் என்று தான் செய்த ஒரு செயல் தன்னையும் அசிங்க பட வைத்துவிட்டதே என்று தன்னையே நொந்து கொண்டவள்.ச்ச..... எப்புடி இதை யோசிக்காமல் போனேன் என்று தன் மூளையை கசக்கி கொண்டு இருக்க தனது கழுத்தில் சூடான மூச்சு காற்று படவும் தன்னிலை திரும்பியவள்.இப்போது நகுலை பயத்தோடு பார்த்தாள்.

அவர்கள் எப்படி கற்பனை செய்திருப்பார்கள் என்று நான் செய்து காட்டவா என்று அவளை மேலும் நெருங்கி வர கீதாவின் இதயம் தாளம் தப்பி துடிக்க ஆரம்பித்தது.பயத்தில் கண்களை இறுக மூடி கொண்டாள்.

கீதாவின் கண்களில் இருக்கும் அலைப்புறுதலை உணர்ந்தவன் அவளை சகஜமாக்கும் பொருட்டு ஒண்ணும் செய்யாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.வெகு நேரம் ஆகியும் எதுவும் நடக்காமல் இருக்கவும் கண்களை திறந்த கீதாவை பார்த்தவன் என் லட்டு கோவிச்சுக்குவா.அதனால இந்த முறை உன்னை விடுகிறேன்.இன்னொரு முறை இப்படி லூசுதனமாக செய்யாதே என்று கூறியவன் வேகமாக அவனது அறையில் இருக்கும் மற்றொரு அறைக்குள் புகுந்து கொண்டான்.

கீதாவை அவ்வளவு பக்கத்தில் பார்த்துவிட்டு தன்னுடைய உணர்வுகளை அடக்க முடியாமல் அவன் அந்த அறைக்கு சென்றான்.

கீதாவிற்குதான் மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது.அவனது செயல் அவளுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும் ஆனால் ஏதோ ஒரு ஏமாற்றம் தன்னை சூழ்வதை அவளால் தடுக்க முடியவில்லை.அதே சமயம் அந்த உணர்வு ஏன் என்றும் அவளால் அப்போது யோசிக்க முடியவில்லை.

இது போல் சின்ன சின்ன விளையாட்டுகளின் மூலம் கீதா நகுலனின் மேல் இருக்கும் தனக்கான உரிமையை காட்டி கொண்டு இருந்தாள் அவளையும் அறியாமல்.

இப்போது எல்லாம் கீதா நகுலனை கவனிக்க ஆரம்பித்தாள்.ஆறடி உயரத்தில் கோதுமை நிறத்தில் இருந்தவன் ஆணழகனாக இப்போதெல்லாம் அவள் கண்களுக்கு தெரிந்தான்.தன் தாய்,தந்தையிடம் நடந்து கொள்ளும் முறை. அவளிடம் காட்டும் அக்கறை.அவளிடம் அவன் செய்யும் சீண்டல்கள் என்று சின்ன சின்ன விஷயங்களிலும் கணவனாக கீதாவை ஈர்த்தான்.ஆனால் இது காதல்தான் என்பதை அவள் அறிந்து கொள்ள வேண்டிய சமயம் விரைவில் வந்தது.

தன் தோழியின் திருமணத்திற்கு போக வேண்டும் என்று கீதா சொல்லி கொண்டு இருந்தாள்.அங்குதான் அவளின் காதலை அறிய போவதை அறியாமல்.

நகுலன்,நகுலன்......கீதா.

ஸ்.....ப்ப்பா...எதுக்கு பேபி இப்படி கத்துற. நகுலன்.

நான் உங்களை எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்.பேபினு சொல்லாதீங்கனு ஆபிஸ்லயும் எல்லாரும் என்னை சின்ன புள்ள போய் லாலிபாப் வாங்கி சாப்புடு.உன்னை கட்டிக்கிட்ட அந்த மனுசன்தான் பாவம்னு சொல்றாங்க.நீங்களும் பேபினு சொல்றீங்க.எனக்கு இருபத்தி இரண்டு வயசு ஆகுது இனிமே அப்படி கூப்பிடாதீங்க.

நீ பேபியா இல்லையானு நான் கன்பார்ம் பண்ணி பாத்துட்டுதான் ஒத்துக்குவேன்.நீ சொல்வது எல்லாம் ஒத்து கொள்ள முடியாது.

அதுக்காக என்னோட பர்த் சர்ட்டிபிகேட் கொண்டு வந்து காட்டவா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.