(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - தாரிகை - 24 - மதி நிலா

series1/thaarigai

னக்காயம் போலல்லாமல் தாரிகையின் உடல் காயங்கள் யாவும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக்கொண்டு வந்தது என்றே சொல்லலாம்..!!

முன்பிருந்த குறும்புத்தனங்கள் அனைத்தும் காற்றோடு கலந்திருக்க மனது இறுகிப்போயிருந்தது..!!

மாமானிடம் வம்புகள் செய்து வால்ப்பிடித்தபடியே திரியும் எண்ணமெல்லாம் மொத்தமாக வடிந்து புதிதாய் காட்சியளித்தவளைக் காணும்பொழுது வேறு யாரோ என்பதுபோல் ஒரு மாயை..!!

தந்தையிடம் வழக்கம்போலவே பேச முயற்சித்தாலும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஒதுக்கம் கண்க்கூடாய்..!! பரத்வாஜிற்கு அது பெரியதொரு மனக்காயத்தையே உண்டு செய்திருந்தது..!! தாரிகையிடமே அதைப்பற்றி கேட்டும் விட்டார் அவர்..!!

“ப்பா.. நெஜமாவே நான் ஏன் இப்படி பீகேவ் பண்றேன்னு எனக்கே சுத்தமா தெரியல.. நார்மலா பேசணும்னுதான் ட்ரைப் பண்றேன்.. பட் என்னவோ ஐ ஆம் ஸ்டக்..”, என்றவளிடம் அதற்கு மேல் என்ன பேசுவதாம்..??

ஒருவேளை கீதாஞ்சலி அவளுடன் நார்மலாக இருந்திருந்தால் இந்த தயக்கம் ஒதுக்கம் எல்லாம் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நிலைமையோ இப்பொழுது தலைகீழ் அல்லவா..??

தாரிகையின் மீது மனது முழுவதும் பாசம் இருந்தபொழுதிலும் அவளது இந்த மாற்றங்கள் எல்லாம் தாயாக ஏமாற்றங்களாய்..!! வெளியே தலைக்காட்டிட முடியாதென்ற எண்ணமும் கூடவே சேர்ந்துகொள்ள மொத்தமாய் அவளைத் தவிர்த்திருந்தார் கீதா..!!

வெளியே சென்றால் அனைவரும் தன்னையே கேலி செய்து தூற்றுவதுபோல் பிம்பம் தானாகவே உருவாகியிருக்க உடன்பிறப்பின் வீட்டிற்குக்கூடப் போக மனதில்லை அவருக்கு..!! எங்கே அங்கு சென்றால் தாரிகையைப் பற்றி அவர்கள் கேள்விகள் எழுப்பி தன்னை தலைகுனிய செய்துவிடுவார்களோ என்ற பயம்..!!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எல்லாவற்றிற்கும் மேலாக சொந்தங்கள்..!! அவர்கள் கேட்கும் கேள்விகள்..!! பார்க்கும் பார்வைகள்..!! சுத்தமாக இவை எதையும் நினைத்துக்கூடப் பார்த்திடமுடியவில்லை அவருக்கு..!!

அனைத்தும்.. அனைத்துமே சிதைந்துவிட்டதுபோல்..!!

ஒரே வீட்டில் இருந்தாலும் என்னவோ அவருக்கு தாரிகையை சென்று பார்த்திடும் ஆசை எழவே இல்லை..!! தரண்யன் என்பவன் மரணத்தைத் தழுவிவிட்டான் என்று தனது மனதிற்குள் உருபோட்டுக்கொண்டிருந்தார் அவர்..!!

தாரிகை அவருடன் பேச முயற்சித்தாள் தான்..!! என்னதான் இருந்தாலும் தனது தாய் அல்லவா..?? அவர் தன்னைவிட்டு தூரம் தள்ளிப்போனாலும் அவரிடம் ஒதுங்கிப்போக முடியவில்லை அவளுக்கு..!!

அவர் தன்னுடன் பேசவேண்டும் என்று நினைத்திடவில்லை அவள்.. வெறுமனே தன்னருகில் அமர்ந்திருந்தால் போதும் என்ற நினைப்பு மட்டுமே..!! ஆனால் அதற்கும் பஞ்சம் இங்கே..!!

மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நேரத்தைவிட உடலும் மனதும் சோர்ந்திருக்கும் நேரத்தில் ஒரு மகனுக்கோ மகளுக்கோ தாயின் அரவணைப்பு என்பது எந்த வயதாயினும் அவசியம் அல்லவா..??

தாரிகை வீட்டை அடைந்தவுடன் ஒரு அறைக்குள் தஞ்சம் புகுந்தவர்தான்.. இன்னும் அதைவிட்டு வெளியே வந்திருக்கவில்லை..!!

நிஷா தாரிகைக்குத் துணையிருக்க அனைத்தையுமே வெற்றியும் பரத்வாஜுமே செய்துகொண்டிருந்தனர்..!!

அரசல்புரசலாக விஷயங்களைத் தெரிந்துகொண்டும் அதைத் திரித்துக்கொண்டும் அக்கம்பக்கம் எல்லாம் லேசாக முணுமுணுக்கத் தொடங்கிவிட்டதுதான்..!! பரிதாபம் இகழ்ச்சி அருவருப்பு என அனைத்தும் கலந்த முணுமுணுப்புக்கள்..!!

பால்க்காரன் முதல் கடைக்காரன் வரை அனைவருமே இவர்களிடம் இடைவெளி ஏற்படுத்தியிருந்தனர்..!!

என்னவோ தீண்டக்கூடாது நோயொன்று இவர்கள் வீட்டினரின் மீது தீண்டிவிட்டதுபோல் இருந்தது அனைவரின் செய்கைகளும்..!!

சுற்றி நடப்பவைகளைக் கண்டிடும்பொழுது வேதனைக்கு பதில் இறுக்கமே அனைவருக்குள்ளும் தோன்றுவதாய்..!!

தாரிகைக்கு ஏற்பட்டிருப்பது நோயல்லை இயற்கை கொடுத்திருக்கும் வரமென்று எதைக்கொண்டு நிருபிப்பதாம் அனைவருக்கும்..??

இது எல்லாவற்றிற்கும் உச்சமாய் சிலர் வேடிக்கை பார்க்கவென வீடு நோக்கி படையெடுக்க தாரிகையின் பொறுமை இல்லை கடக்கத் துவங்கியிருந்தது..!!

வெற்றிதான் சிறிது நாட்கள் வெளியே எங்கேயாவது சென்று வரலாம் என்று சொல்ல.. நிஷாவின் பெற்றோர்களைத் தேடி இவர்களது பயணம்..!!

கீதாஞ்சலிக்கு இதில் உடன்பாடு என்பது சுத்தமாக இல்லைதான்.. இருந்தும் மற்றவர்களின் சொற்களிலிருந்து தப்பிக்க கிளம்பியிருந்தார்..!!

நிஷாவின் குரல் மட்டுமே காரில் இன்னிசையைப் பினைந்துகொண்டிருக்க..!! தாரிகையின் முகமோ அன்னையின் முகத்தை எதிர்பார்ப்பில் பார்த்தபடி..!!

சேலத்துப்பயணம் மாற்றங்களுக்கு வித்திடுமா..??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.