(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 04 - ஸ்ரீ

Unnaale naan vazhgiren

உலகம் சதுரம் என்றே இருந்தேன்

சுவர்கள் என்று பின்பே அறிந்தேன்

 

உலகின் விளிம்பை உரசும் பயணம் போகிறேன்

என்னை நீங்கி எங்கோ பிரிந்தேன்

 

நானே இல்லா வாழ்வில் தெரிந்தேன்

இன்றே முழுதாய் வாழும் முடிவில் போகிறேன்

 

என் பலம் மூடிய இருளைத் தேடி எரிப்பவளாகிறேன்

ஓர் சூரியன் ஜோதியில் தீயை வளர்த்திட போகிறேன்

 

போகிறேன் நான் போகிறேன்

போகிறேன் நான் போகிறேன்

 

சிறகுகள் வீசி சுந்திர ஆசையில்

போகிறேன் நான் போகிறேன்

உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட

போகிறேன் போகிறேன்

சில நிமிடங்களுக்கு ஒன்றும் புரியாதவளாய் அமர்ந்திருந்தவள் பின் எழுந்து சென்று உணவு உண்ண அமர்ந்தாள்.ஸ்ரீகாந்தின் தாய் சாதாரணமாகவே அவளிடம் நடந்து கொண்டார்.மதுவிற்குத் தான் ஒன்றும் புரியவில்லை.அமைதியாய் சாப்பிட்டு எழுந்தவள் தங்களறைக்குச் செல்ல சிறிது நேரத்தில் வந்த ஸ்ரீகாந்த் அவளை பின்னிருந்து அணைத்தான்.

அவளிடம் எந்த வித்தியாசமும் இல்லாததை உணர்ந்து அவளை தன்புறம் திருப்பியவன் அவளின் கலங்கிய கண்களை கண்டு பயந்து விட்டான்.

“ஹே மது என்னாச்சு ஏன் அழற?”

“…”

“என்னனு சொல்லு சொன்னாதான தெரியும்..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தயக்கமாய் நடந்ததை அவனிடம் கூறியவள் கண்களைத் துடைத்துக் கொள்ள அவளை கட்டிலில் அமர்த்தியவன் அருகில் அமர்ந்து அவள் கைகளை தனக்குள் வைத்துக் கொண்டான்.

“இங்க பாரு மது நீ இந்த வீட்டுக்கு புதுசு..யாரு எப்படினு புரிஞ்சுக்க கொஞ்சம் நேரம் ஆகும்..எங்கம்மா எப்பவுமே அப்படிதான் ஒரு விஷயத்தை அப்போவே முடிக்கணும்னு நினைப்பாங்க அதனால அதை கொண்டு வந்து உன்கிட்ட கொடுத்துருப்பாங்களா இருக்கும்.

நீ  தனியாவே வளர்ந்தவ இல்லையா அதனால சட்டுனு அவங்க சொன்னது உனக்கு வேற மாதிரி பட்டுருக்கும். நீயும் இந்த வீட்ல ஒருத்தி தான் மதும்மா..அவங்க என் தங்கச்சிகிட்ட நடந்துக்குற மாதிரியே உன்ட்டயும் நடந்துருப்பாங்க வேற ஒண்ணுமில்ல இதுக்கு போய் சின்ன குழந்தைமாதிரி அழலாமா..சியர் அப்டா..”

அவனின் சமாதானத்தில் சற்றே தெளிந்தவளாய் சம்மதமாய் தலையசைத்தாள்.

“த்ர்ட்ஸ் மை கேர்ள்”,என்றவன் தன்னவளை கையணைப்பில் கொண்டு வந்திருந்தான்.

மறுநாள் காலை சிறிது தாமதமாய் எழுந்தவள் குளித்துத் தயாராகி கிட்சனிற்குச் செல்ல அவளது மாமியார் அவளிடம்,

“என்னம்மா மது எப்பவுமே இவ்ளோ லேட்டா தான் எழுந்துப்பியா..இப்போ லீவ் சரியா போச்சு நாளைக்கு ரெண்டு பேரும் ஆபீஸ் போக ஆரம்பிச்ச அப்பறம் இப்படியிருந்தா எப்படி?”

“இல்ல அத்தை அதெல்லாம் சீக்கிரம் எழுந்துருவேன்..”

“ம்ம் சரி சரி இந்தா காபி எடுத்துக்கோ அவனுக்கும் கொண்டுபோய் குடு..”

தப்பித்தால் போதுமென அறைக்குள் சென்றவள் கணவனை எழுப்பி காபியை கொடுத்துவிட்டு அவர்களுக்கு சமையலில் உதவி செய்ய மீண்டும் சமையலறைக்குச் சென்றாள்.

அன்றைய பொழுது அப்படி இப்படியாய் கழிய மாலையில் அனைவருமாய் எக்மோருக்கு கிளம்பிச் சென்றனர்.

ஸ்ரீகாந்த் அவளிடம் எதோ பேசியவாறே வர அவ்வப்போது அவர்களின் பேச்சின் நடுவில் சம்மந்தமே இல்லாமல் எதையாவது பேசியவாறே அவன் அம்மா சலசலத்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீகாந்திற்கு அது புரிந்தாலும் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் வந்து கொண்டிருந்தான்.அதைப் பார்த்த மதுவிற்கு அவளின் கோபம் இன்னுமாய் அதிகரித்தது.அவளாகவே அவனிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்.

மறுநாள் வீட்டிற்குச் சென்றிறங்கிய நொடி முதல் சொந்தம் பந்தம் அக்கம் பக்கத்தார் என ஒருவர் மாற்றி ஒருவர் நாள் மொத்தமும் வந்து கொண்டிருந்தனர்.

வந்தவர்கள் சும்மா இல்லாமல் எதோ ஒன்றை எதார்த்தமாய் கூறுகிறேன் பேர் வழியென மதுவை கடுப்பேற்றிச் சென்றனர்.சரியாய் அந்நேரம் வைரவன் அவளுக்கு போன் செய்ய தங்களறைக்குச் சென்றவளுக்கு சட்டென கண்கள் குளமாகியிருந்தது.

“ப்..பா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.