(Reading time: 14 - 27 minutes)

ஆனா லேடிஸ் அவங்களுக்கும் சேர்த்து ஆயிரம் யோசிப்பாங்க..அதுல கல்யாணத்துக்கு முன்னாடி வரை அம்மா மட்டுமே பண்ணின அந்த வேலையை அவங்களை விட கொஞ்சம் சிரத்தையா பொண்டாட்டிங்க செய்வாங்க..அப்போ ஆரம்பிக்குது ஆம்பளைங்களுக்கு பிரச்சனை..”,என்றவள் மீண்டும் சிரித்தாள்.

“ஏன் டீ இத்தனை தெளிவா இவ்ளோ பேசுற அப்பறம் எதுக்கு நடுராத்திரில உக்காந்து அழுதுட்டு இருந்த??”

“அதுக்கு காரணம் இப்போ நாம இப்படி மனசுவிட்டு பேசுறமாதிரி இதுவரை பேசினதில்லையே அதான்..இப்போ நீங்க சொல்லி தான் அவங்க நேச்சர் இது இல்ல..ஏன் இப்படி நடந்துக்குறாங்கனு உங்களுக்கே தெரிலனு எனக்கு தெரியுது..

நீங்க ஏன்கிட்ட கோபபட்டதுல நா என்ன நினைச்சுட்டேன்..என் மேல தப்பே இல்லைனாலும் உங்கம்மாக்காக நா தான் திட்டு வாங்கனும்னு தான் யோசிச்சேன்..அதான் அழுகை வந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதுமட்டுமில்லாம ஒரு மாதிரி அன்கம்போர்டபில் ஃபீல் இத்தனை சொந்தகாரங்க புது ஊரு உங்களோடயும் அவ்வளவா பேச முடில எல்லாம் சேர்ந்துதான் ஒரு மாதிரி ஆய்டுச்சு..”

“மது நீ ரொம்ப இன்டிபெண்டன்ட் பொண்ணுனு தெரியும் ஆனா இத்தனை ப்ராக்டிகலா லைஃபை எடுத்துக்குறவனு இப்போ தான் புரியுது.என் அம்மாவை பத்தி நானே விட்டுகொடுத்து பேசினவுடனே இதான் வாய்ப்புனு உன் பங்குக்கு அவங்களை குறை சொல்லாம எதார்த்தத்தை புரிஞ்சுக்குற பாரு..நிஜமா இது எல்லாருக்கும் வராது.. லவ் யூ டீ பொண்டாட்டி.”

“ம்ம் ஐஸ் எல்லாம் நல்லா வைக்குறீங்க..கொஞ்சமே கொஞ்சம் என் புருஷனை லவ் பண்றதுனால தான் அவர் சைட் பாயிண்டையும் யோசிக்க வேண்டியாதா இருக்கு..”

“ஓகோ அப்படியா கொஞ்சமா??”,என்றவன் அவளை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தான்.

மறுநாள் காலை உணவு பரிமாறிக் கொண்டிருந்த தாயை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான் ஸ்ரீகாந்த்.மதுவிற்கோ பயமாக இருந்தது என்ன சொன்னால் என்ன பிரச்சனை வருமோ என வாயை மூடிக் கொண்டாள்.

அதன்பின் ஸ்ரீகாந்தும் அவன் தந்தையுமாய் சமையலறைக்குள் சென்று கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாய் அவரை வழிக்குக் கொண்டு வந்திருந்தனர்.

அப்படி இப்படியாய் மாலை வரை பொழுதை கழித்தவர்கள் இரவு ட்ரெயினிற்காக இரயில் நிலையத்தை அடைந்தனர்.

மதுவிற்கு அப்போது தான் இயற்கையாய் மூச்சு விடவே முடிந்ததை போன்ற உணர்வு.அவர்கள் வந்த சற்று நேரத்தில் மரகதமும் வைரவனும் அங்கு வர ஸ்ரீகாந்தின் தாயார் அவர்களிடமும் குறைப்பட்டார்.

“ஐயோ சம்மந்தி இதுல சொல்ல கூடாதுனு எல்லாம் ஒண்ணுமில்ல..இதைபத்தின பேச்சு வராததுனால சொல்லாம இருந்துட்டோம்..நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க..”

“ச்சச்ச என்ன அண்ணே இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு சொல்லிருக்கலாமேனு மனசுல பட்டதை சொன்னேன் வேற ஒண்ணுமில்ல..எல்லாரும் பார்த்து போய்ட்டு வாங்க வீட்டுக்கு போனதும் போன் பண்ணுங்க..”

என்றவர் அன்பு மழையை பொழிய மதுவோ சிரிப்பை அடக்குவதற்கு பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரு வழியாய் சென்னையை அடைந்தவர்கள் அடுத்த இரு தினங்களில் தேனிலவுக்காக தயாராக வேண்டியிருந்தது.அடுத்து அந்த வேலைகளை கவனித்து வீட்டை ஓரளவு சீரமைத்து என புதுமண தம்பதிகளுக்கே உரிய ப்ரத்யேக நேரங்களாய் கழிந்தன.

தேனிலவும் இருவருக்கும் இனிமையாகவே கழிந்தது.ஓரளவு இருவருமே மற்றவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்திருந்தனர்.ஸ்ரீகாந்திற்கு மதுவின் பக்குவ குணம் நிறையவே பிடித்திருந்தது.

மதுவிற்கும் ஸ்ரீகாந்தின் அமைதியான குணமும் இன்னொசென்ஸும் அவனுக்காக எதையும் பொறுத்துக் கொள்ளலாம் என எண்ண வைத்திருந்தது.

இப்படியான பதினைந்து நாட்கள் விடுமுறை முடிந்து இருவருமே அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தனர்.இதுவரையிலான பதினைந்து தினங்கள் உண்மையான நடைமுறை வாழ்க்கை இல்லை என்பதை அடுத்து வந்த மூன்றே தினங்களில் இருவரும் உணர்ந்திருந்தனர்.

Episode # 03

Episode # 05

தொடரும்!

{kunena_discuss:1240}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.