(Reading time: 14 - 27 minutes)

“ஸ்ரீகா ஏதோ கோவத்தை என் மேல காட்டாதீங்க..அவங்க கேட்டாங்க நா சொன்னேன் இதுல இப்படி ஒரு அங்கிள் இருக்கும்னு எனக்கு என்னத் தெரியும்..ரொம்ப சில்லி யா இருக்கு..”

“ஆமா இங்க எல்லாரும் அல்பமா தான் இருப்பாங்க உங்க அளவு எல்லாம் யாரும் வர முடியாது போய் தூங்கு போ..”,என்றவன் முகத்தை திருப்பிக் கொண்டு படுத்துக் கொண்டான்.

நடு இரவில் சற்றே தூக்கம் கலைந்தவன் எங்கோ விசும்பல் சத்தம் கேட்க மெதுவாய் எழுந்தமர்ந்தான். மது அங்கிருந்த சேரில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

“மது!!!!”

“…”

“ஹே ஏதோ கோவத்துல பேசிட்டேன் சாரி டா..என் நிலைமையையும் பார்த்த இல்ல..அவங்க அப்படியெல்லாம் நடந்துக்குற ஆளே இல்லை..ஏன் இப்படி பண்றாங்கனும் தெரில..நீ சொல்லலனாலும் நாலுநாளா நானே பாத்துட்டுதான் இருக்கேன்..

உன்கிட்ட ஏதோ அவங்க அத்தாரிடிவ் பெர்சன் மாதிரி பிகேவ் பண்றாங்க..அப்பப்போ எதாவது சொல்றாங்க..சத்தியமா இது அவங்க குணம் கிடையாது..ஏதோ ஒண்ணு அவங்களை போட்டு குழப்பிட்டு இருக்கு..”

“எனக்குத் தெரியும் அது ஒரு விதமான இன்செக்யூரிட்டி பீலிங்க்..”

“என்ன சொல்ற மது??”

“ஆமா ஸ்ரீகா அது பையனை பெத்த எல்லா அம்மாக்களும் பல நேரத்துல ஏற்படுற விஷயம்தானு படிச்சுருக்கேன்.இவ்ளோ வருஷமா உங்க வாழ்க்கையில் இருந்த முக்கியமான பெண்னு பாத்தா அது உங்க அம்மா மட்டும்தான்.அவங்க கூட இருந்தாலும் தூரமா இருந்தாலும் நீங்க அவங்க புள்ள தான்.

ஆனா இப்போ நீங்க என் புருஷன்.உங்களை மட்டுமே நம்பி வந்துருக்குற ஒருத்தி நா..அதுக்காக அவங்களோட இடம் மாறப் போறதில்ல..அதே நேரம் உன் மனசுல அவங்க இடத்தை எனக்கு பங்கு போட்டு கொடுக்க விரும்பல..அதுதான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம்.”

“சத்தியமா எனக்கு ஒண்ணும் புரில..இதெல்லாம் டீவி சீரியல்ல தான் பாத்துருக்கேன்.அவ்ளோ ஏன் எங்கம்மாவே கூட சொல்லுவாங்க நாளைக்கு எனக்கு மருமக வந்தா நா இப்படியெல்லாம் இருக்க மாட்டேன்டானு..”

“சொல்றது எப்பவும் ஈஸி தான் செய்ல்படுத்துறது தான் கஷ்டமே.இந்த மாற்றமெல்லாம் இந்த நாலு நாள்ல வந்தது கிடையாது நம்ம நிச்சயதார்த்தத்துக்கு அப்பறம் நம்ம ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சதுல இருந்து வந்ததா தான் இருக்கும்.

உங்களை அறியாமையே சில விஷயங்கள்ல என்னை முன்னிருத்தி பேசிருப்பீங்க..அது எதார்த்தமா நடந்துருக்கும் ஆனா அதை அவங்க பாக்குற கண்ணோட்டம் வேறமாதிரி இருக்கும்.

அதுமட்டுமில்லாம நேத்தும் இன்னைக்கும் நா பார்த்தத வச்சு சொல்றேன்..உங்க ரிலேட்வ்ஸ்ல நிறைய பேர் அவங்களை நல்லா குழப்பி விடுவாங்கனு தான் தோணுது..யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பல ஆனா தேவையில்லாத போதனைகள் அளவுக்கு அதிகமாவே கிடைக்குது அவங்களுக்கு..

நேத்து என் காதுபடவே ஒருத்தங்க சொல்றாங்க..உன் மருமக பொண்ணு கொடுத்து வச்சவ உள்ளூர்ல அம்மா வீடும் வெளியூர்ல மாமியார் வீடும்னு அமைஞ்சுருச்சு..ஒரே பொண்ணுனு வேற சொல்ற இனி அந்த வீட்டோட பொறுப்பும் உன் புள்ளை தலையில தான்னு..

எனக்கு எவ்ளோ கடுப்பாகும் சொல்லுங்க..உங்க அப்பா அம்மாவ பாத்துக்க வேண்டியது என் கடமைனா என் பேரண்ட்ஸை பாத்துக்க வேண்டியதும் உங்க கடமை தான..அதை என்னவோ பெருசா நக்கல் பண்ணி பேசுறாங்க..இன்னும் எந்த காலத்துல இருக்காங்க எல்லாரும்..உண்மையை சொல்லணும்னா எப்போ டா சென்னை கிளம்புவோம்னு இருக்கு எனக்கு..”

“கடவுளே கல்யாணம்னா இத்தனை பிரச்சனையை சமாளிக்கனுமா!!இந்த பொம்பளைங்களே இப்படிதான் போல எதையாவது வச்சு சண்டைக்காகவே அலையுவாங்க போலயே..”

“ஹலோ பொம்பளைங்கனு பொதுவா சொல்லாதீங்க..நா எங்க அம்மா எல்லாம் சத்தியமா இப்படி கிடையாது..”

“அதான பாத்தியா ஒரு பேச்சுக்கு சொல்ற விஷயத்தை கூட உன்னால ஏத்துக்க முடியுதா பாரு..நல்ல வேளை ஜாயிண்ட் பேமிலியா எல்லாம் இல்ல..என் நிலைமை அதோ கதி தான்..”

அவன் கூறிய விதத்தில் லேசாய் சிரித்தவள்,”அது என்னவோ உண்மைதான்..எங்கப்பாவை பார்க்கும் போதே அது தோணும்..இப்போ உங்களையும் மாமாவையும் பார்க்கும் போது ரொம்பவே தோணுது..”

“என் நிலைமை உனக்கு சிரிப்பா இருக்கா??”

“கொஞ்சம் அப்படிதான்..ஆனா பாவம்னு தான் ரொம்ப தோணுது..என்னை பொறுத்த வரைக்கும் பொதுவாவே பெண்களுக்கு தன் வீட்ல இருக்குற சில சலுகைகள் ஆண்களுக்கு இருக்குறதில்ல.

இப்போ நடந்த விஷயத்தையே எடுத்துக்கோங்க..இதே இந்த இடத்துல என் அம்மா இருந்துருந்தா நா பட்டுனு பதில் பேசிருப்பேன்..எனக்கு கல்யாணம் ஆனதுனால தான் அப்படி பேசுறேன்னு எல்லாம் சொல்ல மாட்டாங்க..

ஆனா நீங்க சாதாரணமா பேசுறது கூட தப்பா தான் தெரியுது..உண்மையில் சொல்லப் போனா ஆண்கள் எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி தான் இருப்பாங்க..பொறுப்பில்லாம,யார் என்ன பேசுறாங்க என்ன அர்த்தத்துல பேசுறாங்கனு எல்லாம் கண்டுபிடிக்காம அவங்க போக்குல இருப்பாங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.